search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசியில் வியாபாரி வீட்டில் ரூ.25 லட்சம் நகை, பணம் கொள்ளை -  கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர வேட்டை
    X

    பீரோக்களை ஆய்வு செய்தனர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், விசாரனை மேற்கொண்ட காட்சி.

    அவினாசியில் வியாபாரி வீட்டில் ரூ.25 லட்சம் நகை, பணம் கொள்ளை - கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர வேட்டை

    • வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளது.
    • 6 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அரசு மருத்துவமனை எதிரே ராஜாஜி வீதியில் வசிப்பவர் அப்துல்வகாப் (வயது52). இவருக்கு திருமணமாகி ரோஜா (48) என்ற மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் திருமுருகன்பூண்டியில் மளிகை கடையும், திருப்பூரில் ஸ்டேசனரி கடையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள இவரது உறவினர் துக்க நிகழ்வுக்கு வீட்டை பூட்டிவிட்டு கடந்த 3-ந் தேதி குடும்பத்துடன் மைசூர் சென்றுவிட்டார். நேற்று மாலை 6 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளது.

    உள்ளே சென்று பார்த்தபோது மர பீரோ உள்ளிட்ட 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த 60 பவுன் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணம் ரூ. 6 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும். தகவலறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, சசாங் சாய், அவினாசி போலீஸ் துணை சூப்பிரண்டு பவுல்ராஜ், இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரனை மேற்கொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வீட்டு உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டார்.

    கொள்ளை நடந்த வீதியில் தெருவிளக்குகள் எதுவும் எரியவில்லை. நள்ளிரவு 1.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கொள்ளை நடந்த வீட்டிற்கு சிறிது தொலைவில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அந்த வீதியில் சுற்றியதாக அப்பகுதியை சேர்ந்த ஒருவர்தெரிவித்தார். அதனை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    Next Story
    ×