search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Case registration"

    • காரைக்கால் நகர் பகுதியான திருநள்ளாறு சாலை, நகராட்சி வாரச்சந்தை அருகே, பஸ் அதிவேகமாக வந்தது.
    • இதில், மாற்றுத்திறனாளி, அருகில் இருந்த வாய்க்காலில் விழுந்து காயம் அடைந்தார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் பகுதியில் இருந்து, காரைக்கால் பஸ் நிலையம் நோக்கி, 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு, தனியார் பஸ் ஒன்று, அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. காரைக்கால் நகர் பகுதியான திருநள்ளாறு சாலை, நகராட்சி வாரச்சந்தை அருகே, பஸ் அதிவேகமாக வந்தது. அப்போது, பஸ்சின் முன்புறம் ஸ்டேரிங் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் அங்கும்மிங்கும் அலைந்து, சாலையில் சென்ற காரைக்கால் பச்சூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவரது 3 சக்கர வாகனத்தில் மோதி, தொடர்ந்து, சாலையோரம் உள்ள மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில், மாற்றுத்திறனாளி, அருகில் இருந்த வாய்க்காலில் விழுந்து காயம் அடைந்தார். அதேபோல், பஸ்சில் இருந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக சேர்த்தனர். தொடர்ந்து, இது குறித்து, காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியார் பஸ் டிரைவர் காரைக்காலை அடுத்த அண்டூர் கிராமத்தை சேர்ந்த விஜய் (வயது 26) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்றிரவு பெரியசாமி தனது மனைவியுடன் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்றார்.
    • நின்ற கொண்டிருந்த அவரது மனைவி அம்காபதி கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள மேல்வலையாமூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் பெரியசாமி(வயது45), விவசாயி. இவரது மனைவி அம்பிகாபதி(45). இவர்களுக்கு 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். நேற்றிரவு பெரியசாமி தனது மனைவியுடன் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்றார். பின்னர் அங்குள்ள மோட்டாரை இயக்கி உள்ளார். இதில் மின்கசிவு ஏற்பட்டு அவரை மின்சாரம் தாக்கியது. அப்போது அருகில் நின்ற கொண்டிருந்த அவரது மனைவி அம்காபதி கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார். இதனால் அவரையும் மின்சாரம் தாக்கியது. தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் இருந்தனர்.
    • ஏராளமான பாக்கெட்குட்காக்களை பறிமுதல் செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி புதுப்பேட்டை பகுதியில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போதுபுதுப்பேட்டை அடுத்த கொத்தி கிராமத்தில் பெட்டிக்கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டகுட்கா விற்பனை செய்தது தெரியவந்தது இதனை தொடர்ந்து ஜோதிலட்சுமி (39) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஏராளமான பாக்கெட்குட்காக்களை பறிமுதல் செய்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • இவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசும்போது இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
    • இதனால்காயமடைந்த கோவிந்தன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே எல்.என்.புரத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 56), காய்கறி வியாபாரி. அதேபகுதியை சேர்ந்தவர்கள் குமரன் (வயது42),ராஜா(வயது 40). அண்ணன் தம்பி. இவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசும்போது இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது கோவிந்தன்அதே பகுதியில் இருந்த ஓட்டல் ஒன்றுக்கு சாப்பிட சென்று உள்ளார்.

    ஹோட்டலுக்கு வந்த அண்ணன் தம்பி குமரன், ராஜா இருவரும் கோவிந்தனை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால்காயமடைந்த கோவிந்தன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து கோவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு வழக்கு பதிவு செய்து குமரன் , ராஜா ஆகியோரை வலை வீசி தேடி வருகிறார்

    • வடலூரில் காரில் மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • ஒரு காரை மடக்கி பிடித்து விசாரித்த போது காரில் மதுபாட்டில் கடத்தப்பட்டது தெரிய வந்தது.

    கடலூர்:

    வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா உத்தர வின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் மாசிலா மணி, வடலூர் நான்கு முனை சந்திப்பில் வாகனம் தணிக்கையில் ஈடுபட்ட போது கடலூரிலிருந்து வடலூர் நோக்கி வந்த ஒரு காரை மடக்கி பிடித்து விசாரித்த போது காரில் மதுபாட்டில் கடத்தப்பட்டது தெரிய வந்தது. விசார ணையில் காரை ஓட்டி வந்தவர் தஞ்சாவூர் பேங்க் ஸ்டாப் யூனியன் காலனி யைச் சேர்ந்த நெடுமாறன் மகன் சர்வேஷ் (23) என்பது தெரிய வந்தது. இவர் 4 மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை யொட்டி வழக்கு பதிவுசெய்து சர்வேசை கைது செய்தனர்.

    • கடந்த 17-ந் தேதி மாமனார் வீட்டில் நடந்த தகராறில் தாக்கப்பட்டதாக கூறி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த கீழ் மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிகாமணி. இவரது மகன் ராஜசேகர் (வயது 32). இவர் கடந்த 17-ந் தேதி மாமனார் வீட்டில் நடந்த தகராறில் தாக்கப்பட்டதாக கூறி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இவரது தந்தை சிகாமணி இவருக்கு டீ வாங்கி வருவதற்காக எதிரே உள்ள டீ கடைக்கு சென்று டீ வாங்கி வந்தார்.

    திரும்பி வந்து பார்த்தபோது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மகனை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரசன்னா வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ராஜசேகரை தேடி வருகிறார்.

    • கைப்பையில் வைத்து தனது ஊருக்கு செல்வதற்காக தனியார் பஸ்சில் ஏறினார்.
    • 2பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றது தெரியவந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி செங்கமேட்டை சேர்ந்தவர் ஆபரணம் (வயது 47). இவர் அடகு வைத்த 2 பவுன் தங்க நகையை மீட்டு தனது கட்டப்பைக்குள் கைப்பையில் வைத்து தனது ஊருக்கு செல்வதற்காக தனியார் பஸ்சில் ஏறினார்.

    பின்னர் கட்டப்பையை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. இதில் கைப்பை மற்றும் அதிலிருந்து 2பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ஆகும். இது குறித்து திட்டக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • இந்த கொடிக்கம்பத்தில் இருந்த கொடியை மட்டும் மர்ம நபர்கள் நேற்று இரவு அறுத்து சென்று விட்டனர்.
    • மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே கூனிமேடு பஸ் நிறுத்தம் அருகில் பா.ஜ.க. கொடிக்கம்பம் உள்ளது. இந்த கொடிக்கம்பத்தில் இருந்த கொடியை மட்டும் மர்ம நபர்கள் நேற்று இரவு அறுத்து சென்று விட்டனர். இத்தகவல் அறிந்த அக்கட்சி நிர்வாகிகள் கொடிக்கம்பம் அருகே ஒன்று திரண்டனர். பின்னர் மரக்காணம் ஒன்றிய பா.ஜ.க. தலைவர் தலைமையில் மரக்காணம் போலீசாரிடம் புகார் மனு அளித்தனர். புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் கடந்த வாரம் மண்டவாய், ஆலப்பாக்கம் ஆகிய பகுதிகளில் பகுதிகளில் இருந்த பா.ஜ.க. கொடிகளை மர்ம நபர்கள் அறுத்து சென்று விட்டனர். இது தொடர்பாக போலீசாரால் ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
    • கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வேட்டையன், ராமர் 2 பேரையும் கைது செய்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி அடுத்த ஏரியூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக சோளக்காடு உள்ளது.

    இந்நிலையில் ரமேஷ் தினமும் சோளக்காட்டில் காலை மற்றும் மாலை நேரங்களில் வந்து பார்வையிடுவது வழக்கம். அதைப்போல் சம்பவத்தன்று ரமேஷ் தனது சோளக்காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஏரியூர்-மல்லியம்மன் செல்லும் நடைபாதையில் காலனி தடங்கள் இருந்தன.

    இதையடுத்து ரமேஷ் அங்கு சென்று பார்த்த போது அங்கு ஒரு பகுதியில் நாட்டு துப்பாக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அந்த பகுதியில் பாத்திரங்களும் இருந்தன. இதுகுறித்து ரமேஷ் கடம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசார் விசாரணையில் யாரோ மர்ம நபர்கள் ரமேஷ் காட்டில் நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்து வேட்டைக்கு செல்லும்போது பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து கடம்பூர் போலீசார் ரமேஷ் காட்டை ரகசியமாக கண்காணித்தனர்.

    அப்போது நாட்டு துப்பாக்கியைத் தேடி அதே பகுதியை சேர்ந்த வேட்டையன்(62), ராமர் (39) ஆகியோர் வந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். போலீசார் விசாரணையில் வேட்டையன், ராமர் நண்பர்கள். மேலும் 2 பேர் சேர்ந்து வேட்டையாடுவதற்காக ரமேஷ் சோளக்காட்டில் நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்தது தெரியவந்தது.

    வேட்டைக்கு செல்லும் இவர்கள் மிருகங்களை வேட்டையாடி சோளக்காட்டில் கொண்டு வந்து அவற்றை சமைத்து சாப்பிட்டு உள்ளனர். இதற்காக காட்டில் பாத்திரங்களையும் வைத்திருந்தனர்.

    இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வேட்டையன், ராமர் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். 

    • கடலூர் முதுநகரில் மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி கூலி தொழிலாளி பலியானார்.
    • தங்கை வீடான கடலூர் சாவடிக்கு சென்று விட்டு மீண்டும் தனது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த கிருஷ்ணங்குப்பத்தை சேர்ந்தவர் நிக்சன் மோரோ (வயது 32). கூலி தொழிலாளி. நேற்று நள்ளிரவு தனது தங்கை வீடான கடலூர் சாவடிக்கு சென்று விட்டு மீண்டும் தனது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கடலூர் அடுத்த சேடப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழுந்த மோட்டார் சைக்கிள் சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் நிக்சன் மோரோவிற்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து நிக்சன் மோரோவின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஸ்வநாதன் என்பவருக்கும் நிலப்பிரச்சனை சம்பந்த மாக முன்விரோதம் இருந்து வந்தது.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைப்பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் காடாம் புலியூர் அடுத்த வேகாக் கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (42)தி.மு.க. வைச் சேர்ந்தவர். இவர் வேகாக்கொல்லை ஊராட்சி மன்ற துணைத் தலைவ ராகஇருந்து வருகிறார். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கும்பக்கத்து வீட்டைச் சேர்ந்த விஸ்வ நாதன் (51)என்பவருக்கும் நிலப்பிரச்சனை சம்பந்த மாக முன்விரோதம்இருந்து வந்தது. கொண்டான் குளம் அருகே உள்ள 141 செண்ட் நிலத்தை 30 வருடங்களாக விஸ்வநாதன் ஆக்கிரமிப்பு செய்ததை துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி ஆக்கிர மிப்புகளை அகற்றச் சொல்லி அகற்றியதாக தவறாக தினமும் திட்டிக் கொண்டிருந்தார்.

    இன்று தட்சிணா மூர்த்தி மற்றும் அவரது மனைவி மற்றும் தம்பி மகன் அறிவு ஆகியோரை வீட்டில் இருந்த போது விஸ்வநாதன் அவரது மனைவி சின்னபொன்னு மற்றும் மகன்கள் பாஸ்கர், பிரசாந்த் அனைவரும் சேர்ந்து இரும்பு பைப்பாலும், கையாலும், கட்டையாலும் அடித்துள்ளனர். இதில் காயம் அடைந்தவர்கள் பண்ருட்டி அரசுமருத்துவமனைக்கு சென்று விட்டு பின்னர் மேல்சிகிச்சைக்கு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைப் பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    • பழனி கடந்த 29-ந்தேதி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்
    • சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த எறும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 60). இவர் கடந்த 29-ந்தேதி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த பழனி சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×