கடலூர் முதுநகரில் மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி கூலி தொழிலாளி பலி

கடலூர் முதுநகரில் மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி கூலி தொழிலாளி பலியானார்.தங்கை வீடான கடலூர் சாவடிக்கு சென்று விட்டு மீண்டும் தனது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
கடலூர் முதுநகரில் மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி கூலி தொழிலாளி பலி
Published on

கடலூர்:

கடலூர் அடுத்த கிருஷ்ணங்குப்பத்தை சேர்ந்தவர் நிக்சன் மோரோ (வயது 32). கூலி தொழிலாளி. நேற்று நள்ளிரவு தனது தங்கை வீடான கடலூர் சாவடிக்கு சென்று விட்டு மீண்டும் தனது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கடலூர் அடுத்த சேடப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழுந்த மோட்டார் சைக்கிள் சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் நிக்சன் மோரோவிற்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து நிக்சன் மோரோவின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com