மேல்மலையனூர் அருகே மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலி

நேற்றிரவு பெரியசாமி தனது மனைவியுடன் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்றார். நின்ற கொண்டிருந்த அவரது மனைவி அம்காபதி கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார்.
மேல்மலையனூர் அருகே மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலி
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள மேல்வலையாமூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் பெரியசாமி(வயது45), விவசாயி. இவரது மனைவி அம்பிகாபதி(45). இவர்களுக்கு 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். நேற்றிரவு பெரியசாமி தனது மனைவியுடன் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்றார். பின்னர் அங்குள்ள மோட்டாரை இயக்கி உள்ளார். இதில் மின்கசிவு ஏற்பட்டு அவரை மின்சாரம் தாக்கியது. அப்போது அருகில் நின்ற கொண்டிருந்த அவரது மனைவி அம்காபதி கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார். இதனால் அவரையும் மின்சாரம் தாக்கியது. தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com