search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "beneficiaries"

    • பயனாளியே கோழி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை கவனித்துக்கொள்ள முடியும்.
    • அரசு வழங்கிய கோழி வளர்ப்பு திட்டத்தில் பயனடைந்தவராக இருத்தல் கூடாது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    2023-24-ம் ஆண்டிற்கான கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீன்வளத்துறையின் மானியக்கோரி க்கையின்போது, தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான 100 நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்திட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    நாட்டுக்கோழிகள் வளர்ப்பதில் ஆர்வமும் திறனும்கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 கோழிகள் அலகு) நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50 சதவீதம் மானியம் வழங்கிட திட்டத்தினை செயல்படுத்திட தேவையான கோழி கொட்டகை, கட்டுமானச்செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத்தட்டு) மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு, குஞ்சு பொறிப்பான் மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியமாக ரூ.1,50,625 வழங்கப்படவுள்ளது.

    ஒவ்வொரு பயனாளிக்கும் 250 நாட்டுக்கோழிகள் 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஓசூர் மாவட்ட அரசு கால்நடை பண்ணையில் இருந்து இலவசமாக வழங்கப்படும்.

    இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கிராமப்புற பயனாளிகள் இத்திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கிக்கடன் மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ திரட்ட வேண்டும். நாட்டுக்கோழி இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு தமிழகம் முழுவதும் நல்ல சந்தை இருப்பதால் பயனாளியே கோழி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை கவனித்துக்கொள்ள இயலும்.

    இத்திட்டத்தில் சேர விரும்பும் பயனாளிகளுக்கு கோழி கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். இந்தப்பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். பயனாளி தொடர்புடைய கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கு முன்னர் அரசு வழங்கிய கோழி வளர்ப்புத்திட்டத்தில் பயனடைந்தவராக இருத்தல் கூடாது. மேலும், பயனாளி கோழிப்பண்ணையை தொடர்ந்து, 3 வருடங்களுக்கு குறையாமல் பராமரிக்க உத்திரவாதக் கடிதம் அளிக்க வேண்டும்.

    இத்திட்டத்தின்மூலம் நாட்டுக்கோழிகளை 72 வாரங்கள் வளர்த்து 140 முட்டைகள் வீதம் வருடத்திற்கு 17500 முட்டைகள் வரை உற்பத்தி செய்ய இயலும். இதில் சுமார் 2000 முட்டைகளை குஞ்சுப்பொறிப்பதற்கு பயன்படுத்திக்கொண்டு மீதமுள்ள முட்டைகளையும் மற்றும் வளர்ந்த சேவல்களையும் இறைச்சிக்காக விற்பனை செய்வதன் மூலமாக ஒரு வருடத்திற்கு ரூ.2.00 லட்சம் வரை வருமானம் ஈட்ட முடியும்.

    எனவே, இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ள பயனாளிகள் தங்கள் கிராமத்திற்கு அருகிலுள்ள அரசு கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் 25.6.23-க்குள் கால்நடை மருந்தகத்தில் ஒப்படைத்திடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பணி முன்னேற்றம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
    • அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திட அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தென்காசி மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு தலைமையில், தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டம், தென்காசி மாவட்டத்தில் நடைமுறை யில் உள்ள திட்டங்களான நில எடுப்புகள், பட்டா மாறுதல், இல்லம் தேடி கல்வி திட்டம், மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன் திட்டம், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டம், புதுமைப்பெண் திட்டம், அரசு விடுதிகள், உணவு தர கட்டுப்பாடு, சுரங்கத்துறை பணிகள், மருத்துவமனையில் மருந்துகளின் இருப்பு, முதல்- அமைச்சரின் சிறப்பு திட்டமான பள்ளிகளில் காலை உணவு திட்டம் என பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பணி முன்னேற்றம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் அனைத்து அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திட அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுரைகளை வழங்கினார். மேலும் தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பயனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது.

    • ஜமாபந்தியில் 967 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • 57 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணையை கலெக்டர் வழங்கினார்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் அம்மாபேட்டை சரகத்திற்கு இறுதி நாளாக ஜமாபந்தி நடைபெற்றது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பிரித்து வழங்கி உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து கடந்த 6 நாட்களாக நடைபெற்ற ஜமாபந்தியில் 967 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இறுதி நாளில் வருவாய் தீர்வாயத்தில் பெறப்பட்ட மனுக்களில் சமூக பாதுகாப்பு திட்ட பயனாளிகள் 54 நபர்களுக்கும், 25 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களும், 10 நபர்களுக்கு தனிப்பட்டா, 57 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணை, 2 பயனாளிகளுக்கு வாரிசு சான்றிதழ், 1 நபருக்கு மின் இணைப்பு சான்றிதழ் என மொத்தம் 184 பயனாளிக ளுக்கு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் உதவித்தொகை மற்றும் ஆணைகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

    இவ்விழாவில் கல்யாண சுந்தரம் எம்.பி, ஜவாஹிரு ல்லா எம்.எல்.ஏ, பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், தாசில்தார் பூங்கொடி, மாவட்ட துணைச் செயலாளர் கோவி.அய்யாராசு, தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், பேரூர் செயலாளர் கபிலன், வட்ட வழங்கல் அலுவலர் சிவகுமார்.

    சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் முருககுமார் , திருவையாறு ஆதித்திராவிடர் நலத்துறை தனி வட்டாச்சியர் நெடுஞ்செழியன் , கலால் தாசில்தார் ரத்தினவேல் , துணை வட்டாட்சியர்கள் விவேகானந்தன், பிரியா, விமல், அன்புக்கரசி, வருவாய் ஆய்வாளர் சாந்தி, மற்றும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    • இதன்மூலம், அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகள் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.
    • எங்களுடைய பல நாள் கனவு நிறைவேறி உள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், பல்லவராயன்பேட்டை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய் துறை சார்பில் நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்றுகளை 100 பயனாளிகளுக்கு கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

    பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்று வழங்கப்படுகின்றது. இதன்மூலம், அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகள் பெறுவதற்கு உதவியாக இருக்கும். நரிக்குறவர் இன மக்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளை உயர்கல்வி படிக்க வைக்க வேண்டும் என்றார்.

    இதுகுறித்து பழங்குடியினர் இன ஜாதி சான்று பெற்ற நரிக்குறவர் சமுதாய பெண் ரம்பா (வயது 26) கூறியதாவது:-

    நரிக்குறவர் சமுதாய மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பல ஆண்டுகளாக போராடி வந்தனர். இது எங்களுடைய பல நாள் கனவு. முதல்-அமைச்சர் எங்கள் நரிக்குறவர் இன மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து இன்று மாவட்ட கலெக்டரால் இந்த பழங்குடி யினர் ஜாதி சான்றிதழ் எங்களுக்கு கிடைக்க பெற்றிருக்கிறது. எங்களு டைய பல நாள் கனவு நிறைவேறி உள்ளது. இதற்கு முதல்- அமைச்சருக்கும், மாவட்ட கலெக்டருக்கும் நன்றி.நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, தாசில்தார் மகேந்திரன், பல்லவராய ன்பேட்டை ஊராட்சி தலைவர் சேட்டு, நரிக்குறவர் இன மக்கள் மற்றும் வருவாய் துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 22 பயனாளிகளுக்கு ரூ.70 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷா அஜீத் வழங்கினார்.
    • இலவச தையல் எந்திரங்க ளையும் கலெக்டர் வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடந்தது.

    இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊன முற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை, மாற்றுத்திறனாளி களுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொது மக்களிடம் இருந்து 342 மனுக்கள் பெறப்பட்டன.

    தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் ஆஷா அஜீத் அறிவுறுத்தினார். இதில் வருவாய்த்துறையின் சார்பில் சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் திருப்புவனம் வட்டத்தை சேர்ந்த 10 பயனாளிகளுக்கு பல்வேறு வகையான மாதாந்திர உதவித்தொகை பெறு வதற்கான ஆணைகளையும், மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் சார்பில் 10 பயனாளிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.60 ஆயிரம் மதிப்பீட்டில் இலவச தையல் எந்திரங்க ளையும் கலெக்டர் வழங்கி னார்.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் காதொலிக்கருவி, மடக்கு சக்கர நாற்காலி வேண்டி மனு அளித்த 2 மாற்றுத் திறனாளிகளின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.2 ஆயிரத்து 820 மதிப்பிலான காதொலிக்கருவியும், ரூ.7 ஆயிரத்து 900 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலியும் என மொத்தம் 22 பயனாளி களுக்கு ரூ.70 ஆயிரத்து 720 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், கலெக்டர் ஆஷா அஜீத் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரத்தின வேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சாந்தி உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நடப்பு நிதியாண்டில் 1,300 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    • இணையதளத்தில் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.

    தஞ்சாவூர்:

    தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் மானியத்தில் மாடி தோட்டம் அமைக்க, பயனாளிகளுக்கு தஞ்சாவூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் கலைச்செல்வன் அழைப்பு விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மாடி தோட்டம் மூலம் காய்கறி உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க நடப்பு நிதியாண்டில் 1,300 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    ஒரு பயனாளிக்கு 450 ரூபாய் மதிப்பில் காய்கறி வளர்ப்பு பைகள், 2 கிலோ கோகோ பீட், 6 வகையான காய்கறி விதைகள், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, டிரைக்கோடெர்மா விரிடி, வேப்பெண்ணெய், தொழில் நுட்ப கையேடு, பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன் அந்தந்தவட்டார தோட்ட க்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அல்லது www.tnhorticulture.tn.gov.in/kit என்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்து பயன் பெறலாம்.

    திட்ட விபரங்களுக்கு கீழ்க்கண்டவட்டார தோட்டக்கலை உதவிஇயக்கு நர்களை தொடர்பு கொள்ள வேண்டும். தஞ்சாவூர் மற்றும் பூதலூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் - 9943422198. ஓரத்தநாடு மற்றும் திருவோணம் தோட்டக்கலை உதவி இயக்குநர் -9488945801.

    பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் தோட்டக்கலை உதவி இயக்குநர்- 9597059469.

    கும்பகோணம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் உதவி இயக்குநர்- -9842569664.

    பாபநாசம், அம்மாப்பேட்டை மற்றும் திருவையாறு தோட்டக்கலை உதவி இயக்குநர் -9445257303.

    பேராவூரணி மற்றும் சேதுபா வாசத்திரம் தோட்ட க்கலை உதவி இயக்குநர் 8903431728 ஆகிய செல்போன் எண்களில் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ.6 கோடியே 41 லட்சத்து 80 ஆயிரத்து 349 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • முடிவில் வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர் நன்றி கூறினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட த்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி சாதனை மலர் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைப்பெற்றது.

    இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார்.

    எம்.பி. இராமலிங்கம், எம்.எல்.ஏ. க்கள் நிவேதா எம்.முருகன், பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற த்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் 382 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 41 லட்சத்து 80 ஆயிரத்து 349 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் சண்முகம், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துனை ஆட்சியர் கண்மணி, மயிலாடுதுறை ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி, அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர் நன்றி கூறினார்.

    • தேவகோட்டை அருகே 343 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.
    • கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள திருவேகம்பத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கலந்து கொண்டு பல்வேறு துறைகளின் சார்பில் 343 பயனாளிகளுக்கு ரூ.41.29 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படை யில் திருவேகம்பத்தூர் கிராமத்தில் நடந்த முகாமில் பொதுமக்களின் தேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பாக 287 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

    அதில், தகுதியுடைய 218 மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, அம்மனுதாரர்க ளுக்கு நலத்திட்ட உதவி களும், அதன் பயன்களும் வழங்கப்படுகிறது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.இந்த முகாமில் வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் சிவராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பூசனூர் ஊராட்சியில் 9 பயனாளிகளுக்கு இலவச கூண்டுகளுடன் நாட்டுக்கோழிகளை விளாத்திகுளம் சட்ட மன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கினார்.
    • கலையரங்கம் கட்டுவதற்கான பணியையும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூசனூர் ஊராட்சியில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை பிரதம மந்திரி விவசாய நீர் பாசன திட்டம் சார்பில் ரூ.45 ஆயிரம் மதிப்பில் 9 பயனா ளிகளுக்கு இலவச கூண்டு களுடன் நாட்டுக் கோழி களை விளாத்திகுளம் சட்ட மன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங் கினார்.

    நிகழ்ச்சியில் வேளா ண்மை துணை இயக்குனர் சாந்தி ராணி, பொறியாளர் தமிம் அன்சாரி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செய லாளர் சின்ன மாரிமுத்து, மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, நகர செயலாளர் வேலுச்சாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளை ஞரணி துணை அமைப்பா ளர் இம்மானு வேல், மாவட்ட பிரதிநிதி ராம லிங்கம்,ஊராட்சி தலைவர் சோலையம்மாள், ஒன்றிய பொருளாளர் முனியசாமி, கிளை செயலாளர்கள் முனியசாமி, பரமசிவம் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கலையரங்கம்

    இதேபோல் கே.சுந்தரே ஸ்வரபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் கலை யரங்கம் கட்டுவதற்கான பணியையும் மார்க்கண் டேயன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    இதில் ஊராட்சி தலைவர் போஸ், ஒன்றிய பொறி யாளர் ரவிச்சந்திரன், கிளை செயலாளர் தங்கராஜ் பாண்டியன், விளாத்திகுளம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் கலைச்செல்வி, செண்பகராஜ், ஊராட்சி செயலர் கிருபா, தங்கவேல், சமூக வலைதள பொறுப் பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பிரதம மந்திரி கவுரவ நிதித் திட்டத்தில் பி.எம்.கிசான் திட்ட பயனாளிகள் கே.ஒய்.சி. பதிவேற்ற செய்வது அவசியமாகிறது.
    மேட்டூர்:

    பிரதம மந்திரி கவுரவ நிதித் திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு 11-வது தவணைத் தொகை ெபறுவதற்கு விவசாயிகள் தங்களது ஆதார் விபரங்களை பதிவேற்றம் செய்வது அவசியமாகிறது.

     ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பி.எம்.கிசான் வலைதளத்தில் கைரேகையினை பதிவு செய்து வரும் ஓ.டி.பி. எண்ணை வலைதளத்தில் உள்ளீடு செய்து பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். 

    தொலைபேசி எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்காத விவசாயிகள் அருகிலுள்ள இ-சேவை மையத்தின் மூலம் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று மேச்சேரி வேளாண்மை உதவி இயக்குநர் சுஜாதா தெரிவித்துள்ளார்.
    விவசாயிகளுக்கு நிவாரண உதவி அளிக்கும் திட்டத்தின் கீழ் 11வது தவணை நிதியை பிரதமர் இன்று வழங்குகிறார்.
    புதுடெல்லி:

    மத்திய அரசின் 9 அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூலம் செயல்படுத்தப் பட்டுள்ள 16 திட்டங்களின் மூலம் பயன் அடைந்த பொதுமக்களுடன், இமாச்சல் பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார்.

    பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு நிதி திட்டம் , பிரதமரின் இலவச சமையல் எரிவாயு திட்டம்,  ஊட்டச்சத்து இயக்கம், பிரதமரின் மகப்பேறு உதவித்திட்டம், தூய்மை இந்தியா இயக்கம் உள்ளிட்ட திட்டங்களின் தாக்கம் குறித்து, பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாட உள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    இந்த நிகழ்ச்சியின் போது நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கி வரும் நிவாரண உதவித் திட்டத்தின் கீழ் 11-வது தவணையாக ரூ.21,000 கோடிக்கு  தொகையை பிரதமர் விடுவிக்கவுள்ளார்.

    மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் வேளாண் அறிவியல் மையங்கள் வழியாக மாநில முதலமைச்சர்கள், மத்தி, மாநில அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் காணொலி மூலம் இதில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடையம் பெரும்பத்து ஊராட்சியில் பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை ஊராட்சி மன்ற தலைவர் பொன்சீலா வழங்கினார்.
    கடையம்:

    கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங்களில் காணொலிக் காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் வேளாண் திட்டங்களை தொடங்கி வைத்தார். 

    தென்காசி மாவட்டம் கடையம் பெரும்பத்து ஊராட்சியில் நடைபெற்ற விழாவுக்கு ஊராட்சி தலைவர் பொன்ஷீலா பரமசிவன் தலைமை தாங்கினார்.

    விழாவில் பயனாளி–களுக்கு தென்னை மரக்கன்று–கள். வீடுகளுக்கு தேவையான காய்கறி விதைகள்,விவசாய உபயோகத்திற்கான தெளிப்பான்கள், பழ மரக்கன்றுகள், உளுந்து விதை, வேளாண் இடுபொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டது.  

    வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சல் பொன் ராணி, வேளாண் பொருட்களை பயனாளி களுக்கு வழங்கினர்.நிகழ்ச்சியில் அட்மா சேர்மன் குணசீலன், வேளாண்மை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி,கடையம் ஒன்றிய துணை சேர்மன் மகேஷ்மாயவன், கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகி பரமசிவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    முடிவில் ஊராட்சி செயலர் ஆனைமணி நன்றி கூறினார்.
    ×