search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு ஸ்கூட்டர்கள்
    X

    மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு தலைமையில், தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் பயனாளிகளுக்கு ஸ்கூட்டர்களை வழங்கிய காட்சி.

    தென்காசியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு ஸ்கூட்டர்கள்

    • பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பணி முன்னேற்றம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
    • அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திட அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தென்காசி மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு தலைமையில், தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டம், தென்காசி மாவட்டத்தில் நடைமுறை யில் உள்ள திட்டங்களான நில எடுப்புகள், பட்டா மாறுதல், இல்லம் தேடி கல்வி திட்டம், மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன் திட்டம், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டம், புதுமைப்பெண் திட்டம், அரசு விடுதிகள், உணவு தர கட்டுப்பாடு, சுரங்கத்துறை பணிகள், மருத்துவமனையில் மருந்துகளின் இருப்பு, முதல்- அமைச்சரின் சிறப்பு திட்டமான பள்ளிகளில் காலை உணவு திட்டம் என பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பணி முன்னேற்றம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் அனைத்து அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திட அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுரைகளை வழங்கினார். மேலும் தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பயனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×