search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "beneficiaries"

    • திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.
    • 46 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கார்த்தி தலைமை தாங்கினார்.

    வட்டாச்சியர் ரமேஷ், தனி வட்டாச்சியர் (சமூக பாதுகாப்பு) கவிதாஸ்,வட்ட வழங்கல் அலுவலர் நீலாயதாட்சி, ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வருவாய் ஆய்வாளர் புனிதா வரவேற்றார்.

    முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவிதொகை, விதவை உதவிதொகை,இலவச வீட்டுமனை பட்டா,வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை என மொத்தம் 46 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்து 776 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கார்த்தி வழங்கினார்.

    இதில் மண்டல துணை வட்டாட்சியர் ஜெயசெல்வம், தோட்டக்கலை உதவி அலுவலர்கள் செல்லபாண்டியன்,சரவண அய்யப்பன்,வேளாண்மை உதவி அலுவலர் பழனிவேல் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் கிராம நிர்வாக அலுவலர் முத்துகுமார் நன்றி கூறினார்.

    • விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் மற்றும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • 2 பயனாளிகளுக்கு குடற்புழு நீக்க கருவிகள் வழங்கப்பட்டது.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டாரத்தி ல் வேளாண்மை –உழவர் நலத்துறை சார்பில் அட்மா, மாநில விரிவாக்க திட்டங்க ளுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டம் 2023-24 செயல்விள க்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் மற்றும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் சாக்கோ ட்டை அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 2 பயனாளிகளுக்கு கை தெளிப்பான்கள், 5 பயனாளிகளுக்கு தார்பா ய்கள், 2 பயனாளிகளுக்கு குடற்புழு நீக்க கருவிகள், 1 பயனாளிக்கு பருத்தி கருவி ஆகியவற்றை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கும்பகோ ணம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவரும், மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளருமான கணேசன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுதாகர், மாவட்ட தி.மு.க. பிரதிநிதி கரிகாலன், கும்பகோணம் அட்மா குழு தலைவர் ஆலமன்குறிச்சி குமார், வேளாண்மை அலுவலர் அசோக்குமார், துணை வேளாண்மை அலுவலர் சாரதி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரகாஷ், உதவி தொழில்நுட்ப மேலாள ர்கள் தனசேகரன், இளமதி மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

    • சிறப்பாக பணிபுரிந்து மாவட்ட நிர்வாகத்திற்கு பெருமை சேர்த்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள்.
    • பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் 76-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி தேசியக்கொடி ஏற்றி வைத்து, மூவர்ண பலூன்களை பறக்க விட்டார். தொடர்ந்து, கலெக்டர் தீபக் ஜேக்கப், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் ஆகியோர் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டனர்.

    முன்னதாக சுதந்திர போராட்ட தியாகிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் கவுரவித்தார். தொடர்ந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    மேலும், பல்வேறு திட்ட பணியில் சிறப்பாக பணிபுரிந்து மாவட்ட நிர்வாகத்திற்கு பெருமை சேர்த்த 125 பேருக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

    மேலும், போர், போரை ஒத்த நடவடிக்கையில் உயிரிழந்த மற்றும் ஊனமுற்ற படைவீரர்களுக்கான வருடாந்திர குடும்ப பராமரிப்பு மானியமாக 15 பேருக்கு ரூ.3 லட்சம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மின்கல இயங்கு வாகனம் ரூ.4.24 லட்சம் மதிப்பில் 4 பயனாளிகளுக்கும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் பங்கு பெற்று முதல் பரிசு மற்றும் 2-ம் பரிசு பெறும் பயனாளிகள் 4 பேருக்கு ரூ.40 ஆயிரம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் ரூ.4.11 லட்சம் மதிப்பில் 5 பயனாளிகளுக்கும், தாட்கோ மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் ரூ. 1.01 கோடி மதிப்பில் 57 பயனாளிகளுக்கு என மொத்தம் 85 பயனாளிகளுக்கு ரூ.1.13 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.

    பின்னர், பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், ஐ.ஜி. ஜெயச்சந்திரன், ஏ.டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், கோட்டாட்சியர், தாசில்தார், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

    • முகாமில் 400 பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
    • முகாமை டாக்டர் பன்னீர்செல்வம் தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    சீர்காழி:

    சீர்காழி தாலுக்கா அண்ணன் கோயில் கிராமத்தில் சீர்காழி ரோட்டரி சங்கம், தனலட்சுமி மருந்தகம் மற்றும் பரிசோதனை மையம் இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாமிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் சத்யநாராயணன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் மருந்தாளுநர் சடகோபன் கல்யாணராமன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் பாஸ்கரன், சாமிசெழியன், சுப்பி ரமணியன், பழனியப்பன், கணேஷ், கேசவன் அப்துல் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மருந்தகத்தை மருத்துவர் முருகேசன் திறந்து வைத்தார் மருத்துவ பரிசோதனை மையத்தை டாக்டர் முத்துக்குமார் திறந்து வைத்தார்.

    மருத்துவ மையத்தை மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் வீரராகவன் திறந்து வைத்தார்.

    மருத்துவ முகாமை மருத்துவர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    மருத்துவர்கள் முத்துக்கு மார், முருகேசன், குருமூர்த்தி, தாரணி ஸ்ரீதர் கனிமொழி அக்ஷயா அருண்குமார் சௌந்தர்யா சிந்துஜா ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் செல்வகுமார், சண்முகசுந்தரம், சிவகுரு, திருநாவுக்கரசு ராஜேந்திரன் அப்துல் கலாம் நர்சிங் கல்லூரி தாளாளர் மதியழகன் ஊராட்சி மன்ற தலைவர் அம்பேத்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    ரோட்டரி சங்க முன்னாள் செயலாளர்கள் கந்தசாமி பாலமுருகன் சண்முகம் நடராஜன் சரவணன் முருகன் அப்துல் நாசர் ராஜ்பரிக் குமார் கண்ணன் கோவிந்தராஜ் சேகர் கணேசன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜமாத்தார்கள் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.

    400 பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கினார்கள் ரோட்டரி சங்க செயலாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

    • முதிர்வுத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • அடுத்த மாதம் 8-ந் தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்ட சமூக நல அலுவலகம் கருணாநிதி நூற்றாண்டு விழாவை கொண்டாடுதல் ஜூன் 2023 முதல் ஜூன் 2024 வரை முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாது காப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்த பெண் குழந்தைகளின் வயது 18-ஐ கடந்தும் முதிர்வுத்தொகை வழங்கப்படாமல் உள்ளவர்களின் விபரங்களை தொடர்ந்து தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திடம் இருந்து பெற்று அவர்களுக்கு முதிர்வுத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள முதிர்வுத்தொகை பெறாத பயனாளிகளை கண்டறியும் முகாம் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 8-ந் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.

    இதில் அனைத்து பயனாளிகளும் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • இலவச தையல் எந்திரங்கள், ஒரு பயனாளிக்கு ரூ.5000 மதிப்பிலான ஆடை தேய்ப்பு பெட்டி வழங்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடந்தது. பொது மக்களிடமிருந்து 351 மனுக்கள் பெறப்பட்டு தகுதியுள்ள மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தினார். பின்னர் வருவாய் துறையின் சார்பில் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் விபத்து நிவாரண காசோலை, 4 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.87 ஆயிரத்து 500- மதிப்பீட்டில் இயற்கை மரண உதவிதொகை காசோலைகள், முதல்-அமைச்சர் பொது நிவாரன நிதியின் கீழ் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலைகள், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.6,000 மதிப்பீட்டிலான இலவச தையல் எந்திரங்கள், ஒரு பயனாளிக்கு ரூ.5000 மதிப்பிலான ஆடை தேய்ப்பு பெட்டி, தொழிலாளர் நலத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.55 ஆயிரம் வீதம் விபத்து மற்றும் இயற்கை மரண உதவித் தொகை காசோ லைகள் என மொத்தம் 27 பயனாளி களுக்கு ரூ.15 லட்சத்து 27 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணி வண்ணன், உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொ) சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு காப்பீட்டு திட்ட அட்டைகளையும் வழங்கினார்.
    • எலும்பியல் மருத்துவம் மற்றும் மனநல மருத்துவத்திற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    கும்பகோணம்:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கும்பகோணம் அடுத்த திப்பிராஜபுரம் ஊராட்சியில் உள்ள அரசினர் உயர்நிலை பள்ளியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.

    முகாமை சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் கண் கண்ணாடிகளையும், காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டக ங்களையும், காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு காப்பீட்டு திட்ட அட்டைகளையும் வழங்கினார்.

    முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ, இ.சி.ஜி., முழு ரத்த பரிசோதனை, மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, தொழு நோய் கண்டறியும் பரிசோதனை, காசநோய் பரிசோதனை, கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை நடைபெற்றது.

    மேலும், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம் மற்றும் மனநல மருத்துவத்திற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவரும், மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளருமான கணேசன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவரும், மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான முத்துசெல்வம், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுதாகர், மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர் திலகம், உதவி இயக்குநர் டாக்டர் ரவிச்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கலாராணி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாண்டியன், சசிகுமார், திப்பிராஜபுரம் ஊராட்சி தலைவர் முருகையன், கட்சி நிர்வாகிகள் எஸ்.வி.எஸ்.இளங்கோவன், பழனி, கீழச்சேத்தி ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நிலுவையில் உள்ள அனைத்து திட்ட பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும்.
    • வாகனங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டயரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்ந்த செயல்பாடுகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமை தாங்கினார். அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன், ஆதிதிராவிட நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா , ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த், தாட்கோ ஆணையர் கந்தசாமி, பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை (மத்திய தொழிற் பணி), மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது:-

    ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஆதிதிராவிடர் மக்கள் தொகை, முதல்வரின் முகவரி துறையில் இருந்து வரப்பெற்ற மனுக்களின் நிலுவை விவரம், ஆதிதிராவிட நலப் பள்ளியில் எண்ணிக்கை, நான்கு மாவட்டங்களில் உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விபரம், 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விபரம், ஆதிதிராவிடர் நல விடுதிக ளின் எண்ணிக்கை, கடந்தாண்டு விடுதிகளில் தங்கி கல்வி பயின்ற மாணவர்களின் தேர்ச்சி விவரம், இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு பொருளடக்கம் இக்கூட்ட த்தில ஆய்வு செய்யப்பட்டது.

    ஆதித்திரா விடர்களின் வாழ்க்கை தரம் உயர பல்வேறு நலத்திட்ட ங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் தங்கு தடையின்றி பயனாளிகளுக்கு சென்று நேர அலுவலர்கள் முனைப்பு டன் செயல்பட வேண்டும்.

    மேலும் நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாக தரமாகவும் முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு உத்தரவிடப்ப ட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம் மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு தாட்கோ மானியமாக ரூ.1224235 மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் உட்பட மொத்தம் ரூ.4355786 மதிப்பீட்டில் உள்ள வாகனங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

    மேலும் மகளிருக்கான சுய உதவிக்குழுக்களின் கீழ் அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக 10 குழுக்களுக்கு 120 மகளிருக்கு தாட்கோ மானியமாக ரூ.2500000 மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் உட்பட மொத்தம் ரூ.7447000 மதிப்பீட்டில் உள்ள வாகனங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

    துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளின் பயன்பாட்டிற்கென மின் இணைப்பு 25 விவசாயிகளுக்கு தாட்கோ மானியமாக ரூ.5790000 மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் உட்பட மொத்தம் ரூ.6480000 மதிப்பீ ட்டில் உள்ள வாகனங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்ப ட்டன.

    இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திர சேகரன் , டி.கே.ஜி.நீலமேகம் , கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்) , ஸ்ரீகாந்த் (வளர்ச்சி), தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மற்றும் நான்கு மாவட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.
    • முகாமிற்கு வரும் பயனாளிகள் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை கொண்டு வரவேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-முன்னாள் முதல்வர் கருணாநிதி 100-வது பிறந்தநாளையொட்டி தஞ்சாவூர் சுகாதார மாவட்டம் பூதலூர் தாலுக்கா வெண்டையம்பட்டி ஊராட்சியில் ராயமுன்டான்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி, கும்பகோணம் தாலுகா திப்பிராஜபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் பட்டுக்கோட்டை தாலுக்கா அதிராம்பட்டினம் துர்காசெல்லியம்மன் திருமண மண்டபம் ஆகிய 3 இடங்களில் நாளை (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.

    இம்முகாமில் பொதுவான உடல் பரிசோதனை, பல், காது, மூக்கு, தொண்டை, கண், குழந்தைகள் நலம், பெண்கள் நலம், மகப்பேறு, பொது மருத்துவம், சித்த மருத்துவம் காசநோய் மற்றும் தொழுநோய் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் பரிசோ தனை மேற்கொள்ளப்பட உள்ளது.அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனை, மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் முகாமில் பங்கேற்க உள்ளனர்.

    மேல்சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வழங்கப்படும். முகாமிற்கு வரும் பயனா ளிகள் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை கொண்டு வந்து பய ன்பெறு மாறு கேட்டுக் கொ ள்ள ப்படுகி றது. இதே போல் காப்பீ ட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாமும் நடை பெறுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

    • இளங்கோ மனைவி அருள்மதிக்கு 4 சக்கர வாகனம் வழங்கப்பட்டது.
    • நிவேதா முருகன் முன்னிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, சுற்றுசூழல்துறை அமைச்சர் மெய்யநாதன், பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. நிவேதா முருகன் முன்னிலையில் அனைத்து துறையை சார்ந்த அதிகபட்ச மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

    இதில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் வாயிலாக பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் மீனவ பயனாளிக்கு ரூ. 20 லட்சம் மதிப்பிலான குளிரூட்டப்பட்ட நான்கு சக்கர வாகனம் ரூ.8 லட்சம் மானிய தொகையில் தரங்கம்பாடி தாலுக்கா சந்திரபாடி மீனவ கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த இளங்கோ மனைவி அருள்மதிக்கு வழங்கப்பட்டது.

    இதனை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை

    இணை இயக்குநர் இளம்வழுதி, உதவி இயக்குநர் ராஜேஷ்குமார், ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பயனாளியின் பயன்பாட்டிற்கு வழங்கினர்.

    • ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • கிராம மக்கள் தங்களின் தேவைகள் குறித்த மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டரும், வருவாய் தீர்வாய அலுவலரமான விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் 52 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கி னார். பின்னர் அவர் பேசியதாவது:-

    கடலாடி வட்டத்தில் 6-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை ஜமாபந்தி நடந்தது. நிகழ்ச்சியில் 43 கிரா மங்களை சேர்ந்த வர்களிடம் இருந்து 301 மனுக்கள் பெறப்பட் டுள்ளது.

    இதில் 52 மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கிடும் வகையில் பட்டா மாறுதல், வீட்டுமனை பட்டா, புலப்படம் நான்குமால், பட்டா மாறுதல் உட்பிரிவு, இலவச வீட்டு மனை பட்டா தொடர்பான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

    197 மனுக்கள் வருவாய்த் துறையின் மேல் நடவடிக்கை யில் உள்ளது. 52 மனுக்கள் பிற துறை தொடர்பான கோரிக்கைகள் என்பதால் அந்தந்த துறைகளுக்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    பொதுவாக பொதுமக்களிட மிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் தீர்வு வழங்கப்படும்.

    பொதுவாக ஆண்டுதோறும் நடைபெறும் ஜமாபந்தி அனைத்து வட்டங்களிலும் வருவாய் தீர்வாய அலுவலர் தலைமையில் நடைபெறுவதால், அந்தந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் தங்களின் தேவைகள் குறித்த மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் அலுவலக மேலாளர் ஜெயமணி, கடலாடி வட்டாட்சியர் ரெங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.7 லட்சத்தில் புதிதாக பயணிகள் நிழலகம் கட்டப்பட்டது.
    • பயனாளிகள் 500 பேருக்கு சேலைகள் வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சாயாவனம் பகுதியில் ரூ.7 லட்சத்தில் புதிதாக பயணிகள் நிழல் குடை கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமை வகித்தார்.

    ஒன்றிய ஆணையர் இளங்கோவன், திமுக மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர் பஞ்சு.குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் சசிக்குமார், புஷ்பவள்ளி ராஜா, நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான நிவேதா.

    முருகன் கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார்.

    தொடர்ந்து கமலஜோதி தேவேந்திரன் பயனாளிகள் 500 பேருக்கு சேலைகளை வழங்கினார்.

    இதேபோல் மேலையூர் பகுதியில் புதிதாக ரூ. 7 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழல் குடையையும் பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் திறந்து வைத்து பயன்பாட்டிற்கு அளித்தார்.

    இதில் தி.மு.க. நிர்வாகிகள் ரவி, தினகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×