என் மலர்
உள்ளூர் செய்திகள்

பயணிகள் நிழலகத்தை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
சீர்காழி அருகே பயணிகள் நிழலகம் திறப்பு
- ரூ.7 லட்சத்தில் புதிதாக பயணிகள் நிழலகம் கட்டப்பட்டது.
- பயனாளிகள் 500 பேருக்கு சேலைகள் வழங்கப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சாயாவனம் பகுதியில் ரூ.7 லட்சத்தில் புதிதாக பயணிகள் நிழல் குடை கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமை வகித்தார்.
ஒன்றிய ஆணையர் இளங்கோவன், திமுக மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர் பஞ்சு.குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் சசிக்குமார், புஷ்பவள்ளி ராஜா, நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான நிவேதா.
முருகன் கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார்.
தொடர்ந்து கமலஜோதி தேவேந்திரன் பயனாளிகள் 500 பேருக்கு சேலைகளை வழங்கினார்.
இதேபோல் மேலையூர் பகுதியில் புதிதாக ரூ. 7 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழல் குடையையும் பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் திறந்து வைத்து பயன்பாட்டிற்கு அளித்தார்.
இதில் தி.மு.க. நிர்வாகிகள் ரவி, தினகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






