search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shadow"

    • 25 காலணி பழுது பார்க்கும் தொழிலாளிகளுக்கு நிழற்குடைகள் வழங்கினார்.
    • விளம்பு நிலை குடும்பத்தினருக்கு புதிய தையல் எந்திரமும் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    சாலையோரம் காலணி பழுது பார்க்கும் தொழிலாளிகள் தற்போது ஆரம்பித்துள்ள மழை காலத்திலும் தங்களது தொழிலை தடங்கலின்றி தொடர்ந்து செய்யும் வகையில் பெரிய அளவிலான நிழற்குடைகள் ஜோதி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.

    தஞ்சை நகர பகுதிகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 25 காலணி பழுது பார்க்கும் தொழிலாளிகளுக்கு அவரவர் பணி செய்யும் இடத்துக்கே நேரில் சென்று இந்த குடையை ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் வழங்கினார். மேலும் கோரிக்கையின் அடிப்படையில் விளிம்பு நிலை குடும்பத்தை சேர்ந்த கணவரை இழந்த பெண் ஒருவரின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் புதிய தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

    இது குறித்து ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் கூறும்போது, "ஜோதி அறக்கட்டளை மூலம் மாநிலம் முழுவதும் விளிம்பு நிலை மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காலணி பழுது பார்க்கும் தொழிலாளிகளுக்கு மழை காலத்திலும் தங்களது வேலை தடைபடாமல் தொடர நிழற்குடைகள் தொழிலாளிகள் பணி செய்யும் இடத்துக்கே நேரில் சென்று வழங்கப்பட்டது. மேலும் விளம்பு நிலை குடும்பத்தினர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அவர்களுக்கு புதிய தையல் இயந்திரமும் வழங்கப்பட்டது . மொத்தத்தில் ரூ. 65,000 மதிப்பீட்டில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன " என்றார்.

    இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்கு மார் தலைமையில் மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வையாளர் கல்யா ணசுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • அவனியாபுரத்தில் நிழற்குடை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர்.
    • உட்காரக்கூட இட வசதியின்றி மாணவ, மாணவிகள் தவித்த வண்ணம் உள்ளனர்.

    மதுரை

    மதுரை அவனியாபுரம் பகுதியில் சுமார் ஒரு லட் சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இப்ப–குதியில் இருந்து மதுரை பெரியார், அண்ணா, மாட் டுத்தாவணி, ஆரப்பாளை–யம் ஆகிய பேருந்து நிலை–யங்களுக்கு செல்வதற்காக பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆயி–ரத்திற்கும் மேற்பட்டோர் காலையில் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர்.

    இந்த நிலையில் அவனி–யாபுரத்தில் இரண்டு நிழற் குடைகள் இருந்தன. இதில் ஒன்று மிகவும் பழு–தடைந்து உடையும் தருவா–யில் இருந்த–தால் ஏதேனும் உயிர் சேதம் ஏற்பட்டு விடும் என்று கருதி சமீபத்தில் இடித்து அகற்றப் பட்டு விட்டது.

    மீதமுள்ள ஒரு நிழல் குடையும் இலை கடை ஆக்கிரமிப்பில் இருக்கிறது. இதனால் பொது மக்கள், மாணவ, மாணவிகள் உட்கா–ரவோ, நிற்கவோ கூட இட மின்றி தவித்து வருகிறார் கள். அதிலும் தற்போது கொளுத்தி வரும் வெயிலின் தாக்கத்தால் அவர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது.

    இந்த நிழற்குடையில் இருந்த பயணிகள் அமரும் இருக்கைகளையும், 92-வது வார்டு பகுதியில் தண்ணீர் திறந்து விடும் ஒப்பந்த ஊழியர்கள் உடைத்து சென்று தங்கள் அமர்வதற் காக நீர் தேக்கும் மேல் நிலைத் தொட்டிக்கு கீழே வைத்துள்ளனர்.

    எனவே வயது முதிர்ந்த பயணிகள் பேருந்து நிலை–யத்தில் நிழற்குடை இல்லாம–லும், அமருவதற்கு வசதி இல்லாமலும் மிகவும் தவித்து வருகின்றனர். இந்த நிழற்குடை ஆக்கிரமிப்பை அகற்ற அரசு அதிகாரிகள், உதவி பொறியாளர் முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • ஒரு பெண் குழந்தை பூங்கா போல காட்சி அளிக்கும் ஒரு இடத்தில் நடந்து செல்வதை காண முடிகிறது.
    • வீடியோவை பார்க்கும் போது சிரிப்பாக இருப்பதாக பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் பார்ப்பதற்கு சிரிப்பாக இருக்கும். குறிப்பாக குழந்தைகளின் குட்டி சேட்டைகள் முதல் அவர்கள் செய்யும் வித்தியாசமான செயல்களும் வைரலாக பரவும். அந்த வகையில், இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில் ஒரு குழந்தை தனது நிழலை பார்த்து அழுவது போன்று காட்சிகள் உள்ளது.

    அதில், ஒரு பெண் குழந்தை பூங்கா போல காட்சி அளிக்கும் ஒரு இடத்தில் நடந்து செல்வதை காண முடிகிறது. அப்போது அந்த குழந்தை தன்னுடைய நிழலை பார்க்கிறது. அதை பார்த்த குழந்தைக்கு அது என்ன என்பது புரியவில்லை. இதனால் அந்த குழந்தை அச்சப்பட்டு கையை உயர்த்திய நிலையில், நிழலில் இருந்தும் அதே அசைவு ஏற்படுகிறது. இதனால் குழந்தை மேலும் அச்சப்பட்டு அழுவது போன்று காட்சிகள் உள்ளது. குழந்தை தனது நிழலை பார்த்து அச்சப்படுவது பார்க்க பாவமாக இருந்தாலும், வீடியோவை பார்க்கும் போது சிரிப்பாக இருப்பதாக பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • ரூ.7 லட்சத்தில் புதிதாக பயணிகள் நிழலகம் கட்டப்பட்டது.
    • பயனாளிகள் 500 பேருக்கு சேலைகள் வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சாயாவனம் பகுதியில் ரூ.7 லட்சத்தில் புதிதாக பயணிகள் நிழல் குடை கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமை வகித்தார்.

    ஒன்றிய ஆணையர் இளங்கோவன், திமுக மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர் பஞ்சு.குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் சசிக்குமார், புஷ்பவள்ளி ராஜா, நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான நிவேதா.

    முருகன் கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார்.

    தொடர்ந்து கமலஜோதி தேவேந்திரன் பயனாளிகள் 500 பேருக்கு சேலைகளை வழங்கினார்.

    இதேபோல் மேலையூர் பகுதியில் புதிதாக ரூ. 7 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழல் குடையையும் பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் திறந்து வைத்து பயன்பாட்டிற்கு அளித்தார்.

    இதில் தி.மு.க. நிர்வாகிகள் ரவி, தினகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நரிக்குடி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடத்தை வீடுபோல் மூதாட்டி பயன்படுத்துகிறார்.
    • பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



    பயணிகள் நிழற்கூடம் அருகே பிளாஸ்டிக் பாட்டில்கள் மலைபோல் குவிந்து கிடக்கும் காட்சி.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியில் பயணி கள் நிழற்கூடம் உள்ளது. இந்த நிழற்கூடத்தில் இருந்து பஸ் பயணிகள் மதுரை, ராமேசுவரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளுக்கு செல்வது வழக்கம். இந்த நிழற்கூடத்தை மூதாட்டி ஒருவர் தனது வீடு போல் ஆக்கிரமித்து பயன் படுத்தி வருகிறார்.

    அவர் இந்த நிழற்கூடத்தில் பஸ் பயணிகள் யாரும் அமர விடாமலும், அவதூறாக பேசி யும் வருவதாக கூறப்படுகிறது. மேலும் அந்த மூதாட்டி நரிக் குடியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து மதுபான பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை பஸ் நிலையம் அருகிலேயே மலை போல் குவித்து வைத்திருப்ப தால் அதிலிருந்து வரும் துர்நாற்றங்களால் நோய் தொற்றுகள் ஏற்படுவதுடன், பயணிகளும் முகம் சுழித்து வருகின்றனர்.

    பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளும் நிழற்குடைக்குள் அமர விரும்பாமல் மூக்கை பிடித்துக்கொண்டு மணிக் கணக்கில் நிழற்குடைக்கு வெளியி லேயே வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்கும் அவல நிலை உருவாகி உள்ளது. இதுகுறித்து நரிக்குடி ஊராட்சி நிர்வாகமும், சுகா தாரத்துறை அலுவலர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிக ளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பிளாஸ்டிக் பொருட் களை ஒழிக்க பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் நரிக்குடி பஸ் நிலையத்தில் பொது இடத்தில் பிளாஸ்டிக் பொருட் களை குவித்து வைத்து சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வரும் மூதாட்டியை பஸ் நிலை யத்தில் இருந்து அகற்றுவதுடன், அவரது உறவினர்கள் அல்லது காப்பகத்தில் சேர்க்க ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் நரிக்குடி பஸ் நிலையத்தை பொதுமக்கள் மற்றும் பயணிகளின் முழு மையான பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிநவீன வசதிகளுடன் இந்த குளிர்சாதன இரண்டு அடுக்கு பேருந்து நிழல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
    • 24 மணி நேர கண்காணிப்பு கேமரா வசதி, அதிநவீன வர்த்தக விளம்பர எல்.இ.டி பலகை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

    தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஆட்சியர் அலுவலகம் எதிரில் சேலம்-பெங்களூரு சாலையில் பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது.

    உலகின் முதன்முறையாக சூரிய ஒளி மின்சக்தி மூலம் அதிநவீன வசதிகளுடன் இந்த குளிர்சாதன இரண்டு அடுக்கு பேருந்து நிழல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது பிறந்தநாளையொட்டி இந்த நிழல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிழல் கூடத்தில் குளிர்சாதன வசதியுடன் பயணிகளுக்கு இரண்டடுக்கு தளத்தில் இருக்கை வசதி, தானியங்கி பரிவர்த்தனை இயந்திரம், ஏ.டி.எம் மையம், சிறப்பு அங்காடி, தானியங்கி சூரிய மின் சக்தி நிலையம், 24 மணி நேர கண்காணிப்பு கேமரா வசதி, அதிநவீன வர்த்தக விளம்பர எல்.இ.டி பலகை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் குளிர்சாதன வசதியுடன் தாய்மார்கள் பாலூட்டும் அறை, மினி நூலக வசதி, தர்மபுரி பண்பலை வானொலியை கேட்கும் வசதி, தொலைக்காட்சி பெட்டி, செல்பி பாயிண்ட், கார்டன் சீட் அவுட், செல்போன் சார்ஜிங் பாயிண்ட் என ஹைடெக்காக அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், சாதனைகளை இரவிலும் மக்கள் பார்க்கும் விதமாக மின்னொளியில் தெரியும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

    ×