search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவனியாபுரத்தில் நிழற்குடை ஆக்கிரமிப்பு
    X

    அவனியாபுரம் பஸ் நிறுத்தத்தில் இலை கடை ஆக்கிரமிப்பால் உட்கார இடமின்றி நிழற்கு டையில் காத்திருக்கும் மாணவர்களையும், இடித்து அகற்றப்பட்டதால் வெயிலில் காத்தி ருக்கும் பயணிகளையும் படத்தில் காணலாம்.

    அவனியாபுரத்தில் நிழற்குடை ஆக்கிரமிப்பு

    • அவனியாபுரத்தில் நிழற்குடை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர்.
    • உட்காரக்கூட இட வசதியின்றி மாணவ, மாணவிகள் தவித்த வண்ணம் உள்ளனர்.

    மதுரை

    மதுரை அவனியாபுரம் பகுதியில் சுமார் ஒரு லட் சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இப்ப–குதியில் இருந்து மதுரை பெரியார், அண்ணா, மாட் டுத்தாவணி, ஆரப்பாளை–யம் ஆகிய பேருந்து நிலை–யங்களுக்கு செல்வதற்காக பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆயி–ரத்திற்கும் மேற்பட்டோர் காலையில் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர்.

    இந்த நிலையில் அவனி–யாபுரத்தில் இரண்டு நிழற் குடைகள் இருந்தன. இதில் ஒன்று மிகவும் பழு–தடைந்து உடையும் தருவா–யில் இருந்த–தால் ஏதேனும் உயிர் சேதம் ஏற்பட்டு விடும் என்று கருதி சமீபத்தில் இடித்து அகற்றப் பட்டு விட்டது.

    மீதமுள்ள ஒரு நிழல் குடையும் இலை கடை ஆக்கிரமிப்பில் இருக்கிறது. இதனால் பொது மக்கள், மாணவ, மாணவிகள் உட்கா–ரவோ, நிற்கவோ கூட இட மின்றி தவித்து வருகிறார் கள். அதிலும் தற்போது கொளுத்தி வரும் வெயிலின் தாக்கத்தால் அவர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது.

    இந்த நிழற்குடையில் இருந்த பயணிகள் அமரும் இருக்கைகளையும், 92-வது வார்டு பகுதியில் தண்ணீர் திறந்து விடும் ஒப்பந்த ஊழியர்கள் உடைத்து சென்று தங்கள் அமர்வதற் காக நீர் தேக்கும் மேல் நிலைத் தொட்டிக்கு கீழே வைத்துள்ளனர்.

    எனவே வயது முதிர்ந்த பயணிகள் பேருந்து நிலை–யத்தில் நிழற்குடை இல்லாம–லும், அமருவதற்கு வசதி இல்லாமலும் மிகவும் தவித்து வருகின்றனர். இந்த நிழற்குடை ஆக்கிரமிப்பை அகற்ற அரசு அதிகாரிகள், உதவி பொறியாளர் முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×