நிழலை பார்த்து அழுத குழந்தை...

ஒரு பெண் குழந்தை பூங்கா போல காட்சி அளிக்கும் ஒரு இடத்தில் நடந்து செல்வதை காண முடிகிறது.வீடியோவை பார்க்கும் போது சிரிப்பாக இருப்பதாக பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
நிழலை பார்த்து அழுத குழந்தை...
Published on

சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் பார்ப்பதற்கு சிரிப்பாக இருக்கும். குறிப்பாக குழந்தைகளின் குட்டி சேட்டைகள் முதல் அவர்கள் செய்யும் வித்தியாசமான செயல்களும் வைரலாக பரவும். அந்த வகையில், இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில் ஒரு குழந்தை தனது நிழலை பார்த்து அழுவது போன்று காட்சிகள் உள்ளது.

அதில், ஒரு பெண் குழந்தை பூங்கா போல காட்சி அளிக்கும் ஒரு இடத்தில் நடந்து செல்வதை காண முடிகிறது. அப்போது அந்த குழந்தை தன்னுடைய நிழலை பார்க்கிறது. அதை பார்த்த குழந்தைக்கு அது என்ன என்பது புரியவில்லை. இதனால் அந்த குழந்தை அச்சப்பட்டு கையை உயர்த்திய நிலையில், நிழலில் இருந்தும் அதே அசைவு ஏற்படுகிறது. இதனால் குழந்தை மேலும் அச்சப்பட்டு அழுவது போன்று காட்சிகள் உள்ளது. குழந்தை தனது நிழலை பார்த்து அச்சப்படுவது பார்க்க பாவமாக இருந்தாலும், வீடியோவை பார்க்கும் போது சிரிப்பாக இருப்பதாக பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com