search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arumuganeri"

    • திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி பேராசிரியை ஸ்ரீமதி தியாக ராஜன் பக்தி சொற்பொழிவு ஆற்றினார்.
    • 2-ம் நாள் காலையிலும், மாலையிலும் சிறப்பு பூஜையும், வில்லிசையை தொடர்ந்து இரவில் மாகாப்பு அலங்கார பூஜையும் நடந்தன.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி மெயின் பஜாரில் உள்ள பத்திர காளியம்மன் கோவில் கொடை விழா 3 நாட்கள் நடைபெற்றது.

    முதல் நாள் காலையில் மகா கணபதி ஹோமமும், தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து கோவிலின் முகப்பு மண்டபம் திறப்பு விழா நடந்தது. மாலையில் திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி பேராசிரியை ஸ்ரீமதி தியாக ராஜன் பக்தி சொற்பொழிவு ஆற்றினார். பின்னர் திரு விளக்கு பூஜையும், அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும் நடந்தன.

    2-ம் நாள் காலையிலும், மாலையிலும் சிறப்பு பூஜையும், வில்லிசையை தொடர்ந்து இரவில் மாகாப்பு அலங்கார பூஜையும் நடந்தன. நிறைவு நாளன்று மதியம் உச்சிகால பூஜையும்,அன்னதானமும் நடந்தது. இரவில் பிரம்மசக்தி அம்மன் கோவிலில் இருந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து கும்மி அடித்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அம்மனுக்கு நடுசாம பூஜையில் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நிறைவாக இன்று (புதன் கிழமை) காலையில் தீர்த்தவாரி அபிஷேகம் நடந்தது.

    நிகழ்ச்சிகளில் மேலாத்தூர் ராகவன், மாரிபாலன் ராஜா ராம், விஜயகுமார், பேரூராட்சி கவுன்சிலர் ரவிச்சந்திரன், சீனிவாசகன், முருகேசன் நாடார், சுந்தரலிங்கம், பாலசுப்பிர மணியன், ராமசாமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன்ராஜ், பொன் சின்னதுரை, கோட்டாளம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் கிழக்கத்திமுத்து, ஆதிசேஷன், அமிர்தராஜ், மூக்காண்டி, பார்வதி குமார், தூசிமுத்து, விஜயன், பாலகணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே குப்பை கிடங்கு அகற்றப்பட்ட நிலையில் அங்கு புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.
    • மேலும் இப்பகுதி மாணவ, மாணவிகளின் மேம்பாட்டிற்காக புதிய விளையாட்டு மைதானம் மற்றும் பயிற்சி அரங்கத்திற்கான இடத்தை கலெக்டர் பார்வையிட்டார்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு பணிகளை மேற்கொ ள்வதற்காக நேற்று ஆறுமுக நேரி பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்தார். அவரை பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாண சுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் வரவேற்றனர்.

    பின்னர் பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே குப்பை கிடங்கு அகற்றப்பட்ட நிலையில் அங்கு புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். மேலும் இப்பகுதி மாணவ, மாணவி களின் மேம்பாட்டிற்காக புதிய விளையாட்டு மைதானம் மற்றும் பயிற்சி அரங்கத்திற்கான இடத்தை பார்வையிட்டார்.

    நாசரேத் அருகே உள்ள கடம்பாகுளத்தின் உபரிநீர் வடிகால் வாய்க்கால் குரும்பூர், வரண்டியவேல், தலைவன்வடலி வழியாக கடலில் சென்று கலக்கிறது. முன்பு ஆறு போல் சென்ற இந்த வாய்க்கால் காலப் போக்கில் ஆக்கிரமிப்பு காரண மாக ஓடை போல் குறுகி விட்டது. இதனை மீண்டும் அகலப் படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணிகளையும் கலெக்டர் நேற்று பார்வை யிட்டு வாய்க் கால் ஆக்கிர மிப்பில் உள்ள வயல்கள் மற்றும் உப்பள ங்களை முழு மையாக அகற்றி விட அதிகாரி களுக்கு அறி வுறுத்தினார்.

    ஆய்வின் போது திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன், தாசில்தார் வா மணன், பொ துப் பணித்துறை தாமிரபரணி கோட்ட செயற் பொறியாளர் மாரியப்பன், ஆத்தூர் பேரூ ராட்சி தலைவர் கமால்தீன், விவசாய சங்கத் தலைவர் செல் வம், ஆத்தூர் நகர தி.மு.க. செயலாளர் முரு கானந்தம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி ரவிச் சந்திரன் ஆகி யோர் உடன் இருந்தனர்.

    • கடந்தவாரம் ஆறுமுகநேரியில் தண்டவாளத்தின் மீது அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்து போனார்.
    • எனவே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆறுமுகநேரி நகர தி.மு.க. சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    ஆறுமுகநேரி :

    நெல்லை-திருச்செந்தூர் இடையில் டீசல் என்ஜின் ரெயில் மாற்றப்பட்டு கடந்த சில மாதங்களாக மின்சார ரெயிலாக இயங்கி வருகிறது. இந்த நவீன மாற்றத்திற்கு ஏற்ப மக்கள் தங்களின் நடைமுறைகளையும் மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

    மின்சார ரெயில்

    அதாவது இத்தனை நாட்களாக டீசல் என்ஜின் ரெயில் பெரும் சத்தத்துடன் சென்று வந்தது. இதனால் எவ்வளவு அருகில் அந்த ரெயில் வருகிறது என்பதை கணித்து அதற்கு ஏற்ப தண்டவாளம் அருகில் இருந்து மக்கள் விலகிச் செல்வதற்கு பழக்கப்பட்டு இருந்தனர்.

    ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக மின்சார ரெயிலின் இயக்கம் உள்ளது.

    இந்த ரெயிலில் ஹாரன் சத்தத்தை தவிர என்ஜினில் இருந்து வேறு எந்த சத்தமும் கேட்பதில்லை. அதே நேரத்தில் ரெயிலின் வேகமும் கூடுதலாக உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் ஆறுமுகநேரியில் தண்டவாளத்தின் மீது அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்து போனார்.

    பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

    எனவே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆறுமுகநேரி நகர தி.மு.க. சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. அந்தப் பிரசுரத்தில் ஆறுமுகநேரி பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட பெருமாள்புரம், செல்வராஜபுரம், கீழ சண்முகபுரம், கமலாநேரு காலனி, காணியாளர் தெரு கிழக்கு, பூபாலா நகர், பி.எஸ். ராஜா நகர், பாரதிநகர், காமராஜபுரம் ஆகிய பகுதிகளில் தண்டவாளத்தின் இருபுறமும் வீடுகள் நிறைந்து காணப்படுகின்றன.

    மின்சார ரெயில்கள் இயங்கி வரும் இந்த சூழலில் சிறுவர்கள் தண்டவாளத்தின் அருகில் விளையாடுவதையும், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து பேசுவதையும் அவ்வழியே கவனமின்றி நடந்து செல்வதையும் அறவே தவிர்த்து விட வேண்டும். மேலும் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் வருகிறதா? என்று கவனித்து பின்னர் செல்ல வேண்டும். இதன்மூலம் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். மக்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என நகர தி.மு.க செயலாளர் நவநீத பாண்டியன் தலைமையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் தி.மு.க. நகரத் துணைச் செயலாளர்கள் அகஸ்டின், முத்தீஸ்வரி, மாவட்ட பிரதிநிதி பாலசுப்பிரமணியன், வார்டு கவுன்சிலர் மாரியம்மாள், மகளிர் அணி அந்தோணி லதா, மகளிர் தொண்டரணி இசக்கியம்மாள், தகவல் தொழில்நுட்ப பிரிவு கிஷோக், வார்டு செயலாளர்கள் சரவண வெங்கடேஷ், மாரிஸ்குமார், இளைஞர் அணி மிக்கல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விழாவுக்கு டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
    • ஆறுமுகநேரியை சேர்ந்த செல்வலீலாவுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    சாகுபுரம் அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். உதவி தலைவர் சுரேஷ், உதவி துணை தலைவர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரிமா மாவட்ட முதல் துணை ஆளுநர் அய்யாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் சீனியர் மேலாளரான ஒயிட் பீல்டு ஆர்தர் அரிமா சங்கத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். செயலாளர்களாக முத்துப்பாண்டியன், லோகா கிருஷ்ணசாமி, பொருளாளராக ராமசுப்பிரமணியன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். அனைவரும் உறுதிமொழியுடன் பதவி ஏற்று கொண்டனர்.

    தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஆறுமுகநேரியை சேர்ந்த செல்வலீலா என்பவருக்கு தையல் எந்திரமும், சிவராமகிருஷ்ணனுக்கு மருத்துவ உதவி தொகையும், முக்காணி அவிஸ்டன், மேலஆத்தூர் அருள்ராஜ், ஆத்தூர் சாக்ஷினி ஆகியோருக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டன. லையன் பிரகாஷ், சுப்பிரமணியன், பொன் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் காயல்பட்டினத்தில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சி கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் தமிழ்க்குட்டி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    ஆறுமுகநேரி:

    மத்திய பா.ஜ.க. அரசு வலியுறுத்தும் பொது சிவில் சட்டத்தை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் காயல்பட்டினத்தில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் யாசர் அராபத் தலைமை தாங்கினார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் தமிழ்க்குட்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் மீனவர் அணி மாநில துணை செயலாளர் மங்கை சேகர், உடன்குடி ஒன்றிய செயலாளர் தமிழ்வாணன், சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்பரிதி, காயல்பட்டினம் புறநகர் பகுதி செயலாளர் அம்பேத், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் முன்னோடி தமிழன், காயல்பட்டினம் நகர பொருளாளர் ரத்தினபுரி வாசு, உடன்குடி ஒன்றிய பொருளாளர் டேவிட் ஜான்வளவன், திருச்செந்தூர் ஒன்றிய துணை செயலாளர் செஞ்சுடர், சாத்தான்குளம் ஒன்றிய துணை செயலாளர் சுரேந்தர், சமூக நல்லிணக்கப் பேரவை திருச்செந்தூர் ஒன்றிய துணை அமைப்பாளர் ராம்குமார், காயல்பட்டினம் நகர அமைப்பாளர் இசக்கிமுத்து, காயல்பட்டினம் நகர பொறுப்பாளர்கள் மாணிக்கராஜ், மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இஸ்லாமிய ஜனநாயக பேரவை காயல்பட்டினம் நகர அமைப்பாளர் நாகூர் மீரான் நன்றி கூறினார்.

    • ராஜமன்னியபுரம் கடையின் கட்டிடத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.
    • தூய்மை ஆக்கப்பட்டுள்ள இடத்தை கனிமொழி எம்.பி.யும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் பார்வையிட்டனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரியில் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 2 புதிய ரேஷன் கடைகள் கட்டப்பட்டன.

    ரேஷன்கடைகள் திறப்பு

    தலா ரூ. 13.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ராஜமன்னியபுரம் கடையின் கட்டிடத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். மடத்துவிளை கடையின் கட்டிடத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

    விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தி.மு.க செயலாளர் நவநீத பாண்டியன் வரவேற்று பேசினார்.

    கனிமொழி எம்.பி. ஆய்வு

    பின்னர் பேரூராட்சி அலுவலகத்தின் எதிரே முன்பு குப்பை கிடங்காக இருந்து தற்போது தூய்மை ஆக்கப்பட்டுள்ள இடத்தை கனிமொழி எம்.பி.யும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் பார்வையிட்டனர். அந்த இடத்திற்கான மேம்பாட்டு திட்டங்கள் குறித்து கேட்டறிந்தனர்.

    நிகழ்ச்சிகளில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன், தாசில்தார் வாமணன், தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஆவின் தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், ஆழ்வை ஒன்றிய சேர்மன் ஜனகர், ஆதவா அறக்கட்டளை நிறுவனர் பாலகுமரேசன், வார்டு கவுன்சிலர்கள் வெங்கடேஷ், தயாவதி, சிவக்குமார், ஆறுமுகநயினார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேர்தல்களின்போது ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்த வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக வெகு தூரம் செல்ல வேண்டியுள்ளது.
    • அதிலும் குறிப்பாக முதியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் கூடுதலாக சிரமங்கள் உள்ளன.

    ஆறுமுகநேரி:

    சமூக ஆர்வலரும், ஆறுமுக நேரி நகர அ.தி.மு.க. முன்னாள் செய லாளருமான அமிர்தராஜ், தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    சிறப்பு நிலை பேரூ ராட்சியான ஆறுமுக நேரியின் 10-வது மற்றும் 17-வது வார்டுகளில் நடராஜநகர், பாரதிநகர், அடைக்கலாபுரம் சாலை, காமராஜபுரம் ஆகிய பகுதிகள் உள்ளன.

    தேர்தல்களின்போது இப்பகுதியை சேர்ந்த வாக்காளர்கள் வாக்களிப்ப தற்காக வெகு தூரம் செல்ல வேண்டியுள்ளது. இங்கிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மடத்துவிளை சந்தன சம நடுநிலைப்பள்ளி, ராஜமன்னியபுரம் பள்ளி மற்றும் முத்து கிருஷ்ணா புரம் தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் வாக்குச் சாவடிகளுக்கு செல்வதில் மிகுந்த சிரமங்கள் உள்ளன.

    அதிலும் குறிப்பாக முதியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் கூடுதலாக சிரமங்கள் உள்ளன. இதன் விளைவாக வாக்குப்பதிவின் சதவீதம் குறைகிறது. ஆகவே இப்பகுதி மக்களின் சிரமங்களை தவிர்க்க ஆறுமுக நேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக வாக்குச் சாவடி களை அமைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • ஆறுமுகநேரியின் வட பகுதியில் உள்ள பொதுமக்கள் பஸ்சிற்காக வெகுதூரம் நடந்து வர வேண்டிய நிலை உள்ளது.
    • விழிப்புணர்வு நடவடிக்கையாக, ஸ்டேட் பாங்க் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்வதற்கான அரசாணை நகல் அவ்வழியே சென்ற அரசு பஸ்களின் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களிடம் வழங்கப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி - திருச்செந்தூர் வழித்தடத்தில் சுமார் 3 கிலோமீட்டர் தூர சாலை ஆறுமுகநேரி பேரூ ராட்சியின் எல்லைக்குள் அடங்கி உள்ளது.

    7 இடங்களில் பஸ் நிறுத்தங்கள்

    இங்கு 7 இடங்களில் பஸ் நிறுத்தங்கள் உள்ளன. ஆனால் பெரும்பாலான பஸ்கள் மெயின் பஜார் சந்திப்பு நிறுத்தத்தில் மட்டுமே நின்று செல்கின்றன. குறிப்பாக இந்த வழியில் இயங்கும் சுமார் 135 முறை இயங்கும் அரசு பஸ்கள் அனைத்தும் சந்திப்பு நிறுத்தத்தில் மட்டுமே நின்று செல்கின்றன.

    இதனால் ஆறுமுகநேரியின் வட பகுதியில் உள்ள பொது மக்கள் பஸ்சிற்காக வெகு தூரம் நடந்து வர வேண்டிய நிலை உள்ளது. இல்லை யென்றால் ஆட்டோவிற்கு செலவு செய்ய வேண்டி உள்ளது.

    இத்தனைக்கும் இப்பகுதி யில் தான் போலீஸ் நிலையம், சந்தை, தபால் நிலையம், ெரயில் நிலையம், சிவன் கோவில், 3 திருமண மண்ட பங்கள் ஆகியவை உள்ளன.

    மாலைமலரில் செய்தி

    இந்நிலையில் வடக்கு பஜார் அம்மன் கோவில், மத்திய பஜார் ஸ்டேட் பாங்க் ஆகிய நிறுத்தங்களில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல அரசாணை இருந்தும் அங்கு பஸ்கள் நிற்காமல் செல்வது பற்றி கடந்த 7-ந் தேதி 'மாலைமலர் ' நாளிதழில் விரிவான செய்தி வெளியாகி யிருந்தது. இதனை கவனத்தில் எடுத்து பரிசீலனை செய்த திருச் செந்தூர் அரசு போக்கு வரத்து கழக பணிமனை அதிகாரிகள் உடனடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.

    அதன்படி ஸ்டேட் பாங்க் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்ல சம்பந்தப்பட்ட டிரைவர்கள் மற்றும் கன்டக்டர்களுக்கு அறிவுரை கள் வழங்கியுள்ளனர். மேலும் இதனை கண்காணிக்கும் நடவடிக்கை யில் செக்கிங் இன்ஸ் பெக்டர்கள் 2 பேர் ஈடுபட்டுள்ளனர். இதனை பயணிகள் பாராட்டி வரு கின்றனர்.

    இதனிடையே விழிப்பு ணர்வு நடவடிக்கையாக, ஸ்டேட் பாங்க் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்வதற்கான அரசாணை நகல் அவ்வழியே சென்ற அரசு பஸ்களின் டிரைவர்கள் மற்றும் கன்டக்டர்களிடம் வழங்கப் பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலர்களான தங்கமணி, அமிர்தராஜ் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.

    • காயல்பட்டினம் தென்பாகம் வருவாய் கிராம அலுவலர் மோகன் பிரபாகர் இது குறித்து ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • அங்கு இறந்து கிடந்தவர் 65 வயது மதிக்கத்தக்க ஆண் என்பதும், இறந்து சுமார் 20 நாட்கள் ஆகி இருக்கலாம் என்பதும் தெரிகிறது.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் அருணாச்சலபுரத்திற்கும்-கொம்புதுறைக்கும் இடையில் அடர்ந்த உடைமர காட்டுப்பகுதி உள்ளது. இங்கு அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக நேற்று தகவல் பரவியது.

    காயல்பட்டினம் தென்பாகம் வருவாய் கிராம அலுவலர் மோகன் பிரபாகர் இது குறித்து ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்து கிடந்தவர் 65 வயது மதிக்கத்தக்க ஆண் என்பதும், இறந்து சுமார் 20 நாட்கள் ஆகி இருக்கலாம் என்பதும் தெரிகிறது.

    மேலும் அரக்கு கலர் சட்டை அணிந்த நிலையிலும், அருகில் அவிழ்ந்த நிலையில் லுங்கியும் கிடந்தன. அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்?காட்டிற்குள் வந்து திசை தெரியாமல் தவித்து மயங்கி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்கிற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • இதே மின் கம்பத்திலிருந்து அருகில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கான மின் இணைப்புகளின் மூலம் மின் சப்ளையும் தொடர்கிறது.
    • கேபிள் வயர் தாழ்வாக கிடந்துள்ள நிலையில் அவ்வழியாக சென்ற மினி லாரி ஒன்றில் கேபிள் வயர் சிக்கி இழுக்கப்பட்டதால் இந்த மின் கம்பம் ஒடிந்து சரிந்தது தெரிய வந்துள்ளது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி மெயின் பஜார் சாலை ஓரமாக மின் கம்பங்கள் உள்ளன. இவற்றில் மத்திய பஜார் சந்தைக்கு எதிர்ப்புறம் உள்ள கான்கிரீட் மின் கம்பம் ஒன்று நேற்று இரவு அடி பாகத்தில் முறிந்த நிலையில் அருகில் உள்ள கடை சுவரில் சாய்ந்தது. ஆனால் இதற்கான மின் கம்பியில் உயர் அழுத்த மின்சாரம் இன்னும் சென்று கொண்டிருக்கிறது.

    மேலும் இதே மின் கம்பத்திலிருந்து அருகில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கடைக ளுக்கான மின் இணைப்புகளின் மூலம் மின் சப்ளையும் தொடர் கிறது.

    பஸ் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில் அபாயகரமான நிலையில் இருக்கும் இந்த மின் கம்பத்தை உடனடியாக மாற்ற மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    மேலும் இந்த மின்கம்பத்தில் இருந்து அடுத்த மின் கம்பத்திற்கு இடையில் தடிமனான கேபிள் வயர் சென்றுள்ளது. அது தாழ்வாக கிடந்துள்ள நிலையில் அவ்வழியாக சென்ற மினி லாரி ஒன்றில் கேபிள் வயர் சிக்கி இழுக்கப்பட்டதால் இந்த மின் கம்பம் ஒடிந்து சரிந்தது தெரிய வந்துள்ளது.

    இதே போல் ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர் பகுதிகளில் மின் கம்பங்கள் வழியாக தாழ்வாக செல்லும் கேபிள் வயர்களால் மேலும் பல விபத்துக்கள் நடக்கும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    இதனை கருத்தில் கொண்டு மின் கம்பங்கள் வழியாக இதுபோன்ற கேபிள் வயர்கள் செல்வதை அகற்றவும், தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
    • ஆறுமுக நேரி ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரியில் மக்கள் நுகர்வோர் பேரவையின் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    பேரவையின் மாநில தலைவர் செல்வன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கொம்பையா, அமைப்புச் செயலாளர் தியாகராஜன், பொருளாளர் லட்சுமணன், அலுவலக முதன்மை செயலாளர் செல்வகுமார், துணைச் செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் லட்சுமணன் வரவேற்று பேசினார்.

    மாநில செயலாளர் கல்லை சிந்தா அறிமுக உரையாற்றினார். சாகுபுரம் டி.சி.டபுள்யூ. நிறுவன மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன், ஆழ்வை ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜனகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கொம்மடிக்கோட்டை கல்லூரி முதல்வர் அருள்ராஜ் பொன்னுதுரை, சென்னை பேராசிரியர் வனஜா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, தென்திருப்பேரை பேரூராட்சி துணைத் தலைவர் அமுதவல்லி, தனியார் நிறுவன மேலாண்மை இயக்குனர் பாக்கியராஜ் ஆகியோரும் பேசினர்.

    விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதன்படி டி.சி.டபுள்யூ. நிறுவன மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன், ஆழ்வை ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜனகர், ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணை தலைவர் கல்யாணசுந்தரம், ஏ.கே.எல். கூட்டுறவு பண்டகசாலை தலைவர் வெங்கடேஷ், சமூக சேவகர் அமிர்தராஜ், அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் மகராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், ஊராட்சி மன்ற தலைவர்களான ஆழ்வார்திருநகரி சாரதா பொன்இசக்கி, தென் திருப்பேரை மணிமேகலை ஆனந்த், வரண்டியவேல் வசந்தி ஜெயக்கொடி ஆகியோர் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

    ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பில் தானியங்கி சிக்னல் அமைத்து போக்குவரத்தை சீர் செய்யக் கோரியும், ஆறுமுக நேரி ரெயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைக்க வலியுறுத்தியும், காயல்பட்டினம் வடபாக வருவாய் எல்லையில் உள்ள ஆறுமுகநேரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளை ஆறுமுகநேரி கிராம வருவாய் என அரசாணை வெளியிட வலியுறுத்துவது. இது தொடர்பாக உண்ணாவிரதம் இருப்பது என்றும் தொழில் நிறுவனங்களுக்கு எதிராக செயல்படும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரியும் மூடப்பட்ட தொழிற்சாலைகளை விரைவில் திறக்க வலியு றுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பேரவையின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அப்துல்லா சாகிபு நன்றி கூறினார்.

    • காரைக்கால் அம்மையார் புனிதவதியாராக வாழ்ந்த போது சிவபெருமான் மாங்கனி வழங்கிய நிகழ்வை போற்றி சிறப்பு வழிபாடு நடந்தது.
    • இதன்படி திருவிளக்கு பூஜையும், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடந்தன.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் மாங்கனி திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று காலையில் 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார் புனிதவதியாராக வாழ்ந்த போது சிவபெருமான் மாங்கனி வழங்கிய நிகழ்வை போற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் இரவில் குருபூர்ணிமா தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இதன்படி திருவிளக்கு பூஜையும், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடந்தன. பூஜை வைபவங்களை அய்யப்ப பட்டர் நடத்தினார். இதில், தெரிசை அய்யப்பன், தங்கமணி, மோகன், கார்த்திகேயன், மண்டகப்படிதாரரான ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரசெல்வன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் மாங்கனி பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் மணியம் சுப்பையா செய்திருந்தார்.

    ×