என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாகுபுரம் அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
- விழாவுக்கு டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
- ஆறுமுகநேரியை சேர்ந்த செல்வலீலாவுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது.
ஆறுமுகநேரி:
சாகுபுரம் அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். உதவி தலைவர் சுரேஷ், உதவி துணை தலைவர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரிமா மாவட்ட முதல் துணை ஆளுநர் அய்யாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் சீனியர் மேலாளரான ஒயிட் பீல்டு ஆர்தர் அரிமா சங்கத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். செயலாளர்களாக முத்துப்பாண்டியன், லோகா கிருஷ்ணசாமி, பொருளாளராக ராமசுப்பிரமணியன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். அனைவரும் உறுதிமொழியுடன் பதவி ஏற்று கொண்டனர்.
தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஆறுமுகநேரியை சேர்ந்த செல்வலீலா என்பவருக்கு தையல் எந்திரமும், சிவராமகிருஷ்ணனுக்கு மருத்துவ உதவி தொகையும், முக்காணி அவிஸ்டன், மேலஆத்தூர் அருள்ராஜ், ஆத்தூர் சாக்ஷினி ஆகியோருக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டன. லையன் பிரகாஷ், சுப்பிரமணியன், பொன் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






