search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arumuganeri"

    • மாவட்ட பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் புளோரன்ஸ் சிறப்புரையாற்றினார்.
    • ஆதரவற்ற குழந்தைகளை கண்டறிந்து நிதி ஆதரவு திட்டத்தில் பயன்பெறச்செய்தல், போதை பொருள் ஒழிப்பு ஆகியவை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் முத்துமுகம்மது தலைமை தாங்கினார்.

    ஆணையாளர் குமார் சிங், துணைத்தலைவர் சுல்தான் லெப்பை ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் புளோரன்ஸ் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், கட்டாய கல்வி, குழந்தைகள் இல்லாத தம்பதியினருக்கு மாவட்ட பாதுகாப்பு குழுவை அணுகி அரசு வழிகாட்டுதலுடன் தத்தெடுப்பது, ஆதரவற்ற குழந்தைகளை கண்டறிந்து நிதி ஆதரவு திட்டத்தில் பயன்பெறச்செய்தல், போதை பொருள் ஒழிப்பு ஆகியவை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    காயல்பட்டினம் வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • ஆறுமுகநேரி மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் கடன் மேளா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பொதுமக்கள் அரசு சார்ந்த மானிய கடன்களை வாங்கி பயன்பெற வேண்டும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் கடன் மேளா நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தலின்படி நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கிளை மேலாளர் ஜெயசீலி ஜூலி யட் தலைமை தாங்கினார்.

    இதில் வங்கியின் வாடிக்கையாளர்கள் 35 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டன. சுய உதவி குழு ஒன்றுக்கு ரூ.12 லட்சம் கடனாக வழங்கப்பட்டது.

    மேலும் தனியார் குழுக்க ளிடம் அதிக வட்டிக்கு கடனாக பணம் வாங்கி கஷ்டப்படுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், அரசு சார்ந்த மானிய கடன்களை வாங்கி பயன்பெற வேண்டும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. குறைந்த தொகையிலான காப்பீடு திட்டம் பற்றியும் விளக்கி கூறப்பட்டது.

    நிகழ்ச்சியில் வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சந்தன கிருஷ்ணன், பணியாளர் மேக்தலின் பிரீத்தி, காசாளர் பத்மாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொழிலதிபர் ஜானகிராமன் மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
    • மாணவர்கள் பள்ளி பருவத்திலேயே தங்களுக்கான லட்சியத்தை மனதில் நிலை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று உதவி கலெக்டர் குருச்சந்திரன் பேசினார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி கா.ஆ. மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளியின் கல்வி சங்க தலைவர் முகமது அப்துல்காதர் தலைமை தாங்கினார். பொருளாளர் பாஸ்கரன், துணைத் தலைவர்கள் கணேசன், பசீர் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன் வரவேற்று பேசினார்.

    ரூ. 500 கோடி

    தொழிலதிபர் ஜானகிராமன் மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தற்போது கல்வி பயிலும் மாணவ-மாணவிகள் தமிழ் வழியில் கற்றாலும் ஆங்கில வழியில் கற்றாலும் அவர்களுக்கு எழுத்து திறமையில் இன்னும் மேம்பட வேண்டிய நிலையில் உள்ளனர். பொதுவாக கல்லூரியில் மேற்படிப்பை முடித்த பின்னர் போட்டித் தேர்வுக்கான முனைப்பில் ஈடுபடுவது வழக்கத்தில் உள்ளது. இதற்கான பயிற்சி நிறுவனங்களின் மூலம் ஆண்டிற்கு ரூ. 500 கோடிக்கு மேல் புழங்கி வருகிறது.

    வாசிப்பு திறன்

    இப்படியான நிறுவனங்களும் மாணவர்க ளை 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடங்களையே மீண்டும் கற்க வைக்கின்றனர். அப்போது பழைய புத்தகங்களை தேடி மாணவர்கள் அலைய நேரிடுகிறது. இதனை தவிர்க்க தொடக்க காலத்தில் இருந்தே பள்ளி மாணவ- மாணவிகள் உரிய படங்களை கவனமாக கற்றுக் கொள்ள வேண்டும்.

    பாடப் புத்தகங்களை மட்டுமின்றி நல்ல கதை புத்தகங்கள் மற்றும் பொது அறிவு புத்தகங்களையும் படிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாள்களை கண்டிப்பாக தினசரி படிக்க வேண்டும். இதன்மூலம் வாசிப்பு திறன் மேம்பட்டு மொழி அறிவும் பொது அறிவு இயல்பாகவே கிடைத்துவிடும்.

    மாணவர்கள் பள்ளி பருவத்திலேயே தங்களுக்கான லட்சியத்தை மனதில் நிலை நிறுத்தி கொள்ள வேண்டும். கலெக்டர், டாக்டர் போன்ற பதவிகள் மட்டுமின்றி அரசு துறையில் உதவி கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு போன்ற வரிசைகளிலும் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. மத்திய அரசின் வேலைகளில் தமிழர்கள் குறைந்த அளவிலேயே உள்ளனர். இந்த நிலையை மாற்றும் வகையில் நீங்கள் தரமான கல்வியை கடினமான முயற்சியால் பெற்று வளர்ச்சியை எட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் பள்ளியின் கல்வி குழு நிர்வாக உறுப்பினர்கள் அமிர்தராஜ், ராமசாமி, சண்முக கனி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    • காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை வளாகத்தில் மெகா என்கிற பொது நல அமைப்பின் சார்பில் 26-வது ரத்த தான முகாம் நடைபெற்றது.
    • மெகா அமைப்பின் சார்பில் இது வரை நடந்த 26 முகாம்களிலும் மொத்தம் ஆயிரத்து 617 பேர் ரத்ததானம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை வளா கத்தில் மெகா என்கிற பொது நல அமைப்பின் சார்பில் 26-வது ரத்த தான முகாம் நடைபெற்றது.

    திருச்செந்தூர் அரசு பொது மருத்துவமனையின் ரத்த வங்கியுடன் இணைந்து நடத்திய இந்த முகாமில் மெகா அமைப்பின் நிர்வாகிகள் முஜாஹித் அலி, நூகு, புகாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முத்து இஸ்மாயில், அப்துல் வாஹித், சதக்கத்துல்லாஹ் ஆகியோர் பங்கேற்றனர்.

    முகாமில் 5 பெண்கள் உள்பட 46 பேர் ரத்ததானம் செய்தனர். டாக்டர் பாவனாச குமார் தலைமை யிலான குழுவினர் இதற் கான பணிகளை மேற் கொண்டனர். ரத்ததானம் செய்த அனைவருக்கும் முகாமில் சான்றிதழ் வழங்கப்பட்டது. மெகா அமைப்பின் சார்பில் இது வரை நடந்த 26 முகாம் களிலும் மொத்தம் ஆயிரத்து 617 பேர் ரத்ததானம் செய்து ள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    • லட்சுமி மாநகரம் மாரியம்மன் கோவில் சார்பில் ராமாயண ஏடு வாசிப்பு 31 நாட்கள் நடைபெற்றது.
    • இதன் நிறைவாக இன்று காலை ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரியில் ஆடி மாதம் தினசரி இரவுதோறும் ராமாயண ஏடு வாசிப்பு நடைபெறுவது பழமையான வழக்கம். இதன்படி லட்சுமி மாநகரம் மாரியம்மன் கோவில் சார்பில் ராமாயண ஏடு வாசிப்பு 31 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவாக இன்று காலை ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.இதற்கான சிறப்பு வழிபாடு நிகழ்ச்சியில் பூஜகர் பால் பாண்டியன், மாரியம்மன் கோவில் நிர்வாகிகள் ராதா கிருஷ்ணன், தனசேகரன், தங்கபாண்டியன், அம்மனின் அருட்பாலகர்கள் சக்திவேல், கந்தப்பன், நகர் நல மன்ற தலைவர் பூபால் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் ஆறுமுகநேரி ஸ்ரீ ராமலட்சுமி அம்மன் கோவில் சார்பிலும், கீழநவ்வலடிவிளை நாராயண சுவாமி கோவிலிலும் பட்டாபிஷேக விழா நடந்தது.

    பேயன்விளை ராமர் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் தங்க கண்ணன் சிறப்பு பூஜையை நடத்தினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் கோபிகிருஷ்ணன் உள்பட பலர் செய்திருந்தனர்.

    • பேரூராட்சி நிர்வாக அதிகாரி கணேசன் தலைமையில் பணியாளர்கள் கீழநவ்வலடிவிளை, கீழசண்முகபுரம் ஆகிய பகுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
    • தெரு பைப்புகளில் இருந்து அதிகப்படியான குடிநீரை அபகரிக்க பயன்படுத்திய பிளாஸ்டிக் டியூப்புகளை பறிமுதல் செய்தனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் இருந்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதைத் தவிர ஒவ்வொரு தெருக்களிலும் அந்தந்த பகுதி மக்களின் வசதிக்காக பொது குடிநீர் குழாயும் வைக்கப்பட்டுள்ளன. வீடுகளில் தனியாக குடிநீர் இணைப்பு பெறாத மக்கள் இந்த தெரு பைப்புகள் மூலம் குடிநீர் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இப்படியான தெரு பைப்புகளில் நேரடியாக நீளமான டியூப்புகளை பொருத்தி சிலர் தங்களின் வீடுகளுக்கும், வீட்டின் தோட்டங்களுக்கும் அதிகப்படியான குடிநீரை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் வந்தன. இப்படி முறைகேடாக குடிநீர் எடுப்பது தவறான செயல் என்றும், இதனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆறுமுகநேரி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனபோதிலும் தெரு பைப்புகளில் இருந்து டியூப்புகளின் மூலம் அதிகப்படியான குடிநீரை அபகரிக்கும் செயல் தொடர்ந்து வந்தது.

    இந்த நிலையில் பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாணசுந்தரம் அறிவுறுத்தலின் பேரில் நேற்று அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதன்படி பேரூராட்சி நிர்வாக அதிகாரி கணேசன் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் கார்த்திக் மற்றும் பணி யாளர்கள் பெரியான்விளை, செல்வராஜபுரம், கீழநவ்வலடிவிளை, கீழசண்முகபுரம் ஆகிய பகுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    அப்போது தெரு பைப்புகளில் இருந்து அதிகப்படியான குடிநீரை அபகரிக்க பயன்படுத்திய பிளாஸ்டிக் டியூப்புகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இதே போல் சோதனை நடவடிக்கை செய்யப்படும் என்றும், விதிமுறையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த இடத்தில் கொட்டப்பட்டு வந்தன.
    • மின்மயான பணிகள் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி பேரூராட்சியின் பொது பயன்பாட்டிற்காக நகர தி.மு.க செயலாளரான நவநீத பாண்டியன் தனக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தை கடந்த ஆண்டு தானமாக வழங்கினார். இதன் அன்றைய மதிப்பு சுமார் 20 லட்சம் ஆகும்.

    ஆறுமுகநேரி ரெயில் நிலையத்திற்கு சற்று தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்தில் பேரூராட்சி யில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன. இதனிடையே அந்த இடத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்படி பூங்காவுடன் கூடிய நவீன மின் மயானம் அமைக்க ரூ. 1 கோடியே 41 லட்சத்து 60 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் நேற்று தொடங்கப்பட்டன.

    இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள பெரியான்விளை, செல்வ ராஜபுரம், பெருமாள்புரம், கணேசபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆழ்வை ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் திரண்டு இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டக் குழுவினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். உடனடியாக மின்மயான பணிகள் நிறுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    இந்தப் போராட்டம் காரணமாக திருச்செந்தூர்- தூத்துக்குடி நெடுஞ்சாலை யில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    • தமிழ்நாடு நுகர்வோர் பேரவையின் மாநில தலைவர் மோகனசுந்தரம் கலந்து கொண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம் ஆகியவை பற்றி பேசினார்.
    • முன்னதாக சுதந்திரப் போராட்ட தியாகி கே.டி.கோசல்ராம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பில் நுகர்வோர் விழிப்புணர்வு தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. திருச்செந்தூர் வட்டார ஆலோசகர் பழனிவேல் நாடார் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் நகர தலைவர் ராஜமாதங்கண், ஆறுமுகநேரி நகர அமைப்பாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு நுகர்வோர் பேரவையின் மாநில தலைவர் மோகனசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம் ஆகியவை பற்றி பேசினார். முன்னதாக சுதந்திரப் போராட்ட தியாகியும், முன்னாள் எம்.பி.யுமான கே.டி.கோசல்ராம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. திருச்செந்தூர் வட்டார தலைவர் ரஹ்மத்துல்லா நன்றி கூறினார்.

    • கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் முகம்மது அபூபக்கர் தொடக்க உரையாற்றினார்.
    • காயல்பட்டினத்தில் தாலுகா துணை அலுவலகம் அமைக்க வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஆறுமுகநேரி:

    பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் கலவரத்திற்கு காரணமானவர்களை கண்டித்தும் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    நகர தலைவர் நூகு சாகிப் தலைமை தாங்கினார். மாவட்ட நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் அபூசாலிஹ் வரவேற்று பேசினார். மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் முகம்மது அபூபக்கர் தொடக்க உரையாற்றினார். திராவிடர் கழக பிரச்சார அணி மாநில செயலாளர் வக்கீல் அருள்மொழி, தமிழ் மையம் அமைப்பின் நிறுவ னர் ஜெகத் கஸ்பர் ராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் வக்கீல் பெரோஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    முஸ்லிம் லீக் மாநில துணைச்செயலாளர் இப்ராஹீம் மக்கீ, தூத் துக்குடி மாவட்ட தலைவர் மீராசா மரைக்காயர், செய லாளர் மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட பொருளாளர் திரேஸ்புரம் மீராசா, கவுரவ ஆலோசகர் வாவு சம்சுதீன், தேசிய கவுன்சில் உறுப்பினர் முகம்மது ஹசன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியின் பொறுப்பாளர்களான பாவா ஷேக்னா லெப்பை, அகமது ஜருக், மஹ்மூத் லெப்பை, அகமது சலாஹுத்தீன், முகம்மது முஹ்யித்தீன், முகம்மது சித்தீக், சுகைல் இப்ராஹீம் உள்பட பலர் கலந்து கொண்டனர். காயல்பட்டினத்தில் 2-வது குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க கோரியும், ரெயில் நிலையத்தில் நடைபாதையை உயர்த்தக் கோரியும், நகராட்சியின் வார்டு மறுவரையறை குளறுபடிகளை நீக்க கோரியும், காயல்பட்டினத்தில் தாலுகா துணை அலுவலகம் அமைக்க வலியுறுத்தியும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைச்செயலாளர் முகம்மது இஸ்மாயில் புகாரி நன்றி கூறினார்.

    • ஆறுமுகநேரியில் நகர தி.மு.க. செயலாளரின் அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
    • புதிய உறுப்பினர்களை சேர்த்தவர்களை பாராட்டி தங்க காசுகள் மற்றும் வெள்ளி காசுகள் வழங்கப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சியில் தி.மு.க.வை சேர்ந்த கலாவதி கல்யாண சுந்தரம் தலைவராகவும், கல்யாணசுந்தரம் துணைத் தலைவராகவும் செயல்பட்டு வருகின்றனர்.

    தங்க காசுகள்

    இவர்கள் கடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்ற போது அனைத்து வார்டு கவுன்சிலர்களுக்கும் தங்களின் சொந்த செலவில் இருசக்கர வாகனம் வழங்கினர். இது மாநில அளவில் பேசப்பட்டது.

    இந்நிலையில் தற்போது முன்னாள் முதல் -அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க. வில் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. இதன்படி ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதியில் அதிக உறுப்பி னர்களை சேர்த்த தி.மு.க .வை சேர்ந்த 6 பேருக்கு தங்க காசுகளையும், 20 பேருக்கு வெள்ளி காசுகளையும் நகர தி.மு.க. செய லாளர் நவநீத பாண்டியன் வழங்கி உள்ளார்.

    அலுவலகம் திறப்பு

    ஆறுமுகநேரியில் நகர தி.மு.க. செயலாளரின் அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நகரச் செயலாளர் நவநீத பாண்டி யன் தலைமை தாங்கினார். நகர இளைஞரணி அமைப் பாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட பிரதிநிதி ராதா கிருஷ்ணன் வரவேற்று பேசினார். பேரூராட்சி துணைத் தலைவர் கல்யாண சுந்தரம் அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்பு ரையாற்றினார்.

    தொடர்ந்து அவர் கட்சிக்கு அதிகப்படியான புதிய உறுப்பினர்களை சேர்த்தவர்களை பாராட்டி தங்க காசுகள் மற்றும் வெள்ளி காசுகளை வழங்கி னார். அதன்படி ஜான் பாஸ்கர், சரவண வெங்க டேஷ், மகேஷ், செல்வம், ஜெயக்குமார், முகேஷ்குமார் ஆகியோர் தங்க காசுகளை பெற்றுக் கொண்டனர். மேலும் 20 பேருக்கு வெள்ளி காசுகள் வழங்கப்பட்டன.

    விழாவில் வருகிற 17-ந்தேதி ராமேஸ்வரத்தில் நடைபெற இருக்கும் பி.எல்.ஏ.2 பயிற்சி பாசறை கூட்டத்தில் தகுதியான அனைவரும் தவறாமல் கலந்து கொள்வதென்று வலியுறுத்தப்பட்டது. விழாவில் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தெற்கு மாவட்ட துணை அமைப் பாளர் மகேஷ், 14-வது வார்டு கவுன்சிலர் நிர்மலா தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வீட்டின் எதிரே மேய்ந்து கொண்டிருந்த சாந்தகுமார் என்பவர் ஆடுகளில் ஒன்றை திடீரென காணவில்லை.
    • அவர் அக்கம் பக்கத்தில் தேடிய போது 2 வாலிபர்கள் ஆட்டை தூக்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் செல்வதாக சிலர் கூறியுள்ளனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி ராஜமன்னியபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சாந்தகுமார் (வயது42). இவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று காலை சாந்தகுமார் வழக்கம் போல தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு திறந்து விட்டுள்ளார்.

    ஆடு திருட்டு

    வீட்டின் எதிரே மேய்ந்து கொண்டிருந்த அவரது ஆடுகளில் ஒன்றை திடீரென காணவில்லை. அவர் அக்கம் பக்கத்தில் தேடிய போது 2 வாலிபர்கள் ஆட்டை தூக்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் செல்வதாக சிலர் கூறியுள்ளனர்.

    உடனே சுதாரித்துக் கொண்ட சாந்தகுமார் ஆறுமுகநேரி சந்தைக்கு விரைந்து சென்றுள்ளார். அங்கு தனது ஆட்டை இரு நபர்கள் ரூ. 10 ஆயிரத்துக்கு விற்பனை செய்ய வேறு ஒருவரிடம் பேசி கொண்டிருப்பதை கண்டார்.

    2 பேர் கைது

    உடனடியாக இதுபற்றி அவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் துரிதமாக செயல்பட்டு ஆடு திருடிய அந்த 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் காயல்பட்டினம் ரத்தினபுரியை சேர்ந்த கார்த்திக்ராஜா (33), முத்துசாமி (34) என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ஆடு மீட்கப்பட்டது. ஆடு திருடுவதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • விவசாய சங்க இ-சேவை மையத்திற்கு சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அங்குள்ள பதிவேட்டை பார்வையிட்டு அலுவலர்களிடம் விளக்கம் கேட்டார்.
    • அப்போது, திருச்செந்தூர் உதவி கலெக்டர் குரு சந்திரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்ப பதிவு முகாம்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். விவசாய சங்க இ-சேவை மையத்திற்கு சென்ற அவர் அங்குள்ள பதிவேட்டை பார்வையிட்டு அலுவலர்களிடம் விளக்கம் கேட்டார்.

    அப்போது, திருச்செந்தூர் உதவி கலெக்டர் குரு சந்திரன், தாசில்தார் வாமனன், துணை தாசில்தார் ஜானகி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, தி.மு.க. மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    முன்னதாக ஆறுமுகநேரி பேரூராட்சி துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், நகர தி.மு.க. செயலாளர் நவநீத பாண்டியன், மாவட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணன், ஏ.கே.எல். கூட்டுறவு சங்க தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு வரவேற்பு அளித்தனர்.

    ×