search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Road Blocking"

    • பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த இடத்தில் கொட்டப்பட்டு வந்தன.
    • மின்மயான பணிகள் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி பேரூராட்சியின் பொது பயன்பாட்டிற்காக நகர தி.மு.க செயலாளரான நவநீத பாண்டியன் தனக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தை கடந்த ஆண்டு தானமாக வழங்கினார். இதன் அன்றைய மதிப்பு சுமார் 20 லட்சம் ஆகும்.

    ஆறுமுகநேரி ரெயில் நிலையத்திற்கு சற்று தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்தில் பேரூராட்சி யில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன. இதனிடையே அந்த இடத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்படி பூங்காவுடன் கூடிய நவீன மின் மயானம் அமைக்க ரூ. 1 கோடியே 41 லட்சத்து 60 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் நேற்று தொடங்கப்பட்டன.

    இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள பெரியான்விளை, செல்வ ராஜபுரம், பெருமாள்புரம், கணேசபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆழ்வை ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் திரண்டு இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டக் குழுவினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். உடனடியாக மின்மயான பணிகள் நிறுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    இந்தப் போராட்டம் காரணமாக திருச்செந்தூர்- தூத்துக்குடி நெடுஞ்சாலை யில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    • தினக்கூலி தொழிலாளர் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
    • ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சட்டப்படியான சம்பளம் வழங்க வேண்டும்

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டை ரவுண்டானா வில் சி.ஐ.டி.யு. சார்பில் இன்று சாலை மறியல் நடைபெற்றது.

    சி.ஐ.டி.யு. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர் மாரியப்பன், செல்லதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் முருகன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட தலைவர் பீர் முகம்மது ஷா, மாவட்ட இணை செயலாளர் சரவண பெருமாள், துணை தலைவர் சுடலைராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர்கள், தினக்கூலி துப்பரவு தொழிலாளர்களுக்கு தினசரி சம்பளமாக ரூ.730 நிர்ணயம் செய்ய வேண்டும், பல வருடங்கள் சுய உதவிக்குழு மூலம் பணி செய்யும் தினக்கூலி தொழிலாளர் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம்பளத்துடன் கூடிய வாரவிடுமுறை அளிக்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சட்டப்படியான சம்பளம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் மறியல் ஈடுபட்ட 170 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • 23-வது வார்டு பகுதி மக்கள் காட்சி மண்டபம் பகுதியில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டுடர்வகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு- வாக்குவாதம் ஏற்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 23-வது வார்டு பகுதியில் கடந்த 3 மாதத்திற்கு மேலாக கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

    சாலை மறியல்

    மேலும் பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்த முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுவதுடன் கலங்கலான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் அதனை பயன்படுத்தும் மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் 23-வது வார்டு பகுதி மக்கள் கலங்களான குடிநீருடன் இன்று நெல்லை - தென்காசி நெடுஞ்சாலையில் காட்சி மண்டபம் பகுதியில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் அவர்கள் மறியல் போராட்டத்தில் தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    போக்குவரத்து பாதிப்பு

    அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டுடர்வகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு- வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, 3 நாட்களுக்குள் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக நெல்லை- தென்காசி சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.

    • கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
    • மறியலில் ஈடுபட்ட பெண்களுடன் வள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் யூனியனுக்கு உட்பட்ட ஆ.திருமலாபுரம் பஞ்சாயத்தை சேர்ந்த ஒட்டகாரன்குடியிருப்பு, வள்ளியம்மாள்புரம், இந்திரா காலணி, திருமலாபுரம் கிராம பகுதிகளுக்கு கடந்த சில நாட்டகளாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து கிராம மக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் அதிருப்தி அடைந்த கிராமங்களை சேர்ந்த பெண்கள் இன்று காலிக்குடங்களுடன் ஆ.திருமலாபுரம் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு செல்லும் சாலையில் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் வள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சீராக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் புதிய போர் அமைத்து தருவதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • தேரை குளம் கிராமத்திற்கு கடந்த ஒரு மாத காலமாக சரியாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
    • இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது, பஞ்சாயத்து தலைவர் பிரமிளா ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் கள்ளிகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட தேரை குளம் கிராமத்திற்கு கடந்த ஒரு மாத காலமாக சரியாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து அப்பகுதி பெண்கள் இன்று காலிக்குடங்களுடன் வள்ளியூர்-திருச்செந்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வள்ளியூர் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது, தெற்கு கள்ளிகுளம் பஞ்சாயத்து தலைவர் பிரமிளா ஆகியோர் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது 2 நாட்களில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    ×