வள்ளியூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்

கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.மறியலில் ஈடுபட்ட பெண்களுடன் வள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை படத்தில் காணலாம்.
சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை படத்தில் காணலாம்.
Published on

வள்ளியூர்:

வள்ளியூர் யூனியனுக்கு உட்பட்ட ஆ.திருமலாபுரம் பஞ்சாயத்தை சேர்ந்த ஒட்டகாரன்குடியிருப்பு, வள்ளியம்மாள்புரம், இந்திரா காலணி, திருமலாபுரம் கிராம பகுதிகளுக்கு கடந்த சில நாட்டகளாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து கிராம மக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த கிராமங்களை சேர்ந்த பெண்கள் இன்று காலிக்குடங்களுடன் ஆ.திருமலாபுரம் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு செல்லும் சாலையில் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் வள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சீராக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் புதிய போர் அமைத்து தருவதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com