வள்ளியூர் அருகே குடிநீர் வழங்ககோரி பெண்கள் காலிகுடங்களுடன் மறியல்

தேரை குளம் கிராமத்திற்கு கடந்த ஒரு மாத காலமாக சரியாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது, பஞ்சாயத்து தலைவர் பிரமிளா ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மறியலில் ஈடுபட்ட பெண்களை படத்தில் காணலாம்.
மறியலில் ஈடுபட்ட பெண்களை படத்தில் காணலாம்.
Published on

வள்ளியூர்:

நெல்லை மாவட்டம் கள்ளிகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட தேரை குளம் கிராமத்திற்கு கடந்த ஒரு மாத காலமாக சரியாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து அப்பகுதி பெண்கள் இன்று காலிக்குடங்களுடன் வள்ளியூர்-திருச்செந்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வள்ளியூர் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது, தெற்கு கள்ளிகுளம் பஞ்சாயத்து தலைவர் பிரமிளா ஆகியோர் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது 2 நாட்களில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com