search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம்
    X

    கூட்டத்தில் கேரள மாநில முஸ்லிம் லீக் இளைஞரணி பொதுச்செயலாளர் பெரோஸ் பேசியபோது எடுத்த படம்.

    காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம்

    • கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் முகம்மது அபூபக்கர் தொடக்க உரையாற்றினார்.
    • காயல்பட்டினத்தில் தாலுகா துணை அலுவலகம் அமைக்க வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஆறுமுகநேரி:

    பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் கலவரத்திற்கு காரணமானவர்களை கண்டித்தும் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    நகர தலைவர் நூகு சாகிப் தலைமை தாங்கினார். மாவட்ட நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் அபூசாலிஹ் வரவேற்று பேசினார். மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் முகம்மது அபூபக்கர் தொடக்க உரையாற்றினார். திராவிடர் கழக பிரச்சார அணி மாநில செயலாளர் வக்கீல் அருள்மொழி, தமிழ் மையம் அமைப்பின் நிறுவ னர் ஜெகத் கஸ்பர் ராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் வக்கீல் பெரோஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    முஸ்லிம் லீக் மாநில துணைச்செயலாளர் இப்ராஹீம் மக்கீ, தூத் துக்குடி மாவட்ட தலைவர் மீராசா மரைக்காயர், செய லாளர் மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட பொருளாளர் திரேஸ்புரம் மீராசா, கவுரவ ஆலோசகர் வாவு சம்சுதீன், தேசிய கவுன்சில் உறுப்பினர் முகம்மது ஹசன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியின் பொறுப்பாளர்களான பாவா ஷேக்னா லெப்பை, அகமது ஜருக், மஹ்மூத் லெப்பை, அகமது சலாஹுத்தீன், முகம்மது முஹ்யித்தீன், முகம்மது சித்தீக், சுகைல் இப்ராஹீம் உள்பட பலர் கலந்து கொண்டனர். காயல்பட்டினத்தில் 2-வது குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க கோரியும், ரெயில் நிலையத்தில் நடைபாதையை உயர்த்தக் கோரியும், நகராட்சியின் வார்டு மறுவரையறை குளறுபடிகளை நீக்க கோரியும், காயல்பட்டினத்தில் தாலுகா துணை அலுவலகம் அமைக்க வலியுறுத்தியும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைச்செயலாளர் முகம்மது இஸ்மாயில் புகாரி நன்றி கூறினார்.

    Next Story
    ×