search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Town Panchayat Admistration"

    • பேரூராட்சி நிர்வாக அதிகாரி கணேசன் தலைமையில் பணியாளர்கள் கீழநவ்வலடிவிளை, கீழசண்முகபுரம் ஆகிய பகுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
    • தெரு பைப்புகளில் இருந்து அதிகப்படியான குடிநீரை அபகரிக்க பயன்படுத்திய பிளாஸ்டிக் டியூப்புகளை பறிமுதல் செய்தனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் இருந்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதைத் தவிர ஒவ்வொரு தெருக்களிலும் அந்தந்த பகுதி மக்களின் வசதிக்காக பொது குடிநீர் குழாயும் வைக்கப்பட்டுள்ளன. வீடுகளில் தனியாக குடிநீர் இணைப்பு பெறாத மக்கள் இந்த தெரு பைப்புகள் மூலம் குடிநீர் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இப்படியான தெரு பைப்புகளில் நேரடியாக நீளமான டியூப்புகளை பொருத்தி சிலர் தங்களின் வீடுகளுக்கும், வீட்டின் தோட்டங்களுக்கும் அதிகப்படியான குடிநீரை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் வந்தன. இப்படி முறைகேடாக குடிநீர் எடுப்பது தவறான செயல் என்றும், இதனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆறுமுகநேரி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனபோதிலும் தெரு பைப்புகளில் இருந்து டியூப்புகளின் மூலம் அதிகப்படியான குடிநீரை அபகரிக்கும் செயல் தொடர்ந்து வந்தது.

    இந்த நிலையில் பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாணசுந்தரம் அறிவுறுத்தலின் பேரில் நேற்று அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதன்படி பேரூராட்சி நிர்வாக அதிகாரி கணேசன் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் கார்த்திக் மற்றும் பணி யாளர்கள் பெரியான்விளை, செல்வராஜபுரம், கீழநவ்வலடிவிளை, கீழசண்முகபுரம் ஆகிய பகுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    அப்போது தெரு பைப்புகளில் இருந்து அதிகப்படியான குடிநீரை அபகரிக்க பயன்படுத்திய பிளாஸ்டிக் டியூப்புகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இதே போல் சோதனை நடவடிக்கை செய்யப்படும் என்றும், விதிமுறையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×