ஆறுமுகநேரி கூட்டுறவு வங்கியில் கடன் மேளா நிகழ்ச்சி

ஆறுமுகநேரி மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் கடன் மேளா நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுமக்கள் அரசு சார்ந்த மானிய கடன்களை வாங்கி பயன்பெற வேண்டும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆறுமுகநேரி  கூட்டுறவு வங்கியில் கடன் மேளா நிகழ்ச்சி
Published on

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் கடன் மேளா நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தலின்படி நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கிளை மேலாளர் ஜெயசீலி ஜூலி யட் தலைமை தாங்கினார்.

இதில் வங்கியின் வாடிக்கையாளர்கள் 35 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டன. சுய உதவி குழு ஒன்றுக்கு ரூ.12 லட்சம் கடனாக வழங்கப்பட்டது.

மேலும் தனியார் குழுக்க ளிடம் அதிக வட்டிக்கு கடனாக பணம் வாங்கி கஷ்டப்படுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், அரசு சார்ந்த மானிய கடன்களை வாங்கி பயன்பெற வேண்டும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. குறைந்த தொகையிலான காப்பீடு திட்டம் பற்றியும் விளக்கி கூறப்பட்டது.

நிகழ்ச்சியில் வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சந்தன கிருஷ்ணன், பணியாளர் மேக்தலின் பிரீத்தி, காசாளர் பத்மாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com