என் மலர்
நீங்கள் தேடியது "goat theft"
- இவரது வீட்டு தோட்டத்தில் கட்டியிருந்த 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த பேர்பெரியான் குப்பத்தை சேர்ந்தவர் ஏழுமலை. விவசாயி.இவரது வீட்டு தோட்டத்தில் கட்டியிருந்த 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இது குறித்து முத்தாண்டி குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்ததும் இரவு ரோந்து பணியில் இருந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைப் பாண்டியன், முத்தாண்டிகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், எஸ்.எஸ்.ஐ. கலியமூர்த்தி ஆகியோர் ஆடு திருடர்கள் தேடுதல் வேட்டையை தீவிரப் படுத்தினர்க.டலூர் வாரசந்தையில் வடலூர் போலீசார் ஆடுகள் விற்க முயன்ற 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து முத்தாண்டிக் குப்பம் போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்தனர்
விசாரணையில் பேர்பெரியான் குப்பம் அசோக்குமார் (வயது 22), கருக்கை பிரதாப் (17), கீழ்காங்கேயன்குப்பம் ஹரிஷ் (17) என்பது தெரிய வந்தது. இவர்கள் 3 பேரும் பேர்பெரியான் குப்பத்தை சேர்ந்தவர் ஏழுமலை வீட்டில் 2 ஆடுகளை திருடி சென்று வடலூர் சந்தையில் விற்க முயன்றது தெரிய வந்தது.இதனை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், 2 ஆடுகள் ஆகிவற்றை பறி முதல் செய்தனர்.
- ஆடு திருடும் கும்பல் மீது வழக்குப்பதிவு செய்ய மறுப்பதாக போலீஸ் சூப்பிரண்டிடம் சிவசாமி புகார் செய்தார்.
- கடந்த 9-ந் தேதி சொகுசு காரில் வந்த மர்ம கும்பல் காரில் ஆடுகளை தூக்கி சென்றுள்ளனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கண்டனி கிராமத்தை சேர்ந்தவர் சிவசாமி. இவர் ஊர், ஊராக சென்று ஆட்டு கிடை அமைத்து ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது காரைக்குடி அருகே உள்ள பாதரக்குடி கிராமத்தில் தற்காலிகமாக ஆட்டு கிடை அமைத்து ஆடுகளை மேய்த்து வருகிறார். இவரது ஆடுகள் மர்ம நபர்களால் திருடப்பட்டு வந்தது.
கடந்த 9-ந் தேதி சொகுசு காரில் வந்த மர்ம கும்பல் காரில் ஆடுகளை தூக்கி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிவசாமி காரை விரட்டி சென்றுள்ளார். ஆனால் தடுக்க முடியாத நிலையில் அந்த பகுதிகளில் பள்ளி மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது காரின் எண் மற்றும் பதிவாகியிருந்தது.
அதனை ஆதாரமாக கொண்டு குன்றக்குடி காவல் நிலையத்தில் சிவசாமி புகார் செய்தார்.
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கும் பதிவு செய்யவில்லை.
இதையடுத்து சிவசாமி மற்றும் கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் புகார் மனுவை அளித்தனர்.
- ஆடுகளை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.
- கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50 க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடு போயுள்ளது குறிப்பிடத்தக்கது.
காங்கயம் :
திருப்பூர் மாவட்டத்தில் முக்கால்வாசி மக்கள் விவசாயிகள். இவர்கள் அனைவரும் விவசாயம் மற்றும் ஆடு, மாடு, கோழிகள் வளர்ப்பையே பெரிதும் சார்ந்துள்ளனர். காங்கேயகம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தற்போது மானாவாரி நிலங்களில் ஆடுகள் வளர்ப்பதை தொழிலாக செய்து வருகின்றனர். இதில் நல்ல லாபம் கிடைப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் மானாவாரி நிலங்களில் ஆடுகள் வளர்ப்பின் மூலம் வருமானம் ஈட்டலாம் என விவசாயிகள் கணக்கு போட்டால், ஆடு திருடர்களின் கணக்கு வேறாக உள்ளது. விவசாயிகள் மானாவாரி நிலங்களில் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், நிலத்திலேயே மேய்ச்சலுக்கு பின் பட்டியில் அடைத்து வைக்கின்றனர்.
இவ்வாறு பட்டிகளில் அடைக்கப்படும் ஆடுகளை குறிவைத்து திருடர்கள் ஆடுகளை தொடர்ச்சியாக திருடி வருவதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். இந்நிலையில் காங்கயம் அருகே விவசாயி ஒருவரது பட்டியில் அடைத்து வைத்திருந்த 9 ஆடுகள் மற்றும் சேவல் ஒன்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா ஊதியூர் அருகே உள்ள நிழலி கிராமம், குட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ்(வயது40). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமாக 30 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் ஆடுகள் மேய்ச்சல் முடிந்த பின்பு மாலை அனைத்து ஆடுகளையும் தோட்டத்திலுள்ள பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
பின்னர் காலையில் வழக்கம் போல பட்டிக்கு சென்று பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பட்டியில் அடைத்து இருந்த 30 ஆடுகளில் 9 ஆடுகள் மற்றும் ஒரு சேவல் காணாமல் போயிருந்தது. அக்கம் பக்கத்தில் சென்று விசாரித்து பார்த்தும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
பட்டியை சுற்றி உள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த வேலிகளை அறுத்து விட்டு மர்ம நபர்கள் ஆடுகளை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஊதியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காங்கயம் தாலுகா பகுதியில் பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆடுகளை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.
இதுவரை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50 க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடு போயுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆடு திருட்டு விவசாயிகள் மத்திய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கடந்த சில நாட்களாக இந்த திருட்டு கும்பலை பிடிக்க போலீசார் தொடர் முயற்சி செய்தும் அந்த திருட்டு போலீசாரிடம் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. இதனால் போலீசார் இந்த திருட்டு கும்பலை கண்டறிய முடியாமல் திணறி வருகின்றனர்.
- 3 வாலிபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
- மேலும் அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் மற்றும் வரப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான நம்பியூர், பொலவபாளையம், மலையப்பாளையம், எம்மாம்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆடு மேய்க்கும் தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதிகளில் தொடர் ஆடு திருட்டு நடைபெற்று வந்தது.
கடந்த 19-ந் தேதி நல்லகட்டிபாளையம் பகுதியை சேர்ந்த மகேஷ் குமார் (32) என்பவரது பட்டியில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகள் திருடப்பட்டது சம்பந்தமாக வரப்பாளையம் போலீஸ் நிலையத்தில் மகேஷ்குமார் புகார் மனு கொடுத்திருந்தார்.
அதன் அடிப்படையில் நம்பியூர் மற்றும் வரப்பாளையம் போலீசார் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் வரபா ளையம் மற்றும் நம்பியூர் போலீசார் மலைய ப்பாளையம் இந்திரா நகர் காலனி பகுதியில் வாகன சோதனை செய்து கொண்டி ருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.
அப்பொழுது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் நம்பியூர் மற்றும் மலையப்பாளையம் பகுதியில் ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் பழங்கரை பகுதியை சேர்ந்த சேகர் (25) மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் நல்ல பிள்ளை பெற்றான் பகுதியை சேர்ந்த சூர்யா (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் 2 பேரும் ஆடுகளை திருடி திருப்பூர் மாவட்டம் கணக்கம் பாளையம் பகுதியில் கறிக்கடையில் வேலை செய்து வரும் சங்கர் (28) என்பவரிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து நேற்று நம்பியூர் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயரத் 3 வாலிபர்களையும் கைது செய்து கோபி 2-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- கடலூர் அருகே மோட்டார் சைக்கிளில் ஆடுகளை திருடி சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 2 நபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே அம்பலவாணன் பேட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50). இவர் தனது வீட்டின் எதிரில் 5 ஆடுகள் கட்டி வைத்திருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 2 பேர் திடீரென்று 2 ஆடுகளை திருடிகொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் ஆடுகள் சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்தபோது 2 பேர் மோட்டார் சைக்கிளில் சென்றதை பார்த்து, கட்டியாங்குப்பம் என்ற பகுதியில் அவர்களை மறித்து பிடித்தனர்.
பின்னர் 2 நபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் 2 நபர்களை விசாரணை செய்தனர் அப்போது கடலூர் சேடப்பாளையம் சேர்ந்த அருண் (வயது 23), சின்ன காரைக்காடு சேர்ந்தவர் கபாலீஸ்வரர் (வயது 24) என்பது தெரியவந்தது. இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.
- ஆடுகளை எண்ணிப் பார்த்தபோது 15 ஆடுகள் மட்டுமே இருந்தன.
- அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
சின்ன சேலம் அருகே உள்ள ஏராவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி . விவசாயி. இவர் ஆடுகளை மேய்த்து கொண்டு விவசாயம் பார்த்து வருகிறார். இந்நிலையில் தம்பி கொளஞ்சியப்பன் வீட்டு அருகே தனக்கு சொந்தமான 18 ஆடுகளை கட்டிவிட்டு ஆடு வெளியே செல்லாமல் இருக்க வலைகளை கட்டி நிறுத்தி விட்டு அருகில் உள்ளஅவருடைய வீட்டிற்கு வழக்கம்போல் தூங்கச் சென்றுள்ளார். நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் ஆடுகள் சத்தம் போட்டு உள்ளன.
சத்தத்தை கேட்டு வந்து பார்த்தபோது கார் ஒன்று நின்று கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கார் அருகே சென்ற போது கார் வேகமாக சென்றுவிட்டது. பிறகு ஆடுகளை எண்ணிப் பார்த்தபோது 15 ஆடுகள் மட்டுமே இருந்தன. மீதமுள்ள மூன்று ஆடுகள் மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து கிருஷ்ணமூர்த்தி கொடுத்தபுகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து ஆடு திருடி சென்றவர்களை சின்ன சேலம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- பனங்குளம் வடக்கு கிராமத்தில் வீட்டில் கட்டியிருந்த ஆட்டை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
- ஆடுகள் கத்தியதால் தூங்கியவர்கள் எழுந்து பார்த்த போது ஒரு கருப்பு நிற காரில் ஆட்டை தூக்கி வைத்துக் கொண்டு அறந்தாங்கி சாலையில் வேகமாக சென்றுள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் ஆடுகள் திருட்டு தொடர்ந்து கொண்டே உள்ளது. அதேபோல பனங்குளம் வடக்கு கிராமத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வீரமுத்து மகன் சிவக்குமார் (வயது 40) என்பவர் வீட்டில் கட்டியிருந்த ஆட்டை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
அப்போது ஆடுகள் கத்தியதால் தூங்கியவர்கள் எழுந்து பார்த்த போது ஒரு கருப்பு நிற காரில் ஆட்டை தூக்கி வைத்துக் கொண்டு அறந்தாங்கி சாலையில் வேகமாக சென்றுள்ளனர்.
இதையடுத்து அவர்களை ஒரு மோட்டார் சைக்கிளில் விரட்டிச் சென்றும் அந்த காரை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 6 ஆடுகள் பறிமுதல்
- அரக்கோணம் சிறையில் அடைத்தனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம் விவசாயி. தனது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் 13 ஆடுகளை அடைத்து வைத்து இருந்தார்.
காலை எழுந்து பார்த்தபோது கொட்டகையில் இருந்த ஆடுகள் திடீரென காணாமல் போனது. இது குறித்து மோகனசுந்தரம் நெமிலி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடு திருடியவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று நெமிலி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சிறுனமல்லி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபர் போலீசாரை கண்டதும் பைக்கை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை விடுத்து விரட்டி சென்று பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாகுவேடு பகுதியை சேர்ந்த சலாம் (வயது 26) எனவும், அவர் பல்வேறு இடங்களில் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் சலாமை கைது செய்து அவரிடமிருந்து 6 ஆடுகள் மற்றும் ரூ.6 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர் சலாமை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி அரக்கோணம் கிளை சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள மணப்பாடு புதுக்குடியேற்று கிராமத்தை சேர்ந்தவர் பொன்பாண்டி (வயது58). இவர் சொந்தமாக ஆடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று தனது ஆடுகளை குலசேகரன்பட்டினம் காட்டு பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டு விட்டு அங்குள்ள ஒரு மரத்தின் கீழ் நிழலுக்காக அமர்ந்து இருந்தார்.
அப்போது அங்கு ஆட்டோவில் வந்த இருவர் மேய்ச்சலில் இருந்த ஆடுகளை பிடித்து ஆட்டோவில் ஏற்றினர். இதைப் பார்த்த பொன்பாண்டி திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். இதையடுத்து அவ்வழியாக வந்தவர்கள் ஆட்டோவில் வந்த இருவரையும் மடக்கி பிடித்தனர். பின்பு அவர்களை குலசேகரன்பட்டினம் போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை இருவரிடமும் விசாரணை நடத்தினர்
விசாரணையில் அவர்கள் குலசேகரன்பட்டினம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த சுடலைமணி (35), அவரது நண்பர் உதயமார்த்தாண்ட கோவிலை சேர்ந்த ஆட்டோ டிரைவர் இசக்கிபாண்டி (35) என தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஐர்படுத்தினர்.