search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    செல்பி எடுப்பது போல் நடித்து ஆட்டோவில் ஆடு திருடிய சென்னை வாலிபர்கள்
    X

    செல்பி எடுப்பது போல் நடித்து ஆட்டோவில் ஆடு திருடிய சென்னை வாலிபர்கள்

    • மூதாட்டியிடம் சென்று நாங்கள் ஆட்டின் அருகில் நின்று செல்பி எடுக்க விரும்புவதாக வாலிபர்கள் தெரிவித்தனர்.
    • அதிர்ச்சி அடைந்த அந்த மூதாட்டி, திருடன்... திருடன்... என கூச்சலிட்டார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியை அடுத்த தமிழகப்பகுதியான கோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு மெயின்ரோடு அருகே மூதாட்டி ஒருவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக ஆட்டோவில் சென்ற வாலிபர்கள், அந்த மூதாட்டியிடம் சென்று, 'நாங்கள் ஆட்டின் அருகில் நின்று செல்பி எடுக்க விரும்புவதாக தெரிவித்தனர்.

    அதற்கு அந்த மூதாட்டி ஒப்புக்கொண்டார். பின்னர் அந்த வாலிபர்கள் ஆட்டின் அருகில் நின்று செல்போனில் செல்பி எடுத்தனர்.

    திடீரென்று அந்த வாலிபர்கள் ஒரு ஆட்டை திருடி ஆட்டோவில் கடத்திச்சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மூதாட்டி, திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

    அவர்கள் ஆட்டோவை சிறிது தூரம் துரத்திச்சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் கோட்டக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் ஆடு திருடிய வாலிபர்களை பொதுமக்கள் ஒப்படைத்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது27), ராகேஷ் பாபு (22). சந்தோஷ் (21), ஆனந்த் (22) உள்பட 5 பேர் என்பது தெரியவந்தது.

    இவர்கள் ஆட்டோவில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா வந்து விட்டு மது போதையில் சென்னை திரும்பி செல்லும்போது செல்பி எடுப்பதுபோல் நடித்து ஆட்டை திருடியுள்ளனர்.

    இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் கடலூர் சிறையில் அடைத்தனர்.

    அவர்களிடம் இருந்து ஆட்டை மீட்ட போலீசார், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×