என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "youths arrest"
- பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் சில வாலிபர்கள் ரேஸில் ஈடுபட்டு அதனை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
- மோட்டார் வாகன விதிமுறைகளை மீறியதாக ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதிகளில் வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபடுபவதாக போலீசாருக்கு புகார் சென்றது.
அதன்பேரில் அச்சன்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, வடகரை, பண்பொழி, திருமலை கோவில் சாலை, இலத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட வந்தனர். இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் சில வாலிபர்கள் ரேஸில் ஈடுபட்டு அதனை வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அச்சன்புதூர் இன்ஸ்பெக்டர் வேல்கனி தலைமையிலான தனிப்படையினர் அங்கு சென்று வடகரை கீழத்தெருவை சேர்ந்த அப்துல் ரசாக் மகன் முகம்மது ஆசிக் (வயது21), வடகரை ரஹ்மானியாபுரம் மேலத்தெருவை சேர்ந்த ஷேக் ஒலி(25) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் புளியரை-கொல்லம் மெயின் ரோட்டை சேர்ந்த கவுதம் கிருஷ்ணா (24) என்பவரும் சாகசம் செய்ததாக அவர் மீது இலத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
செங்கோட்டை அருகே கலங்காத கண்டியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மகன் பரத்குமார்(26) என்பவருக்கு மோட்டார் வாகன விதிமுறைகளை மீறியதாக ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு அவரின் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
- கஞ்சா கடத்தி வந்து அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணிபுரியும் வட மாநில வாலிபர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
- கைதானவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அம்பத்தூர்:
அம்பத்தூர் அடுத்த பட்டரவாக்கம் ரெயில் நிலையத்தில் ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில வாலிபர்கள் 2 பேரை அம்பத்தூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் தனம்மாள் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த முன்னா நாயக் (34) பிதம்பரநாயக் (28) என்பதும் ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணிபுரியும் வட மாநில வாலிபர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- வேளச்சேரியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடைபெற்று வருவதாகவும் ஆபாச அழைப்புகள் மூலம் வாலிபர்கள் வளைக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
- வேளச்சேரி தேவி கருமாரியம்மன் நகரில் உள்ள வீட்டில் விபசார தடுப்புப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.
சென்னை:
சென்னையில் பாலியல் தொழிலை கட்டுப்படுத்த விபசார தடுப்புப் பிரிவு போலீசார் தொடர்ந்து அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் வெளிமாநிலங்களில் இருந்து படையெடுக்கும் அழகிகள் சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்தோ அல்லது விடுதிகளில் தங்கி இருந்தோ பாலியல் தொழிலில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் அவ்வப்போது வெளிமாநில அழகிகளை விபசார தடுப்புப் பிரிவு போலீசார் மடக்கி பிடித்து விசாரித்து காப்பகத்துக்கு அனுப்பி வைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னை வேளச்சேரியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடைபெற்று வருவதாகவும் ஆபாச அழைப்புகள் மூலம் வாலிபர்கள் வளைக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதை தொடர்ந்து வேளச்சேரி தேவி கருமாரியம்மன் நகரில் உள்ள வீட்டில் விபசார தடுப்புப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராணி மற்றும் போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 2 இளம்பெண்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த துணை நடிகைகள் என்பது தெரியவந்தது. இருவரையும் மீட்ட போலீசார் இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? யார்? என்பது பற்றி விசாரித்தனர். அப்போது தினேஷ் என்ற வாலிபர் துணை நடிகைகள் மற்றும் அழகிகளை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
அவரை தேடியபோது தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். தரகர்களாக செயல்பட்ட 2 பேர் சிக்கினர். அவர்களில் ஒருவரது பெயர் சுமியோன் ஜார்ஜ், நெல்லையை சேர்ந்தவர். இன்னொருவர் காளிதாஸ் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஆவார்.
இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திர துணை நடிகைகளை போன்று வேறு அழகிகள் யாரையும் இவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- மூதாட்டியிடம் சென்று நாங்கள் ஆட்டின் அருகில் நின்று செல்பி எடுக்க விரும்புவதாக வாலிபர்கள் தெரிவித்தனர்.
- அதிர்ச்சி அடைந்த அந்த மூதாட்டி, திருடன்... திருடன்... என கூச்சலிட்டார்.
புதுச்சேரி:
புதுச்சேரியை அடுத்த தமிழகப்பகுதியான கோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு மெயின்ரோடு அருகே மூதாட்டி ஒருவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ஆட்டோவில் சென்ற வாலிபர்கள், அந்த மூதாட்டியிடம் சென்று, 'நாங்கள் ஆட்டின் அருகில் நின்று செல்பி எடுக்க விரும்புவதாக தெரிவித்தனர்.
அதற்கு அந்த மூதாட்டி ஒப்புக்கொண்டார். பின்னர் அந்த வாலிபர்கள் ஆட்டின் அருகில் நின்று செல்போனில் செல்பி எடுத்தனர்.
திடீரென்று அந்த வாலிபர்கள் ஒரு ஆட்டை திருடி ஆட்டோவில் கடத்திச்சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மூதாட்டி, திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.
அவர்கள் ஆட்டோவை சிறிது தூரம் துரத்திச்சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் கோட்டக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் ஆடு திருடிய வாலிபர்களை பொதுமக்கள் ஒப்படைத்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது27), ராகேஷ் பாபு (22). சந்தோஷ் (21), ஆனந்த் (22) உள்பட 5 பேர் என்பது தெரியவந்தது.
இவர்கள் ஆட்டோவில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா வந்து விட்டு மது போதையில் சென்னை திரும்பி செல்லும்போது செல்பி எடுப்பதுபோல் நடித்து ஆட்டை திருடியுள்ளனர்.
இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் கடலூர் சிறையில் அடைத்தனர்.
அவர்களிடம் இருந்து ஆட்டை மீட்ட போலீசார், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
- அந்த பகுதியில் உள்ள அறை எடுத்து தங்கி இருந்து ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
- மர்மநபர்கள் 2 செல்போன்களை திருடி தப்பிச் சென்றனர்.
கோவை:
கோவை பாப்பநாயக்கன் பாளையம் அருகே உள்ள செங்காட்டை சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 29). இவர் அந்த பகுதியில் உள்ள அறை எடுத்து தங்கி இருந்து ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று அறையில் இருந்த இவர் தனது செல்போனை சார்ஜ் போட்டு விட்டு தூங்கினார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் 2 செல்போன்களை திருடி தப்பிச் சென்றனர். இது குறித்து சதீஸ்குமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி செல்போனை திருடிய உணவு பார்சல் நிறுவனத்தில் டெலிவரி மேனாக வேலை பார்த்து வரும் தினேஷ்குமார் (28), உதயகுமார் (27) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ெஜயிலில் அடைத்தனர்.
வந்தவாசி அடுத்த புன்னை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (34) கூலித்தொழிலாளி.
இவர் ஓசூரில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தி விட்டு அதே கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த நெல்லியாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (22) பாஸ்கர் (26) ஜானகிராமன் (26) ஆகிய மூவரும் தூங்கி கொண்டிருந்த ஏழுமலையிடம் தகராறு செய்து கைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஏழுமலை கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப் பதிவு செய்து சுரேஷ் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினார்.
திருவள்ளூரை அடுத்த பட்டறை கிராமத்தில் சுமார் 17 வயதுடைய இளம்பெண் சுற்றி வந்தார். இதனை நோட்டமிட்ட 3 வாலிபர்கள் அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்தனர்.
திடீரென அவர்கள் இளம் பெண்ணை ஆட்டோவில் கடத்திச்சென்றனர். பின்னர் அதிகதூர் ஏரிக்கரைக்கு சென்று 3 வாலிபர்களும் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர்.
இதனை கவனித்த அங்கு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் கூச்சலிட்ட படி திரண்டு வந்தனர். உடனே 3 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இளம்பெண் மயக்க நிலையில் கிடந்தார். அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இளம் பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த பெண் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் என்று தெரிகிறது. அவர் எதற்காக இங்கு வந்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஏகாட்டூர் பகுதியை சேர்ந்த பூபாலன், அதிகதூரை சேர்ந்த முனுசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் பாலக்காடு போதை தடுப்பு போலீசார் மற்றும் தெற்கு போலீசார் நேற்று ரோந்து சென்றனர். பாலக்காடு பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படி 2 வாலிபர்கள் நின்றனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.
சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் நடத்திய சோதனையில் ‘போப்பிஸ்ட்ரோ’ எனும் போதை காய் 2¾ கிலோ இருந்தன. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.5 கோடி ஆகும்.
விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன்பாளையத்தை சேர்ந்த அருள்மணி (வயது 30), அதே ஊரை சேர்ந்த அருண்மோகன் (30) ஆகியோர் என்பதும், கொச்சியில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு போதைகாய்களை கடத்திச்செல்வதாகவும் கூறினர்.

இந்த போதை காய்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-
இந்த காய்களில் இருந்து தான் பிரவுன் சுகர், ஹெராயின், கருப்பு உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.
இந்த காய்களின் பிறப்பிடம் தென்னாப்பிரிக்காவாகும். போதை காய் ஆப்கானிஸ்தானில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. புற்று நோய் வலிக்கு இந்த காய்களில் இருந்து நிவாரண மருந்துகளும் தயாரிக்கப்படுகிறது.
இதனால் அரசு அனுமதியுடன் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய 3 இடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. சேலம் வாலிபர்கள் இந்த காயை ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வந்திருந்தால் சர்வதேச போதை கும்பலுடன் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இவ்வாறு போலீசார் கூறினர்.
வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #Drugtrafficking
திருப்பூர் மாவட்டம் அவினாசி கருவலூரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களை கோவிலின் அருகே நிறுத்திவிட்டு சென்றனர். திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை யாரோ திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து 2 பேரும் அவினாசி போலீசில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் அவினாசி டி.எஸ்.பி. பரமசாமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சம்பங்கி தலைமையில் போலீசார் நேற்று காலை 5 மணி அளவில் கருவலூர் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் திரும்பி தப்பிக்க முயன்றனர். உடனடியாக போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர் .
விசாரணையில் அவர்கள் 2 பேரும் மேட்டுப்பாளையம் சங்கர் நகரை சேர்ந்த ஆசிக் (வயது 21), ரைஸ்தீன் (20) என்பதும் கருவலூர் மாரியம்மன் கோவில் அருகே நிறுத்தப்பட்டு இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் உள்பட 4 மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரிய வந்தது.
மேலும் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் 12-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளை திருடியதாக தெரிவித்தனர்.
இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ. 4 லட்சம் மதிப்பிலான 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கபிஸ்தலம் அருகே உள்ள கணபதி அக்ரஹாரம் பாலக்கரை பகுதியில் வசிப்பவர் ரவிச்சந்திரன் (வயது 50) இவர் தன் வீட்டில் காளி சிலை, காயத்ரி சிலை, புவனேஸ்வரி சிலை, ஆகிய மூன்று பித்தளை சிலைகளை வைத்து பூஜை செய்து வந்துள்ளார். இதனை கவனித்து வந்த மூன்று நபர்கள் ஐம்பொன் சிலை என நினைத்து கடந்த 8-ந்தேதி அவர் வீட்டிற்கு வந்து பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதனை நம்பி 3 பேரையும் வீட்டிற்குள் ரவிச்சந்திரன் அனுமதித்துள்ளார். உள்ளே புகுந்த அவர்கள் ரவிச்சந்திரனை தாக்கி அறையில் வைத்து பூட்டி விட்டு சிலைகளை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து கபிஸ்தலம் போலீசில் ரவிச்சந்திரன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாகரத்தினம், குற்றப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், சம்பத்குமார், ஆகியோர் கொண்ட தனிப்படையினர் விசாரணை செய்தனர். அப்போது தஞ்சாவூரில் சுற்றித்திரிந்த 3 பேரையும் பிடித்து 3 சிலைகளை மீட்டனர்.
அவர்கள் 3 பேரும் துவாக்குடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த காளிவேல் மகன் கார்த்திக் (26), வடக்கூர் வடக்கு தெரு முருகேசன் மகன் இன்பநாதன் (29) என்பதும் தஞ்சாவூர் அண்ணாநகரை சேர்ந்த கதிரவன் வினோத் (26) என்பது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.