search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young woman kidnap"

    • வேணுகோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரிகை போலீசில் திரிஷா புகார் செய்ததாக கூறப்படுகிறது.
    • சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து, திரிஷாவை கடத்திச் சென்ற வேணுகோபால் உள்ளிட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே கொல்லப்பள்ளி என்ற கிராமத்தை சேர்ந்த நாராயணப்பா என்பவரது மகள் திரிஷா (19). இவர், ஓசூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இதேபோல், பேரிகை அருகே அலசபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால் (22), இவரும் அதே கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருகின்றனர்.

    இவர்கள் இருவரும் பிளஸ்-2 படிக்கும் போதிலிருந்தே ஒருவரையொருவர் காதலித்து வந்ததாக தெரிகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் திரிஷாவின் வீட்டில், இவர்களது காதலுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இதனை தொடர்ந்து, வேணுகோபாலுடனான காதலை தான் முறித்துக் கொண்டதாகவும், அவர் தொடர்ந்து வற்புறுத்துவதால், வேணுகோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம், பேரிகை போலீசில் திரிஷா புகார் செய்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் திரிஷாவுக்கும், பர்கூர் அருகே எலத்தகிரியை சேர்ந்த ரமேஷ் என்ற வாலிபருக்கும் திருமணம் நடந்தது.

    இந்த நிலையில், நேற்று தேர்வு எழுதுவதற்காக திரிஷாவை அவரது கணவர் ரமேஷ் எலத்தகிரியிலிருந்து மோட்டார் சைக்கிளில் ஓசூர் அழைத்து வந்தார்.

    பின்னர் தேர்வு முடிந்து மீண்டும் மாலையில் மனைவியை அழைத்துக் கொண்டு ஊருக்கு திரும்பும்போது, ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பேரண்டபள்ளி அருகே உள்ள ஒரு பெட்ரோல் நிலைய பகுதியில், ரமேஷ் ஓட்டி வந்த வண்டியை ஒரு கார் வழிமறித்தது. அந்த காரில் 3 பேருடன் வந்த திரிஷாவின் முன்னாள் காதலன் வேணுகோபால், திரிஷாவை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி, கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிவிட்டார்.

    இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரமேஷ், இது குறித்து ஓசூர் அட்கோ போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து, திரிஷாவை கடத்திச் சென்ற வேணுகோபால் உள்ளிட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மேலும், அவர்களை பிடிக்க அட்கோ போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வினோத்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம், ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இளம்பெண்ணின் விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி திருமணம் செய்வதற்காக பாண்டிச்சேரிக்கு கோகுல கிருஷ்ணன் கடத்தி சென்றது தெரிந்தது.
    • கோகுல கிருஷ்ணன் மீது போலீசார் ஆள்கடத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துசிறையில் அடைத்தனர்.

    திருவெற்றியூர்:

    திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன் (வயது 28). அ.தி.மு.க. மேற்கு பகுதி மாணவரணி செயலாளரான இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாகவும் உள்ளார்.

    இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது பட்டதாரி இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. அந்த இளம்பெண் ஓ.எம்.ஆர்.சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களாக அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அந்த இளம்பெண் கோகுலகிருஷ்ணனுடன் பழகுவதை தவிர்த்தார். அவரிடம் பேசவில்லை என்று தெரிகிறது.

    இதனால் கோபம் அடைந்த கோகுல கிருஷ்ணன் கடந்த 21-ந்தேதி காலை வீட்டில் இருந்து வெளியே வந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்றார். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் சாத்தாட்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் பிரம்மானந்தம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நந்த குமார் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கோகுலகிருஷ்ணன் திருமணம் செய்வதற்காக இளம்பெண்ணை பாண்டிச்சேரியில் உள்ள ஒட்டலில் கடத்தி வைத்திருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் பாண்டிச்சேரிக்கு விரைந்து சென்று இளம்பெண்ணை மீட்டனர். மேலும் கோகுலகிருஷ்ணனை கைது செய்து சாத்தாங்காடு போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

    இதில் இளம்பெண்ணின் விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி திருமணம் செய்வதற்காக பாண்டிச்சேரிக்கு கோகுல கிருஷ்ணன் கடத்தி சென்றது தெரிந்தது. இதைத்தொடர்ந்து கோகுல கிருஷ்ணன் மீது போலீசார் ஆள்கடத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துசிறையில் அடைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடத்தப்பட்ட சுமிகாவை மீட்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி சுமிகாவை தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஸ்ரீரெங்க நாராயணபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 24).

    இவரும் அதே பகுதியை சேர்ந்த சுமிகா (19) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் கடந்த மாதம் 18-ந்தேதி காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளனர். பின்னர் கடந்த 25-ந்தேதி திருமணத்தை பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று அவர்கள் ஊர் திரும்பினர். இதையறிந்த சுமிகாவின் தந்தை முருகேசன் தாயார் பத்மா உள்பட 12 பேர் கும்பலாக முருகன் வீட்டுக்குள் சென்று சுமிகாவை அழைத்துள்ளனர்.

    ஆனால் சுமிகா அவர்களுடன் செல்ல மறுத்து விட்டார். அப்போது முருகனையும், அவரது குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால் பேசிய கும்பல் சுமிகாவை பிடித்து இழுத்து ஒரு காரில் வலுக்கட்டாயமாக ஏற்றிச்சென்றுள்ளனர்.

    இதுகுறித்து முருகன் கூடங்குளம் போலீசில் புகார் செய்தார். அதில், எனது மனைவி சுமிகாவை அவரது தந்தை முருகேசன், தாய் பத்மா, அண்ணன் சுமித் மற்றும் உறவினர்கள் உள்பட 12 பேர் சேர்ந்து காரில் கடத்தி சென்று விட்டனர். அவர்களிடம் இருந்து எனது மனைவியை மீட்டுத்தர வேண்டும் என கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் சுமிகாவின் பெற்றோர் முருகேசன்-பத்மா உள்பட 12 பேர் மீது கடத்தல் உள்ளிட்ட 4 பிரிவிகளின் கீழ் இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ வழக்குப் பதிவு செய்தார்.

    மேலும் கடத்தப்பட்ட சுமிகாவை மீட்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி சுமிகாவை தேடி வருகின்றனர். இதுதொடர்பாக 5 பெண்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்த குருத்திகா என்ற இளம்பெண் அவரது பெற்றோரால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    அதேபோல நெல்லையில் நடைபெற்ற இந்த சம்பவம் கூடங்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் இசக்கிராஜ் என்பவர், இளம்பெண்ணை கண்டுபிடித்து தர வேண்டும் என்று ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
    • தற்போது கடத்தப்பட்ட இளம்பெண் வழக்கில் திருப்பு முனையாக நேற்று ஒரு வீடியோ வெளிவந்துள்ளது.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள இலஞ்சி கொட்டாக்குளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் வினித் (வயது 22). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த நவீன் பட்டேல் மகள் கிருத்திகா என்பவருக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்று திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நவீன் பட்டேல் மற்றும் அவருடன் உறவினர்கள் 6 பேர் சேர்ந்து வலுக்கட்டாயமாக, காதல் கணவர் வினித் கண்முன்னே கிருத்திகாவை தாக்கி ஒரு காரில் கடத்தி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து குற்றாலம் போலீசார் கிருத்திகாவின் பெற்றோர் உள்பட 7 பேர் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வந்தனர். தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் இசக்கிராஜ் என்பவர், இளம்பெண்ணை கண்டுபிடித்து தர வேண்டும் என்று ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். தற்போது கடத்தப்பட்ட இளம்பெண் வழக்கில் திருப்பு முனையாக நேற்று ஒரு வீடியோ வெளிவந்துள்ளது.

    அந்த வீடியோவில் பேசும் கிருத்திகா தனக்கு உறவினர் ஒருவருடன் திருமணம் முடிந்துள்ளதாகவும், தான் பாதுகாப்பாக உள்ளதாகவும், தன்னை யாரும் கடத்தவில்லை எனவும், எந்தவிதமான அச்சுறுத்தலும் இன்றி நான் திருமணம் முடித்து சந்தோசமாக இருப்பதாகவும், என்னை வைத்து ஏதேனும் பிரச்சனை நடைபெற்றால் அதை அப்படியே விட்டுவிடுங்கள் எனவும் வாக்குமூலமாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

    தற்போது, அந்த வீடியோவானது அவரது வழக்கறிஞர் மூலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சனிடம் வழங்கப்பட்டு உள்ளது. இளம்பெண்ணின் இந்த வாக்குமூலம் இந்த வழக்கில் திடீர் திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது.

    தென்காசி மாவட்ட போலீசார் தனிப்படைகள் அமைத்து கிருத்திகாவை தேடி வரும் சூழலில், கிருத்திகா குஜராத்தில் மற்றொருவரை திருமணம் செய்து கொண்டு வீடியோவை வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • முனுசாமி நாயுடு கண்டிகை என்ற இடத்தில் திடீரென காரில் வந்த 2 வாலிபர்கள் ஆட்டோவை மடக்கினார்கள்.
    • ஆட்டோவில் இருந்த தாய் மஞ்சுளாவை வெளியே இழுத்து தள்ளிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் சியாமளாவை காரில் கடத்தி மின்னல் வேகத்தில் மறைந்தனர்.

    திருத்தணி:

    பள்ளிப்பட்டு அடுத்த கொடி வளசை காலனியில் வசிப்பவர் சேகர். இவரது மகள் சியாமளா (வயது 24). 10ம் வகுப்பு படித்துவிட்டு தற்போது வீட்டில் இருக்கிறார்.

    நேற்று சியாமளாவை அழைத்துக் கொண்டு தாய் மஞ்சுளா ஆட்டோவில் பள்ளிப்பட்டு பகுதியில் பஜார் தெருவுக்கு சென்றார். அங்குள்ள கடையில் கொலுசு எடுத்துக்கொண்டு ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.

    முனுசாமி நாயுடு கண்டிகை என்ற இடத்தில் திடீரென காரில் வந்த 2 வாலிபர்கள் ஆட்டோவை மடக்கினார்கள். ஆட்டோவில் இருந்த தாய் மஞ்சுளாவை வெளியே இழுத்து தள்ளிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் சியாமளாவை காரில் கடத்தி மின்னல் வேகத்தில் மறைந்தனர்.

    தன் மகள் கண்ணெதிரில் கடத்தப்பட்டதை கண்ட தாய் மஞ்சுளா கூச்சல் போடவே பொதுமக்கள் திரண்டனர். இது தொடர்பாக பள்ளிப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜ், சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீஸ் குழுவினர் காரை பின் தொடர்ந்து விரட்டினர். ஆந்திரா மாநிலம் சர்க்கரை ஆலை அருகே ஆந்திரா போலீஸ் உதவியோடு பொதுமக்களும் இணைந்து காரை மடக்கி பிடித்தனர். கடத்தப்பட்ட சியாமளாவை மீட்ட போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    இது தொடர்பாக நடந்த விசாரணையில் கொடி வலசா கிராமம் அருகிலுள்ள அத்திமாஞ்சேரி பேட்டை காலனியை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 30). அதே பகுதியைச் சேர்ந்த விஜய் (வயது 27) ஆகிய இருவரும் சியாமளாவை கடத்தியது தெரியவந்தது.

    அவர்கள் இருவரும் சியாமளாவுக்கு உறவினர்கள் ஆவர். அவர்கள் என்ன நோக்கத்திற்காக கடத்தினார்கள் என்று தெரியவில்லை. இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து திருத்தணி கிளை சிறையில் அடைத்தனர்.

    கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று மாலை நடந்த இந்த கடத்தலில் ஒரு மணி நேரத்தில் போலீசார் குற்றவாளிகளை பிடித்தனர்.

    • சங்கர் முருகன் வீட்டில் கோமதி இருந்த போது கோமதியின் தாத்தா பவுன் பாண்டியன், சித்தப்பா அனில், அம்மா ராஜம்மாள், சித்தி அனிதா உள்ளிட்ட 10 பேர் சேர்ந்து கோமதியை கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
    • சங்கர் முருகன் சங்கரன்கோவில் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பால் பண்ணை தெருவை சேர்ந்தவர் சின்னராஜ் மகன் சங்கர் முருகன் (23).

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி மகள் கோமதி (20). உறவினர்களான இவர்கள் இருவரும் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த போது காதலித்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு கோமதியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    சங்கரன்கோவிலில் உள்ள சங்கர் முருகன் வீட்டில் கோமதி இருந்த போது கோமதியின் தாத்தா பவுன் பாண்டியன், சித்தப்பா அனில், அம்மா ராஜம்மாள், சித்தி அனிதா உள்ளிட்ட 10 பேர் சேர்ந்து கோமதியை கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக சங்கர் முருகன் சங்கரன்கோவில் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர் அருகே இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த பட்டறை கிராமத்தில் சுமார் 17 வயதுடைய இளம்பெண் சுற்றி வந்தார். இதனை நோட்டமிட்ட 3 வாலிபர்கள் அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்தனர்.

    திடீரென அவர்கள் இளம் பெண்ணை ஆட்டோவில் கடத்திச்சென்றனர். பின்னர் அதிகதூர் ஏரிக்கரைக்கு சென்று 3 வாலிபர்களும் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர்.

    இதனை கவனித்த அங்கு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் கூச்சலிட்ட படி திரண்டு வந்தனர். உடனே 3 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இளம்பெண் மயக்க நிலையில் கிடந்தார். அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இளம் பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அந்த பெண் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் என்று தெரிகிறது. அவர் எதற்காக இங்கு வந்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஏகாட்டூர் பகுதியை சேர்ந்த பூபாலன், அதிகதூரை சேர்ந்த முனுசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.
    புதுவை பூமியான்பேட்டையில் இளம் பெண்ணை வாலிபர் கடத்தி சென்று விட்டதாக தாய் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை பூமியான்பேட்டை பாவாணர் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி தேவகி. இவர்களுக்கு அனுஷா (வயது 23) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தேவகி கணவரை விட்டு பிரிந்து மகள் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். அனுஷா திருமண நிகழ்ச்சிகளில் வரவேற்பாளராக நிற்கும் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற அனுஷா அதன் பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடியும் எங்கும் அனுஷா இல்லை.

    இதையடுத்து தேவகி தனது மகள் மாயமானது குறித்து ரெட்டியார் பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகள் அனுஷாவை நைனார் மண்டபத்தை சேர்ந்த சந்தோஷ் என்ற வாலிபர் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகப்படுவதாக கூறியுள்ளார்.

    இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீர புத்திரன், ஏட்டு இரிசப்பன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே இளம்பெண் கடத்தியதாக வாலிபர் உள்பட 6 பேர் மீது அப்பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
    மதுரை:

    மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் ஷாலினி (வயது 18).

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஷாலினி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் எந்த பலனும் இல்லை.

    இது குறித்து முருகேசன், அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதில், எனது மகளை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த சாக்ரடீஸ் மகன் சச்சின் என்பவர் கடத்திச் சென்று விட்டார்.

    இதற்கு உடந்தையாக அவரது தாயார் சாரதா, உறவினர்கள் பிச்சை, முத்துப்பிள்ளை, பாசப்பிரியன், சசி ஆகியோர் உள்ளனர். எனவே அவர்களிடம் இருந்து எனது மகளை மீட்டுத்தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதன் அடிப்படையில் அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    ×