சங்கரன்கோவிலில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல்- கணவன் போலீசில் புகார்

சங்கர் முருகன் வீட்டில் கோமதி இருந்த போது கோமதியின் தாத்தா பவுன் பாண்டியன், சித்தப்பா அனில், அம்மா ராஜம்மாள், சித்தி அனிதா உள்ளிட்ட 10 பேர் சேர்ந்து கோமதியை கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.சங்கர் முருகன் சங்கரன்கோவில் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சங்கரன்கோவிலில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல்- கணவன் போலீசில் புகார்
Published on

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பால் பண்ணை தெருவை சேர்ந்தவர் சின்னராஜ் மகன் சங்கர் முருகன் (23).

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி மகள் கோமதி (20). உறவினர்களான இவர்கள் இருவரும் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த போது காதலித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு கோமதியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

சங்கரன்கோவிலில் உள்ள சங்கர் முருகன் வீட்டில் கோமதி இருந்த போது கோமதியின் தாத்தா பவுன் பாண்டியன், சித்தப்பா அனில், அம்மா ராஜம்மாள், சித்தி அனிதா உள்ளிட்ட 10 பேர் சேர்ந்து கோமதியை கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சங்கர் முருகன் சங்கரன்கோவில் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com