ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது

கஞ்சா கடத்தி வந்து அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணிபுரியும் வட மாநில வாலிபர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.கைதானவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது
Published on

அம்பத்தூர்:

அம்பத்தூர் அடுத்த பட்டரவாக்கம் ரெயில் நிலையத்தில் ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில வாலிபர்கள் 2 பேரை அம்பத்தூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் தனம்மாள் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த முன்னா நாயக் (34) பிதம்பரநாயக் (28) என்பதும் ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணிபுரியும் வட மாநில வாலிபர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com