நில பிரச்சனை காரணமாக உறவினரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது

ரத்த காயமடைந்த முஸ்தபாவை உறவினர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு சவுகத் அலியை கைது செய்தனர்.
நில பிரச்சனை காரணமாக உறவினரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது
Published on

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள பெரிய அலேரஹள்ளி பகுதியை சேர்ந்த பாதுஷா என்பவருடைய மகன் சவுகத் அலி (வயது 31).

இந்த நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்தவரும் அத்தை மகனான முஸ்தபாவுக்கும், சவுகத் அலிக்கும் ஆகிய இருவருக்கும் நில பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.

இதில் ஆத்திரமடைந்த சவுகத்அலி மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முஸ்தபாவின் தலை, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டி உள்ளார்.

இதில் ரத்த காயமடைந்த முஸ்தபாவை உறவினர்கள் உடனடியாக மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு சவுகத் அலியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தர்மபுரி மாவட்ட சிறையில் போலீசார் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com