உடுமலையில் ஆடு திருடிய வாலிபர் கைது

அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். ஆட்டையும் மீட்டனர். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
கைது செய்யப்பட்ட வாலிபர். 
கைது செய்யப்பட்ட வாலிபர். 
Published on

உடுமலை:

உடுமலை அடுத்த கணியூரை சேர்ந்த வடிவேல் என்பவரது மகன் மொட்டையப்பன்(வயது 32) என்பவர் கடந்த 5ந்தேதி காலை 6 மணியளவில் உடுமலை ஆட்டு சந்தையில் ரூ. 15 ஆயிரத்துக்கு ஆடு ஒன்று வாங்கி அதை அருகில் உள்ள மரத்தடியில் கட்டி விட்டு அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது கட்டி வைத்திருந்த ஆட்டை காண வில்லை. மர்ம நபர் ஆட்டை திருடி சென்று இருந்தனர். இதில் அதிர்ச்சியடைந்த மொட்டை யப்பன், இது குறித்து உடுமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். விசாரணையில், உடுமலை காந்தி சவுக்கு பத்ரகாளியம்மன் லே-அவுட் டை சேர்ந்த சுந்தரபாண்டியன் மகன் சேது மாதவன் (வயது 22 )என்பவர் ஆட்டை திருடி சென்றது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். ஆட்டையும் மீட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com