காயல்பட்டினத்தில் ரத்ததான முகாம்

காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை வளாகத்தில் மெகா என்கிற பொது நல அமைப்பின் சார்பில் 26-வது ரத்த தான முகாம் நடைபெற்றது.மெகா அமைப்பின் சார்பில் இது வரை நடந்த 26 முகாம்களிலும் மொத்தம் ஆயிரத்து 617 பேர் ரத்ததானம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
காயல்பட்டினத்தில் ரத்ததான முகாம்
Published on

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை வளா கத்தில் மெகா என்கிற பொது நல அமைப்பின் சார்பில் 26-வது ரத்த தான முகாம் நடைபெற்றது.

திருச்செந்தூர் அரசு பொது மருத்துவமனையின் ரத்த வங்கியுடன் இணைந்து நடத்திய இந்த முகாமில் மெகா அமைப்பின் நிர்வாகிகள் முஜாஹித் அலி, நூகு, புகாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முத்து இஸ்மாயில், அப்துல் வாஹித், சதக்கத்துல்லாஹ் ஆகியோர் பங்கேற்றனர்.

முகாமில் 5 பெண்கள் உள்பட 46 பேர் ரத்ததானம் செய்தனர். டாக்டர் பாவனாச குமார் தலைமை யிலான குழுவினர் இதற் கான பணிகளை மேற் கொண்டனர். ரத்ததானம் செய்த அனைவருக்கும் முகாமில் சான்றிதழ் வழங்கப்பட்டது. மெகா அமைப்பின் சார்பில் இது வரை நடந்த 26 முகாம் களிலும் மொத்தம் ஆயிரத்து 617 பேர் ரத்ததானம் செய்து ள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com