search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரி பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா
    X

    விழாவில் திருவிளக்கு பூஜை நடந்தபோது எடுத்த படம்.

    ஆறுமுகநேரி பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா

    • திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி பேராசிரியை ஸ்ரீமதி தியாக ராஜன் பக்தி சொற்பொழிவு ஆற்றினார்.
    • 2-ம் நாள் காலையிலும், மாலையிலும் சிறப்பு பூஜையும், வில்லிசையை தொடர்ந்து இரவில் மாகாப்பு அலங்கார பூஜையும் நடந்தன.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி மெயின் பஜாரில் உள்ள பத்திர காளியம்மன் கோவில் கொடை விழா 3 நாட்கள் நடைபெற்றது.

    முதல் நாள் காலையில் மகா கணபதி ஹோமமும், தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து கோவிலின் முகப்பு மண்டபம் திறப்பு விழா நடந்தது. மாலையில் திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி பேராசிரியை ஸ்ரீமதி தியாக ராஜன் பக்தி சொற்பொழிவு ஆற்றினார். பின்னர் திரு விளக்கு பூஜையும், அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும் நடந்தன.

    2-ம் நாள் காலையிலும், மாலையிலும் சிறப்பு பூஜையும், வில்லிசையை தொடர்ந்து இரவில் மாகாப்பு அலங்கார பூஜையும் நடந்தன. நிறைவு நாளன்று மதியம் உச்சிகால பூஜையும்,அன்னதானமும் நடந்தது. இரவில் பிரம்மசக்தி அம்மன் கோவிலில் இருந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து கும்மி அடித்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அம்மனுக்கு நடுசாம பூஜையில் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நிறைவாக இன்று (புதன் கிழமை) காலையில் தீர்த்தவாரி அபிஷேகம் நடந்தது.

    நிகழ்ச்சிகளில் மேலாத்தூர் ராகவன், மாரிபாலன் ராஜா ராம், விஜயகுமார், பேரூராட்சி கவுன்சிலர் ரவிச்சந்திரன், சீனிவாசகன், முருகேசன் நாடார், சுந்தரலிங்கம், பாலசுப்பிர மணியன், ராமசாமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன்ராஜ், பொன் சின்னதுரை, கோட்டாளம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் கிழக்கத்திமுத்து, ஆதிசேஷன், அமிர்தராஜ், மூக்காண்டி, பார்வதி குமார், தூசிமுத்து, விஜயன், பாலகணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×