காயல்பட்டினம் காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் பிணம் - போலீசார் விசாரணை

காயல்பட்டினம் தென்பாகம் வருவாய் கிராம அலுவலர் மோகன் பிரபாகர் இது குறித்து ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அங்கு இறந்து கிடந்தவர் 65 வயது மதிக்கத்தக்க ஆண் என்பதும், இறந்து சுமார் 20 நாட்கள் ஆகி இருக்கலாம் என்பதும் தெரிகிறது.
காயல்பட்டினம் காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் பிணம்  - போலீசார் விசாரணை
Published on

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் அருணாச்சலபுரத்திற்கும்-கொம்புதுறைக்கும் இடையில் அடர்ந்த உடைமர காட்டுப்பகுதி உள்ளது. இங்கு அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக நேற்று தகவல் பரவியது.

காயல்பட்டினம் தென்பாகம் வருவாய் கிராம அலுவலர் மோகன் பிரபாகர் இது குறித்து ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்து கிடந்தவர் 65 வயது மதிக்கத்தக்க ஆண் என்பதும், இறந்து சுமார் 20 நாட்கள் ஆகி இருக்கலாம் என்பதும் தெரிகிறது.

மேலும் அரக்கு கலர் சட்டை அணிந்த நிலையிலும், அருகில் அவிழ்ந்த நிலையில் லுங்கியும் கிடந்தன. அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்?காட்டிற்குள் வந்து திசை தெரியாமல் தவித்து மயங்கி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்கிற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com