search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரியில் ரூ. 26.50 லட்சம் மதிப்பில் 2 புதிய ரேஷன் கடைகள் திறப்பு-கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
    X

    ஆறுமுகநேரி மடத்துவிளையில் புதிய ரேஷன் கடையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்த போது எடுத்த படம். அருகில் கனிமொழி எம்.பி., கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் உள்ளனர்.

    ஆறுமுகநேரியில் ரூ. 26.50 லட்சம் மதிப்பில் 2 புதிய ரேஷன் கடைகள் திறப்பு-கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

    • ராஜமன்னியபுரம் கடையின் கட்டிடத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.
    • தூய்மை ஆக்கப்பட்டுள்ள இடத்தை கனிமொழி எம்.பி.யும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் பார்வையிட்டனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரியில் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 2 புதிய ரேஷன் கடைகள் கட்டப்பட்டன.

    ரேஷன்கடைகள் திறப்பு

    தலா ரூ. 13.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ராஜமன்னியபுரம் கடையின் கட்டிடத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். மடத்துவிளை கடையின் கட்டிடத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

    விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தி.மு.க செயலாளர் நவநீத பாண்டியன் வரவேற்று பேசினார்.

    கனிமொழி எம்.பி. ஆய்வு

    பின்னர் பேரூராட்சி அலுவலகத்தின் எதிரே முன்பு குப்பை கிடங்காக இருந்து தற்போது தூய்மை ஆக்கப்பட்டுள்ள இடத்தை கனிமொழி எம்.பி.யும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் பார்வையிட்டனர். அந்த இடத்திற்கான மேம்பாட்டு திட்டங்கள் குறித்து கேட்டறிந்தனர்.

    நிகழ்ச்சிகளில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன், தாசில்தார் வாமணன், தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஆவின் தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், ஆழ்வை ஒன்றிய சேர்மன் ஜனகர், ஆதவா அறக்கட்டளை நிறுவனர் பாலகுமரேசன், வார்டு கவுன்சிலர்கள் வெங்கடேஷ், தயாவதி, சிவக்குமார், ஆறுமுகநயினார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×