search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alangulam"

    • தினமும் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்கு யூனியன் அலுவலகம் வந்து செல்கின்றனர்.
    • யூனியன் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டுமே கழிவறை உள்ளது.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் யூனியன் 32 கிராம பஞ்சாயத்துக்களை யும், 23 ஒன்றிய கவுன்சிலர்களையும் உள்ளடக்கியது. இந்த யூனியனுக்கான அலுவலகம் நெல்லை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் ஆலங்குளம் மத்திய பகுதி யில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராள மான பொதுமக்கள், கட்டிட ஒப்பந்ததாரார்கள் உள்ளிட்டோர் பல்வேறு தேவைகளுக்கு வந்து செல்கின்றனர்.

    இதுதவிர மாதந்தோறும் இந்த யூனியன் அலுவல கத்தில் ஊராட்சி செயலர்கள் கூட்டம், கவுன்சிலர்கள் கூட்டம், பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டம் நடைபெற்று வரு கிறது. அவ்வாறு வருபவர்களுக்கு கழிவறை வசதிகள் இல்லை என்று புகார்கள் வந்துள்ளது.

    யூனியன் அலுவலக வளாகத்தில் அங்கு பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மட்டுமே கழிவறை உள்ளது. பொதுமக்கள் உள்ளிட்டோ ருக்கு பொதுவான கழிப்பறைகள் எதுவும் இல்லை.

    இதனால் பெண்கள், வயதானவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்ற னர் என்று சமூக ஆர்வ லர்கள் புகார் கூறுகின்றனர்.

    மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கோரிக்கை விடுத்தாலும், அதனை அவர்கள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் அதி ருப்தி தெரிவிக்கின்றனர்.

    • சசிகுமார் வீட்டிற்கு குடிநீர் செல்வதில் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.
    • பாரதிராஜா, சசிகுமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் யூனியன் மேலமருதபுரம் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட அண்ணாமலைபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவரது வீட்டிற்கு குடிநீர் செல்வதில் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சிமன்ற அலுவலகத்தில் பணிபுரிந்த பணியாளர்களிடம் அவர் கூறி உள்ளார். இதனை அலுவலர்கள் மேலமருதபுரம் ஊராட்சிமன்ற துணைத்தலைவராக இருந்து வரும் பாரதிராஜாவிடம் கூறியுள்ளனர்.

    இதனால் கோபமடைந்த பாரதிராஜா, சசிகுமாரை கன்னத்தில் அறைந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சசிகுமார் மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சசிகுமார் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இச்சம்பவம் குறித்து அறிந்த ஊத்துமலை போலீசார் சசிகுமார் அளித்த வாக்குமூலம் மற்றும் புகாரின் அடிப்படையில் மேலமருதபுரம் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஹமீது கான் தனது அக்காளுக்கு குழந்தை பிறந்ததை பார்ப்பதற்காக ஊருக்கு வந்துள்ளார்.
    • மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் தூக்கி வீசப்பட்ட ஹமீது கான் தலையில் பலத்த காயமடைந்தார்

    நெல்லை:

    மானூர் அருகே உள்ள தெற்குப்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சுல்தான். கூலித்தொழிலாளி. இவரது மகன் ஹமீது கான் (வயது 21).

    இவர் தெலுங்கானா மாநிலத்தில் ஓட்டல் நடத்தி வரும் உறவினரிடம் வேலை பார்த்து வந்தார். இதையடுத்து அவரது அக்காளுக்கு குழந்தை பிறந்ததை பார்ப்பதற்காக ஊருக்கு வந்துள்ளார். அதன் பின்னர் ஆலங்குளம் சென்று மோட்டார் சைக்கிள் வாங்கியுள்ளார்.

    இந்நிலையில் நேற்று தெற்குபட்டியை அடுத்த அருணாசலபேரி அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட ஹமீது கான் தலையில் பலத்த காயமடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டத்திற்கு நகர தலைவர் வில்லியம் தாமஸ் தலைமை தாங்கினார்.
    • முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு,ஆலடி சங்கரையா ஆகியோர் கேக் வெட்டி பொது மக்களுக்கு வழங்கினர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளத்தில், நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

    நகர தலைவர் வில்லியம் தாமஸ் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைகுண்ட ராஜா, வக்கீல் பிரிவு மாநில துணைத் தலைவர் பால்ராஜ், காங்கிரஸ் வட்டார பொறுப்பாளர் ரூபன் தேவதாஸ், இளைஞரணித் தலைவர் லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நெல்லை முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு, காங்கிரஸ் மூத்த தலைவர் ஆலடி சங்கரையா ஆகியோர் கலந்துகொண்டு, இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களை பின்பற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி பொது மக்களுக்கு வழங்கினர்.

    தொடர்ந்து, காங்கிரஸ் முன்னாள் நகரத் தலைவர் செல்லையா கவுரவிக்கப்பட்டார்.

    நிகழ்ச்சியில், முன்னாள் டி.எஸ்.பி. ஜெயராஜ், காங்கிரஸ் மூத்த தலைவர் வேல்குமார் ராமசாமி, மனித உரிமை துறை மாவட்ட தலைவர் ராஜாராம், நகரச் செயலாளர் லிவிங்ஸ்டன் விமல், யேசுதாசன், ஜோசப், மாடக்கண்ணு, ஓ.பி.சி. பிரிவு மாநில துணைத் தலைவர் பிரகாஷ், அரவிந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    • ஆலங்குளம் அருகே உள்ள கடங்கநேரி சின்ராசு இவர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் நெல்லை சென்று விட்டு கடங்கநேரி வந்துள்ளனர்.
    • ஆய்க்குடி சுடலை என்பவர் ஓட்டி வந்த வேன் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள கடங்கநேரி சின்ராசு (வயது 27). இவர் தனது நண்பரான தென்காசி ஆய்க்குடி சாரதி (22) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நெல்லை சென்று விட்டு கடங்கநேரி வந்துள்ளனர்.

    பின்னர் அங்கிருந்து ஆய்க்குடி செல்வதற்காக வி.கே.புதூர் சாலையில் சென்றபோது எதிரே ஆய்க்குடி சுடலை என்பவர் ஓட்டி வந்த வேன் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் சின்ராசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாரதி படுகாயம் அடைந்தார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த ஊத்துமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாரதி அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஊத்துமலை போலீசார் வேன் டிரைவர் சுடலையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கால்நடை சிறப்பு மருத்துவ முகாமை ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி ஆண்டி தொடங்கி வைத்தார்.
    • மருத்துவர்கள் ஊத்துமலை ரமேஷ், வீராணம் சந்திரன், ஆலங்குளம் ராஜா ஜூலியட் ஆகியோர் அடங்கிய குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், கிடாரக்குளம் ஊராட்சியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி ஆண்டி முகாமை தொடங்கி வைத்தார். மருத்துவர் பொன்னுவேல் வரவேற்றார். மருத்துவர்கள் தியோபிலஸ் ரோஜர், மகேஸ்வரி, ஜான் சுபாஷ் ஆகியோர் தொழில்நுட்ப உரையாற்றினர்.

    மருத்துவர்கள் ஊத்துமலை ரமேஷ், வீராணம் சந்திரன், ஆலங்குளம் ராஜா ஜூலியட் ஆகியோர் அடங்கிய குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். நெட்டூர் கால்நடை உதவி மருத்துவர் ராமசெல்வம் நன்றி கூறினார்.

    • எஸ்.எஸ்.என். திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு சிலை அமைப்பு குழுத் தலைவர் எம்.எஸ்.காமராஜ். ஜான்ரவி தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் புதிய சிலையை வடிவமைப்பது குறித்தும், அதற்கு நிதி திரட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் காமராஜர் சிலை பராமரிப்புக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலங்குளம் எஸ்.எஸ்.என். திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு சிலை அமைப்பு குழுத் தலைவர் எம்.எஸ்.காமராஜ். ஜான்ரவி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அலெக்ஸ், பர்வீன், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் நெல்லை எம்.பி. ராமசுப்பு, தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், தென்காசி பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    கூட்டத்தில் புதிய சிலையை வடிவமைப்பது குறித்தும், அதற்கு நிதி திரட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. சிலை அமைக்கும் பணிக்கு முதல் தவணையாக சிவபத்மநாதன் ரூ. 1 லட்சத்து ஆயிரத்தை நிர்வாகிகளிடம் அளித்தார். நிகழ்ச்சியில் ஆலங்குளம் அனைத்துக் கட்சி, அமைப்புகள், சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • துத்திகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துமாரி விவசாயி, நெல் நடவு பணிகள் நடைபெற்று வருவதை பார்த்துக்கொண்டிருந்தார்.
    • இரவு வெகுநேரமாகியும் அவரை காணாததால் அவரது மனைவி வயலுக்கு சென்று பார்த்துள்ளார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள துத்திகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துமாரி(வயது 33). விவசாயி. இவரது மனைவி ராமலெட்சுமி.

    முத்துமாரிக்கு சொந்தமான வயல் அப்பகுதியில் உள்ளது. அங்கு நெல் நடவு பணிகள் நடைபெற்று வருவதால் அதனை முத்துமாரி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தடுமாறி விழுந்தார்.

    இந்நிலையில் இரவு வெகுநேரமாகியும் அவரை காணாததால் அவரது மனைவி வயலுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கிணற்றில் முத்துமாரி பிணமாக மிதந்து கொண்டிருந்தார். இதுதொடர்பாக அவரது உறவினர்கள் ஆலங்குளம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், முத்துமாரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு பயனாளிக்கு ரூ.50,000 வீதம், 100 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.
    • 2 கறவை மாடு வைத்திருக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.5,000- க்கு மேல் அதிக லாபம் கிடைக்கின்றது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட காவலா குறிச்சி ஊராட்சியில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு கறவை மாடுகள் வாங்குவதற்காக ஒரு பயனாளிக்கு ரூ.50,000 வீதம், 100 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சம் கடனுதவி வழங்கும் திட்டம் மற்றும் தென்காசி மாவட்ட மகளிர் திட்டம் மூலமாக விடியல் ஒருங்கிணைந்த வேளாண் பண்ணையக தொகுப்பு தொடக்க விழா நிகழ்ச்சி யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார்.

    இந்நிகழ்ச்சியின் மூலம் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு கறவை மாடுகளின் மூலம் உற்பத்தியாகும் பாலினை ரூ.35-க்கு நேரடியாக கொள்முதல் செய்து, அதிலிருந்து கிடைக்கும் லாபமானது மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள பெண்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இதன் மூலம் சராசரியாக 2 கறவை மாடு வைத்திருக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.5,000- க்கு மேல் அதிக லாபம் கிடைக்கின்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர், திலகராஜ், ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள், காவலாகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர், மாலதி சுரேஷ், ஆலங்குளம் கனரா வங்கி மேலாளர் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக் கொணரும் விதமாக மாநில அளவில் கலைத்திருவிழா போட்டி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது
    • மாணவர்கள் கிராமிய குழு நடனம், தனிநபர் நடனம், கிராம புறபாட்டுக்கு அசத்தலாக நடனமாடினர்

    ஆலங்குளம்:

    கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கையின் போது மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக் கொணரும் விதமாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாநில அளவில் கலைத்திருவிழா போட்டி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பேரில் சிறந்த பள்ளிகளை தேர்ந்தெடுக்கும் அந்தந்த பள்ளிகளில் கலைத் திருவிழா நடைபெற்று வருகிறது. ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று கலைத்திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார். கிராமிய குழு நடனம், தனிநபர் நடனம் நடந்தது. மாணவியர் கிராம புறபாட்டுக்கு அசத்தலாக நடனமாடினர்.இந்த விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள்,மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • நெல்லையில் இருந்து தென்காசி நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று திடீரென பழுதானது.
    • பஸ் நேற்று தான் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் எப்.சி. காண்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள அத்தியூத்து விளக்கு அருகே நெல்லையில் இருந்து தென்காசி நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று திடீரென பழுதானது. அதேபோல் ஆலங்குளத்தில் இருந்து பாவூர்சத்திரம் நோக்கி சென்ற மற்றொரு அரசு பஸ்சும் பழுதாகி அடுத்தடுத்து நின்றது.

    இதனால் அதில் இருந்த பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் சாலையோரம் காத்திருந்தனர். சிறிது நேரத்திற்கு பின்னர் அவ்வழியே வந்த மாற்று பஸ்களில் பயணிகளை ஏற்றி அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அங்கிருந்த பயணிகள் கூறியதாவது:-

    ஆலங்குளத்தில் இருந்து பாவூர்சத்திரம் சென்ற பஸ் நேற்று தான் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் எப்.சி. காண்பிக்கப்பட்டதாக தெரிகிறது. அதற்குள் பழுது ஏற்பட்டு ஓடியதால் அதில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அச்சத்துடன் காணப்பட்டனர்.

    பயணிகள் கோரிக்கை

    நெல்லை- தென்காசி சாலையில் பழுதான பஸ்கள் அதிகளவில் இயங்கி வருகிறது. அதில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு, தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சரிவர செல்ல முடியாமல் போகும் சூழ்நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே நல்ல நிலையில் உள்ள பஸ்களை இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கால்நடைகளின் ரத்தம், பால், சாணம், சிறுநீர் மற்றும் நாசி திரவம் போன்ற மாதிரிகளை சேகரித்து ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • கன்று பேரணி நடத்தி சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ஆலங்குளம்:

    தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை மூலம் முதல்-அமைச்சரின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் ஆலங்குளம் அருகே உள்ள நாரணபுரம் கிராமத்தில் நெல்லை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் பொன்னுவேல் மற்றும் தென்காசி கோட்ட உதவி இயக்குநர் மருத்துவர் மகேஸ்வரி ஆகியோரின் அறிவுரைப்படி ஆலங்குளம் கால்நடை மருந்தகம் சார்பில் இன்று நடைபெற்றது.

    நாரணபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி செல்வி மணிமாறன் தலைமை தாங்கி முகாமினை ெதாடங்கி வைத்தார். நெல்லை நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநர் மருத்துவர் ஜான்சுபாஷ் முன்னிலை வகித்தார். கால்நடைகளை தாக்கும் தோல் கழலை நோய் மற்றும் பறவைக் காய்ச்சல் நோய்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி நோயுற்ற கால்நடைகளின் ரத்தம், பால், சாணம், சிறுநீர் மற்றும் நாசி திரவம் போன்ற மாதிரிகளை சேகரித்து ஆய்விற்கு அனுப்பி வைத்தார்.கால்நடை மருத்துவர்கள் ஊத்துமலை டாக்டர் ரமேஷ், நெட்டூர் டாக்டர் ராமசெல்வம், ஆலங்குளம் டாக்டர். ராஜஜூலியட் ஆகியோரால் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, சினை பரிசோதனை, செயற்கை முறை இன விருத்தி, மடிவீக்க நோய் சிகிச்சை, தடுப்பூசி,கிடாரி கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் தாது உப்புக் கலவைகள் வழங்கப் பட்டது. சிறந்த கால்நடை பராமரிப்பு மேலாண்மை விருது மற்றும் கன்று பேரணி நடத்தி சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ஆலங்குளம் கால்நடை மருத்துவர் ராஜஜூலியட் நன்றி கூறினார். கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பிச்சையா , முப்பிடாதி மற்றும் நாரணபுரம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கால்நடை வளர்க்கும் ஏராளமான விவசாயிகள் முகாமில் கலந்துகொண்டனர்.

    ×