ஆலங்குளம் அருகே அரசு பள்ளியில் கலைத்திருவிழா

மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக் கொணரும் விதமாக மாநில அளவில் கலைத்திருவிழா போட்டி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதுமாணவர்கள் கிராமிய குழு நடனம், தனிநபர் நடனம், கிராம புறபாட்டுக்கு அசத்தலாக நடனமாடினர்
மாணவிகள் கிராம புறபாட்டுக்கு அசத்தலாக நடனமாடிய காட்சி.
மாணவிகள் கிராம புறபாட்டுக்கு அசத்தலாக நடனமாடிய காட்சி.
Published on

ஆலங்குளம்:

கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கையின் போது மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக் கொணரும் விதமாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாநில அளவில் கலைத்திருவிழா போட்டி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பேரில் சிறந்த பள்ளிகளை தேர்ந்தெடுக்கும் அந்தந்த பள்ளிகளில் கலைத் திருவிழா நடைபெற்று வருகிறது. ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று கலைத்திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார். கிராமிய குழு நடனம், தனிநபர் நடனம் நடந்தது. மாணவியர் கிராம புறபாட்டுக்கு அசத்தலாக நடனமாடினர்.இந்த விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள்,மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com