ஆலங்குளம் அருகே மோட்டார் சைக்கிள் - வேன் மோதல்; வாலிபர் பலி

ஆலங்குளம் அருகே உள்ள கடங்கநேரி சின்ராசு இவர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் நெல்லை சென்று விட்டு கடங்கநேரி வந்துள்ளனர். ஆய்க்குடி சுடலை என்பவர் ஓட்டி வந்த வேன் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
ஆலங்குளம் அருகே மோட்டார் சைக்கிள் - வேன் மோதல்; வாலிபர் பலி
Published on

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள கடங்கநேரி சின்ராசு (வயது 27). இவர் தனது நண்பரான தென்காசி ஆய்க்குடி சாரதி (22) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நெல்லை சென்று விட்டு கடங்கநேரி வந்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து ஆய்க்குடி செல்வதற்காக வி.கே.புதூர் சாலையில் சென்றபோது எதிரே ஆய்க்குடி சுடலை என்பவர் ஓட்டி வந்த வேன் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் சின்ராசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாரதி படுகாயம் அடைந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த ஊத்துமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாரதி அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஊத்துமலை போலீசார் வேன் டிரைவர் சுடலையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com