மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு

ஹமீது கான் தனது அக்காளுக்கு குழந்தை பிறந்ததை பார்ப்பதற்காக ஊருக்கு வந்துள்ளார். மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் தூக்கி வீசப்பட்ட ஹமீது கான் தலையில் பலத்த காயமடைந்தார்
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
Published on

நெல்லை:

மானூர் அருகே உள்ள தெற்குப்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சுல்தான். கூலித்தொழிலாளி. இவரது மகன் ஹமீது கான் (வயது 21).

இவர் தெலுங்கானா மாநிலத்தில் ஓட்டல் நடத்தி வரும் உறவினரிடம் வேலை பார்த்து வந்தார். இதையடுத்து அவரது அக்காளுக்கு குழந்தை பிறந்ததை பார்ப்பதற்காக ஊருக்கு வந்துள்ளார். அதன் பின்னர் ஆலங்குளம் சென்று மோட்டார் சைக்கிள் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று தெற்குபட்டியை அடுத்த அருணாசலபேரி அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட ஹமீது கான் தலையில் பலத்த காயமடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com