search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ottapidaram"

    • மாரிமுத்து வேலைக்கு சென்று விட்டு ஓட்டப்பிடாரத்திற்கு கச்சேரி தளவாய்புரம் செல்லும் பஸ்சில் வந்துள்ளார்.
    • நேற்று காலை மாரிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    புதியம்புத்தூர்:

    ஓட்டப்பிடாரம் வ.உ. சி. தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 39) கூலி தொழிலாளி.

    கடந்த 31-ந் தேதி மாரிமுத்து தூத்துக்குடிக்கு வேலைக்கு சென்று விட்டு ஓட்டப்பிடாரத்திற்கு கச்சேரி தளவாய்புரம் செல்லும் பஸ்சில் வந்துள்ளார். பஸ் அங்குள்ள ஒரு திருப்பத்தில் சென்றபோது மாரிமுத்து பஸ்சில் இருந்து இறங்கி உள்ளார்.

    இதில் தடுமாறி கீழே விழுந்து அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மாரிமுத்துவிற்கு ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று காலையில் மாரிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாப்பிள்ளையூரணியில் மாட்டு வண்டி எல்கை பந்தய விழா நடைபெற்றது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி களுக்கும், சாரதிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணியில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவையொட்டி 3-ம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தய விழா நடைபெற்றது.

    மாட்டு வண்டி போட்டி தொடக்கம்

    சண்முகையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், மாப்பிள்ளையூரணி ஊராட்சி தலைவரும், கூட்டுறவுகடன் சங்க தலைவருமான சரவணக்குமார், மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    டேவிஸ்புரம் முதல் தருவைகுளம் வரை 5 மைல் பூஞ்சிட்டு 51 ஜோடி, 4 மைல் தேன்சிட்டு 27 ஜோடி மாட்டுவண்டி எல்கை பந்தயத்தை சண்முகையா எம்.எல்.ஏ, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும் மாப்பிள்ளை யூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவுகடன் சங்க தலைவருமான சரவணக்குமார், தெற்கு மாவட்ட தி.மு.க. சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி களுக்கும், சாரதிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

    கலந்து கொண்டவர்கள்

    விழாவில் தெற்கு மாவட்ட தி.மு.க. சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, துணை அமைப்பாளர் ஜீவா, மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து, தெற்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளரும் ஊராட்சி உறுப்பினருமான தங்கமாரிமுத்து, ஒன்றிய துணைச்செயலாளர்

    ராமசந்திரன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கண்ணன், ஊராட்சி உறுப்பினர் பாரதிராஜா, ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மகாராஜா, கிளைச்செயலாளர்கள் பொன்னுச்சாமி, குமார், தமிழ்நாடு தேவர் பேரவை இளைஞர் அணி மற்றும் நேதாஜி நற்பணி மன்றம், ரேக்ளா கமிட்டியாளர்கள் சந்தனகுமார், பொன்ராஜ், ராஜா, சுடலை, முத்துகிருஷ்ணன், பாலு, அர்ஜுனன், மூக்காண்டி, மணிகண்டன், பாண்டி, பாஸ்கர், முத்து, தி.மு.க. இளைஞர் அணி கவுதம், கப்பிக்குளம் பாபு மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு மாணவர் விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சண்முகையா எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
    • சவலாபேரி அரசு மேல்நிலைபள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் சண்முகையா எம்.எல்.ஏ., கலந்து கொண்டார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட கீழக்கோட்டை, கலப்பை பட்டி ஆதிய பஞ்சாயத்து பகுதிகளில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை மற்றும் பாலம் அமைத்தல் பணிகள் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்க விழா நடைபெற்றது.

    இதில் சண்முகையா எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் கயத்தாறு தாசில்தார் நாகராஜன், ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் (கிராம ஊராட்சி), உதவி பொறியாளர் ரவி, பணி மேற்பார்வையாளர் சங்கர், வி.ஏ.ஓ. கணேசன், கூட்டுறவு சங்கத் தலைவர் சுடலைமுத்து, ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி, பஞ்சாயத்து தலைவர்கள் சண்முகசுந்தரி தங்கராஜ், கீழக்கோட்டை சதீஷ்குமார், கொடியங்குளம் அருண்குமார், கிளை செயலாளர் முருகன், கோமதி, மாவட்ட நலக்குழு உறுப்பினர் பெரியதுரை, பிரதிநிதி ஜோசப் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அப்பகுதிகளில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்ப பதிவு முகாம்களை சண்முகையா எம்.எல்.ஏ. பார்வையிட்டார். பின்னர் கே. கைலாசுபுரம் அரசு மாணவர் விடுதியை பார்வையிட்டு அங்கு வழங்கப்படும் மதிய உண வின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

    இதனையடுத்து புளி யம்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்துக்கு சென்று ஆய்வு நடத்தினார். தொடர்ந்து புளியம்பட்டியை அடுத்துள்ள சவலாபேரி அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சண்முகையா எம்.எல்.ஏ., 55 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கிப் பேசினார்.

    • மின்சாரம் வாரியம் சார்பில் அய்யனார் காலனியில் 63 கிலோவாட் உற்பத்திதிறன் கொண்ட மின்மாற்றி அமைக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் கூட்டுடன்காடு ஊராட்சி தலைவர் மாங்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கூட்டுடன்காடு பகுதியில் மின்சாரம் முறைப்படுத்தி வழங்க புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என்று ஊராட்சி சார்பில் சண்முகையா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

    இதனையடுத்து தமிழ்நாடு மின்சாரம் வாரியம் சார்பில் கூட்டுடன்காடு ஊராட்சி அய்யனார் காலனியில் 63 கிலோவாட் உற்பத்திதிறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. அதன் இயக்கத்தை சண்முகையா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராஜ், உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், கூட்டுடன்காடு ஊராட்சி தலைவர் மாங்கனி, துணைத்தலைவர் முத்துலட்சுமி, தூத்துக்குடி மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, துணை செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், நாகராஜன், ஜோசப் மோகன், தி.மு.க. கிளைச்செயலாளர்கள் ராமசாமி, இசக்கி, சீனிவாசகம், மாணவரணி உதயகுமார், காங்கிரஸ் பிரமுகர் கோபால், ராஜ், கப்பிக்குளம் பாபு, மற்றும் மின்வாரிய அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • எப்போதும் வென்றான் நீர்தேக்கத்தில் அதிகளவு மண் படிந்துள்ளதால் தற்போதைய கொள்ளளவு 104 மில்லியன் கனஅடியாக குறைந்துள்ளது.
    • நீர்த்தேக்கத்தில் இருந்து 20 மில்லியன் கன அடி மண் ரூ. 7.84 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது என்று மார்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசினார்.

    ஓட்டப்பிடராம்:

    ஓட்டப்பிடராம் தாலுகா எப்போதும்வென்றானில் கடந்த 1976-ம் ஆண்டு 4 மீட்டர் உயரமும், 2,670 மீட்டர் நீளமும் கொண்ட நீர்த்தேக்கம் கட்டப்பட்டது.

    1,200 ஏக்கர் நிலம் பாசன வசதி

    இந்த நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 124 மில்லியன் கன அடியாகும். 642.87 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நீர்த்தேகத்தில் 2 மதகுகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த நீர்த்தேக்கம் மூலம் எப்பொதும்வென்றான், காட்டுநாயக்கன்பட்டி, ஆதனூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 1,200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது.

    இந்த நீர்த்தேக்கம் தூர்வாரப்படாததால் மண்மேடாகி, சிறுமழை பெய்தால் கூட நிரம்பி மறுகால்பாயும் நிலை நீடிக்கிறது. நீர்த்தேக்கத்தை தூர்வாரி, ஆழப்படுத்த வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்நிலையில் எப்போதும்வென்றான் நீர்த்தேக்கத்தில் ரூ. 5.60 கோடி திட்ட மதிப்பீட்டில் நீர்வள ஆதாரத்துறை சார்பில் மறுசீரமைப்பு பணிகள் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவுக்கு கோரம்பள்ளம் ஆறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் வசந்தி தலைமை தாங்கினார். யூனியன் துணைத் தலைவர் காசிவிஸ்வநாதன், உதவி செயற்பொறியாளர் சுபாஷ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. நீர்தக்க சீரமைப்பு பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், எப்போதும்வென்றான் நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 3.53 மில்லியன் கனஅடியாகும். அதிகளவு மண் படிந்துள்ளதால் தற்போதைய கொள்ளளவு 104 மில்லியன் கனஅடியாக குறைந்துள்ளது.

    இதில், நீர்த்தேக்கத்தில் இருந்து 20 மில்லியன் கன அடி மண் ரூ. 7.84 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது. மண்ணை அகற்றுவதன் மூலம் தண்ணீர் முழு கொள்ளளவை எட்டும். இதனால் பயிரிடும் நிலங்களும் அதிகரிக்கும். இத்திட்டத்தின் மூலம் எப்போதும்வென்றான் மற்றும் காட்டு நாயக்கன்பட்டி கிராமங்க ளில் உள்ள விவசாயிகள் பயனடை வார்கள் என்றார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் உருவாட்டி, வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஓட்டப்பிடா ரம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் முத்துராஜ், குதிரைகுளம் பஞ்சாயத்து தலைவர் சண்முகையா, நீர்வளத்துறை பாசன விவசாயிகள் சங்க தலைவர் குமாரவேல், தி.மு.க. ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மகாராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அமிழ்வுக்குட்டை அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • மரக்கன்றுகள் நட்டு கரையைப் பலப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமன் கிராமத்தில் கீழமுடிமன், வெள்ளாரம் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி நீர்வடிப்பகுதிகளில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.

    கலெக்டர் ஆய்வு

    விழாவிற்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி, நீர்வடிப்பகுதிகளில் உள்ள 24 விவசாயிகளுக்கு பேட்டரி தெளிப்பான்கள், 39 விவசாயிகளுக்கு தார்ப்பாய்களும், நிலமற்ற விவசாய தொழிலாளர்களின் அடிப்படை வாழ்க்கை தரத்தை உயர்த்தும் பொருட்டு 24 பயனாளிகளுக்கு 24 தையல் எந்திரங்கள் என 87 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சில்லாநத்தம் மற்றும் கீழமுடிமண் ஆகிய பஞ்சாயத்துகளில் ரூ.2 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் நீர்வடிப்பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்பணை, வரத்து கால்வாய் பணி மற்றும் அமிழ்வுக்குட்டை அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

    91 நீர்வடிப்பகுதி

    குழுக்கள்

    அப்போது கலெக்டர் செந்தில் ராஜ் கூறிய தாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டில் தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் கயத்தார், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் மற்றும் புதூர் வட்டாரங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ள 91 நீர்வடிப்பகுதி குழுக்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஓட்டப்பிடாரம் தாலுகாவில் மொத்தம் ரூ.2 கோடியே 67 லட்சம் நிதியில் தடுப்பணை அமைத்தல், ஊரணி சீரமைத்தல், வரத்து கால்வாய் சீரமைத்தல், அமிழ்வுக்குட்டைகள் அமைத்தல் போன்ற பணிகள் நடந்து வருகிறது. மேலும் ரூ.ஒரு கோடி 96 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் விவசாயிகளுக்கு இடுபொருள் வழங்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதிகாரிகளுக்கு அறிவுரை

    தொடர்ந்து அவர், சில்லாநத்தம் மற்றும் கீழமுடிமண் நீர்வடிப்பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்பணை, வரத்துக்கால்வாய் சீரமைக்கும் பணி மற்றும் அமிழ்வுக்குட்டை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சீரமைக்கப்பட்ட வரத்துக்கால்வாய் ஓரங்களிலும், அமிழ்வுக்குட்டையை சுற்றிலும் மரக்கன்றுகள் நட்டு கரையைப் பலப்படுத்தவும் விவசாயத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    தொடர்ந்து பாஞ்சாலங்குறிச்சி சிலோன் காலனியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் பராமரிக்கப்படும் மினி பாரஸ்ட் காடுகள் மற்றும் நர்சரி ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.

    கலந்துகொண்டவர்கள்

    இந்த நிகழ்ச்சிகளில் வேளாண்மை திட்ட அலுவலரும், வேளாண்மை இணை இயக்குநருமான பழனிவேலாயுதம், மாவட்ட கலெக் டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்டின்ராணி, வேளாண்மை துணை இயக்குநர் சாந்திராணி, ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ், மண்டல துணை தாசில்தார் ஸ்டாலின், ஓட்டப்பிடாரம் யூனியன் ஆணையாளர் சிவபாலன், வேளாண்மை உதவிப் பொறியாளர் தமிம்அன்சாரி, நீர்வடிப்பகுதி மேம்பாட்டு அணி உறுப்பினர்கள் முத்துராமன், வெண்ணிலா மற்றும் சில்லாநத்தம், பாஞ்சாலங்குறிச்சி, கீழமுடிமண் நீர்வடிப்பகுதி குழுத்தலைவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • விடுதியில் தங்குமிடம், சமையலறை ஆகியவற்றை எம்.எல்.ஏ பார்வையிட்டார்.
    • மாணவர்களுக்கு அட்டவணையில் உள்ள உணவு சரியான முறையில் வழங்க வேண்டும்

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேட்டூர் தாட்கோ நிதி மூலம் ரூ. 2 கோடியே 51 லட்சம் செலவில் புதிய ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    எம்.எல்.ஏ. ஆய்வு

    அதனைத் தொடர்ந்து ஆதிதிராவிட மாணவர் விடுதியில் சண்முகையா எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி விடுதியை திறந்து வைத்தார்.

    பின்னர் மாணவர் விடுதியில் தங்குமிடம், உணவு அருந்தும் இடம் மற்றும் சமையலறை ஆகியவற்றை எம்.எல்.ஏ பார்வையிட்டார்.

    அப்போது மாணவ ர்களுக்கு அட்டவணையில் உள்ள உணவு சரியான முறையில் வழங்க வேண்டும் என விடுதி காப்பாளரிடம் அறிவுறுத்தினார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், தாட்கோ செயற்பொறியாளர் பால்ராஜ், ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ், யூனியன் கூடுதல் ஆணையாளர் ராம்ராஜ், வட்ட வழங்க அலுவலர் கருப்பசாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைராஜ், வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார், விடுதி காப்பாளர்கள் வேல்முருகன், சுரேஷ், முத்துசெல்வம், முத்துக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் சித்ராதேவி, கனகரத்தினம், பஞ்சாயத்து தலைவர்கள் அருண்குமார், இளையராஜா, மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஓட்டப்பிடாரத்தில் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிவன் கோவில் முன்பு நடந்தது.
    • மக்களை தேடி மருத்துவம் மூலம் கிராமங்களில் வீடு தேடி மருத்துவம் பார்க்கும் திட்டத்தால் மாதந்தோறும் பல லட்சம் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர் என்று அமைச்சர் பேசினார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரத்தில் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிவன் கோவில் முன்பு நடந்தது.

    வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா தலைமை தாங்கினார். மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். வடக்கு ஒன்றிய அவைத் தலைவர் சுப்பிரமணியன் வரவேற்று பேசினார்.

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

    கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரித்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 4 ஆயிரம் கொடுத்து சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றினார்.

    தாய்மார்கள் மீது அக்கறை கொண்ட முதல்- அமைச்சராக பொறுப்பேற்றவுடன் தாய்மார்களுக்கு நகர பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று சட்டத்தை நிறைவேற்றி தந்தார்.

    இதன் மூலம் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ. 1,500 சேமிப்பை ஏற்படுத்தி தந்துள்ளார். கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன், மகளிர் சுயஉதவி கடன் மற்றும் நகை கடனை தள்ளுபடி செய்து சொன்ன வாக்கை நிறைவேற்றி உள்ளார்.

    மக்களை தேடி மருத்துவம்

    மக்களை தேடி மருத்துவம் மூலம் கிராமங்களில் வீடு தேடி மருத்துவம் பார்க்கும் திட்டத்தால் மாதந்தோறும் பல லட்சம் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். இன்னுயிர் காப்போம், நம்மை காப்போம் திட்ட மூலம் சாலைகளில் விபத்தில் பாதிக்கப்படும் நபர்களை அந்த வழியாக செல்பவர்கள் உடனடியாக அருகிலுள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கும் பட்சத்தில் 48 மணி நேரம் சிகிச்சைக்கு அனைத்து செலவையும் அரசே ஏற்கும். அப்போது ஆஸ்பத்திரியில் சேர்க்கும் நபருக்கு ரூ. 5 ஆயிரம் ஊக்கத்தொகையும் அரசு வழங்கும்.

    கிராமப்புற மாணவர்களை பாதிப்பதாக நீட் தேர்வு இருந்து வருகிறது. இதனால் கிராமப்புற மாணவர்கள் நலம் கருதி மருத்துவ படிப்பை தொடர மருத்துவ ஒதுக்கீட்டில் சிறப்பு ஒதுக்கீடு திட்டத்தை தந்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் ராஜேந்திரன், செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் பூங்குமார், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெண்கள் படிக்க படிக்க தான் சமூகம் முன்னேற்றம் வரும் என்று கனிமொழி எம்.பி. பேசினார்.
    • படித்தால் மட்டுமே பெண்கள் சமூகத்தில் மதிக்கப்படுகின்றனர் என கனிமொழி கூறினார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி செக்காரக்குடி கிராமத்தில் ரூ.5 லட்சம் செலவில் பயணிகள் நிழற்குடை, ரூ.11 லட்சம் செலவில் புதிய நூலக கட்டிடம், ஒட்டநத்தம் கிராமத்தில் ரூ.35 லட்சம் செலவில் வட்டாரத் துணை வேளாண்மை விரிவாக்கம் மையம் மற்றும் ரூ.30 லட்சம் செலவில் புதிய சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய கட்டிடத்தை கனிமொழி எம்.பி திறந்து வைத்து பேசியதாவது:- பெண்கள் படிக்க படிக்க தான் சமூகம் முன்னேற்றம் வரும். பெண்கள் வீடுகளில் வீட்டு வேலைகளை முடித்து ஓய்வு நேரங்களில் புத்தகங்களை படிக்க வேண்டும். பெண்கள் படித்தால் மட்டுமே குழந்தைகளுக்கு படிக்க கற்று கொடுக்க முடியும். பெண்கள் படிப்பதை பார்த்து குழந்தைகளுக்கும் படிக்கும் எண்ணம் வரும். சமூகத்தில் யார் யாருக்கெல்லாம் படிக்க மறுக்கப்பட்டதோ அதை மாற்றிக் காட்டி படிக்க வைத்த அரசு அண்ணா கலைஞர் வழிகாட்டிய அரசுதான். படித்தால் மட்டுமே பெண்கள் சமூகத்தில் மதிக்கப்படுகின்றனர் என்றார்.

    விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, ஓட்டப்பிடாரம் தாசிலர் நிஷாந்தினி, சமூகப் பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார், யூனியன் ஆணையாளர் சிவபாலன், யூனியன் கூடுதல் ஆணையாளர் ராம்ராஜ், மண்டல துணை தாசிலர் ஸ்டாலின், பஞ்சாயத்து தலைவர்கள் தேன்மொழி, சரிதா ராமலட்சுமி, ஓட்டப்பிடாரம் யூனியன் உதவி பொறியாளர் ரவி கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சமுதாய நலக்கூடத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.
    • தமிழர்களாக தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபட வேண்டும்

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கக்கரம்பட்டி, வி.தளவாய் புரம் ஆகிய கிரா மங்களில் பாராளு மன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தில் தலா ரூ. 30 லட்சம் மதிப் பீட்டில் சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.

    சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கனிமொழி எம்.பி. ரூ. 30 லட்சம் செலவில் கட்டப் பட்டுள்ள புதிய சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து பேசு கையில், வி.தளவாய்புரம் கிராமத்தில் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திய கிராமமாக உள்ளது. மனிதர்களில் ஏற்ற தாழ்வு இல்லை. அனைவரும் சமம். இதை உணர்ந்து கொண்டு மனிதர்களாக, தமிழர்களாக இந்த நாட்டின், தமிழ் நாட்டின் முன்னேற்றத்துக் காக பாடுபட வேண்டும் என்றார்.

    விழாவில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், யூனியன் துணை தலைவர் காசி விஸ்வநாதன், குறுக்குச்சாலை பஞ்சாயத்து தலைவர் முனியம்மாள், கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, தாசில்தார்கள் நிஷாந்தினி, கிருஷ்ணகுமாரி, கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஓட்டப் பிடாரம் அருகே உள்ள தெற்கு சிந்தலக்கட்டை கிராமத்தில் புதிய பகுதிநேர ரேசன் கடையை கனிமொழி எம்.பி. திறந்து வைத்து பொருட்களை விநியோகம் செய்தார். அதில் சண்மு கையா எம்.எல்.ஏ. உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஓட்டப்பிடாரம் அருகே கோவில் திருவிழாவில் மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது.
    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே ஓசநூத்து கருப்பசாமி, சுடலை மாடசாமி, மொட்டையசாமி கோவில் கொடைவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டி நடந்தது.  போட்டிக்கு சண்முகையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். பெரிய மாட்டு வண்டி போட்டி மற்றும் சிறிய மாட்டு வண்டி போட்டி ஓட்டப்பிடாரம்- பாளையங்கோட்டை சாலையில் நடந்தது.

    பெரிய மாட்டு வண்டி போட்டி 15 கிலோ மீட்டர் தூரம் நடந்தது.  போட்டியை அயிரவன்பட்டி தொழிலதிபர் முருகேசபாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் 13 மாட்டு  வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை மேட்டூர் அழகுபெருமாள் வண்டி தட்டிச் சென்றது. 2-வது பரிசை சக்கம்மாள்புரம் அனுசியா வண்டியும்  தட்டிச்சென்றது.

    சிறிய மாட்டு வண்டி 12 கிலோ மீட்டர் தூரம் நடந்தது. இந்த போட்டியில் 23 வண்டிகள் கலந்து கொண்டன. போட்டியை ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் இளையராஜா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் கம்பம் குமார் மாட்டு வண்டி முதல் பரிசை தட்டிச் சென்றது.

    2-வது பரிசை மேலமருதூர் முத்துப்பாண்டி  வண்டியும், 3-வது பரிசை கம்பம் பெரியகருப்பன்  வண்டியும் தட்டிச்சென்றது. வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பெரிய மாட்டு போட்டியில் முதல் பரிசு ரூ.30 ஆயிரத்தை ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் வழங்கினார். 2-வது பரிசு ரூ.25 ஆயிரத்தை குலசேகரநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு செயலாளர் முருகன் வழங்கினார்.

     3-வது பரிசு ரூ.20 ஆயிரம் கிழக்கோட்டை பஞ்சாயத்து தலைவர் ஜோசப் மற்றும் தொழிலதிபர் கோமதி வழங்கினர்.  சிறிய மாட்டு வண்டி போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு முதல் பரிசு ரூ.20 ஆயிரத்தை ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் இளையராஜா வழங்கினார். 2-வது பரிசு ரூ.18 ஆயிரம் மலைப்பட்டி பஞ்சாயத்து தலைவர் இக்பால் வழங்கினார்.

    3-வது பரிசு ரூ.16 ஆயிரத்தை முறம்பன் பஞ்சாயத்து தலைவர் சுடலைமணி, யூனியன் கவுன்சிலர் மாடசாமி ஆகியோர் வழங்கினர். போட்டியை காண ஆயிரக்கணக்கான மக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு பார்வையிட்டனர்.

    ஓட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    புதியம்புத்தூர்:

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மழை குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. 

    இதனால் அணைகளுக்கு நீர்வரத்து குறைய தொடங்கி உள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் நேற்று 68.75 அடி நீர் இருந்த நிலையில் இன்று சற்று உயர்ந்து 69.30 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணையில் 83.50 அடியும், சேர்வலாறு அணையில் 82.54 அடியும் நீர் இருப்பு உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 54 கனஅடியும், பாபநாசத்திற்கு 693.40 கனஅடியும் நீர் வந்து கொண்டு இருக்கிறது

    தென்காசி மாவட்டத்தில் தற்போது மழை குறைந்துவிட்டதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் குறைந்துவிட்டது. 

    ஆனாலும் சுற்றலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. அவர்கள் நீண்ட வரிசையில் நின்று குளித்து செல்கின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று திடீரென பலத்த மழை பெய்தது. இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

    அந்த பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இன்று காலை நிலவரப்படி ஓட்டப்பிடாரத்தில் 37 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 

    புதியம்புத்தூர் பகுதியில் நேற்று மாலை 3 மணி அளவில் வானத்தில்  மேகமூட்டம் காணப்பட்டது. திடீரென பலத்த மழை பெய்தது. 

    இந்த மழை தட்டப்பாறை வடக்காக ஓட்டப்பிடாரம் வரை பெய்தது. ஜம்புலிங்க புரத்தில் இருந்து தட்டப்பாறை வரையுள்ள விவசாய நிலங்களில் பெய்த கனமழையால் ஓடைகளின் வழியாக  நீர் வரத்து அதிகரித்துபுதியம்புத்தூர் மலர் குளத்திற்கு வந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ×