என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
ஓட்டப்பிடாரம் அருகே ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள்-சண்முகையா எம்.எல்.ஏ. பங்கேற்பு
- அரசு மாணவர் விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சண்முகையா எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
- சவலாபேரி அரசு மேல்நிலைபள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் சண்முகையா எம்.எல்.ஏ., கலந்து கொண்டார்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட கீழக்கோட்டை, கலப்பை பட்டி ஆதிய பஞ்சாயத்து பகுதிகளில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை மற்றும் பாலம் அமைத்தல் பணிகள் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்க விழா நடைபெற்றது.
இதில் சண்முகையா எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் கயத்தாறு தாசில்தார் நாகராஜன், ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் (கிராம ஊராட்சி), உதவி பொறியாளர் ரவி, பணி மேற்பார்வையாளர் சங்கர், வி.ஏ.ஓ. கணேசன், கூட்டுறவு சங்கத் தலைவர் சுடலைமுத்து, ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி, பஞ்சாயத்து தலைவர்கள் சண்முகசுந்தரி தங்கராஜ், கீழக்கோட்டை சதீஷ்குமார், கொடியங்குளம் அருண்குமார், கிளை செயலாளர் முருகன், கோமதி, மாவட்ட நலக்குழு உறுப்பினர் பெரியதுரை, பிரதிநிதி ஜோசப் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அப்பகுதிகளில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்ப பதிவு முகாம்களை சண்முகையா எம்.எல்.ஏ. பார்வையிட்டார். பின்னர் கே. கைலாசுபுரம் அரசு மாணவர் விடுதியை பார்வையிட்டு அங்கு வழங்கப்படும் மதிய உண வின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
இதனையடுத்து புளி யம்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்துக்கு சென்று ஆய்வு நடத்தினார். தொடர்ந்து புளியம்பட்டியை அடுத்துள்ள சவலாபேரி அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சண்முகையா எம்.எல்.ஏ., 55 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கிப் பேசினார்.