ஓட்டப்பிடாரம் அருகே பஸ் படிக்கட்டில் இருந்து தவறி  விழுந்தவர் பலி

மாரிமுத்து வேலைக்கு சென்று விட்டு ஓட்டப்பிடாரத்திற்கு கச்சேரி தளவாய்புரம் செல்லும் பஸ்சில் வந்துள்ளார்.நேற்று காலை மாரிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஓட்டப்பிடாரம் அருகே பஸ் படிக்கட்டில் இருந்து தவறி  விழுந்தவர் பலி
Published on

புதியம்புத்தூர்:

ஓட்டப்பிடாரம் வ.உ. சி. தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 39) கூலி தொழிலாளி.

கடந்த 31-ந் தேதி மாரிமுத்து தூத்துக்குடிக்கு வேலைக்கு சென்று விட்டு ஓட்டப்பிடாரத்திற்கு கச்சேரி தளவாய்புரம் செல்லும் பஸ்சில் வந்துள்ளார். பஸ் அங்குள்ள ஒரு திருப்பத்தில் சென்றபோது மாரிமுத்து பஸ்சில் இருந்து இறங்கி உள்ளார்.

இதில் தடுமாறி கீழே விழுந்து அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மாரிமுத்துவிற்கு ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று காலையில் மாரிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com