search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMDK"

    • விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. தெரிவித்தது.
    • தே.மு.தி.க. போட்டியிடுமா என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது.

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா மற்றும் பா.ம.க. சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    அ.தி.மு.க. சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியில்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. மேலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாகவும் தெரிவித்தது.

    இந்த நிலையில், அந்த தொகுதியில் தி.மு.க., பா.ம.க. மற்றும் நா.த.க. என மும்முனை போட்டி ஏற்பட்டது. மேலும், தே.மு.தி.க. போட்டியிடுமா என்பதும் கேள்விக்குறியாகவே இருந்து வந்தது.

    இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் விக்ரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது."

    "இதுவரை தமிழகத்தில் நடந்த அனைத்து இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களில் போட்டியிட்ட தேமுதிக விக்ரவாண்டி தேர்தலை புறக்கணிக்கிறது. காரணம் தேர்தல்கள் என்பது ஜனநாயக ரீதியாக நேர்மையாக நடக்கவேண்டிய தேர்தல்கள் இன்றய கால கட்டத்தில் ஆட்சியர்களின் அதிகாரத்தால் தேர்தல்கள் தவறாக நடதப்படுகிறது."

    "இந்த இடைதேர்தல் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் உழைப்பு, நேரம், பணம் அனைத்தும் விரயம் செய்ய விரும்பவில்லை. எங்கள் தொண்டர்களின் உழைப்பை வீணடிக்க விரும்பாத காரணத்தால் தேமுதிக இந்த விக்ரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது. இன்றய ஆட்சியர்களின் கரங்களில் தேர்தல் என்கின்ற ஜனநாயகம் மிக பெரிய கேள்விக்குறியக்கப்பட்டுள்ளது."

    "ஜனநாயக நாட்டில் நாம் வாழ்கின்றோம் என்று நாம் பெருமையாக சொல்லி கொண்டாலும் ஜனநாயகம் என்பது இன்றக்கு கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது என்பதை ஒட்டு மொத்த மக்களும், கழகத்தினரும் அறிவர். எனவே இந்த விக்ரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது," என்று தெரிவித்துள்ளார்.

    • தேர்தல் சுதந்திரமாக நியாயமாக நடக்காது என்பதால் தேர்தலை புறக்கணிக்கிறோம்.
    • எதார்த்த நிலையை புரிந்து நாங்கள் முடிவெடுத்து இருக்கிறோம்.

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

    தேர்தல் சுதந்திரமாக நியாயமாக நடக்காது என்பதால் தேர்தலை புறக்கணிக்கிறோம்.

    இப்போதைக்கு விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக முடிவெடுத்து இருக்கிறோம். இது பற்றி மட்டும் தான் பேச முடியும்.

    எதார்த்த நிலையை புரிந்து நாங்கள் முடிவெடுத்து இருக்கிறோம். என்டிஏ, நாம் தமிழர் கட்சியை ஒரு பெரிய கட்சியாக எடுத்துக்கொள்ள முடியாது. அதிமுக தான் பெரிய கட்சி.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேமுதிக நிலைப்பாடு குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி இருப்பார் என்று கூறினார்.

    • தே.மு.தி.க. தனது வேட்பாளரை நிறுத்தி, அதற்கு அ.தி.மு.க ஆதரவை கேட்கலாம்.
    • தே.மு.தி.க. எடுக்கும் நிலைப்பாட்டை பொறுத்தே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பரபரப்பு இன்னும் கூடும்.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. வாக்குகள் 13-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜனதா கூட்டணி மற்றும் நாம்தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி, விழுப்புரம் (தனி) பாராளுமன்ற தொகுதிக்குள் வருகிறது. ஆனால் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி பொது தொகுதியாகும். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட ரவிக்குமார், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் மட்டும் 72 ஆயிரத்து 188 வாக்குகள் பெற்றார்.

    அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் பாக்கியராஜ் 65 ஆயிரத்து 365 வாக்குகள் பெற்றார். பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ம.க வேட்பாளர் முரளி சங்கர் 32 ஆயிரத்து 198 வாக்குகள் பெற்றார்.

    இந்த தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்று இருப்பதால், இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் கடும் போட்டி ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அ.தி.மு.க. இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக நேற்று திடீரென்று அறிவித்தது.

    இந்த அறிவிப்பு அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மட்டுமின்றி அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.விற்கும் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

    இந்த விவகாரத்தில் தே.மு.தி.க. என்ன நிலைப்பாடு எடுக்க போகிறது என்று இன்னும் தெரியவில்லை. ஒருவேளை அங்கு தே.மு.தி.க. தனது வேட்பாளரை நிறுத்தி, அதற்கு அ.தி.மு.க ஆதரவை கேட்கலாம். அல்லது, அ.தி.மு.க. போன்று போட்டியில் இருந்து விலகி கொள்ளலாம்.

    தே.மு.தி.க. எடுக்கும் நிலைப்பாட்டை பொறுத்தே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பரபரப்பு இன்னும் கூடும்.

    இருப்பினும் தற்போதைய நிலையில் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.தி.மு.க. கூட்டணி சார்பில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். பா.ஜனதா கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விஜய பிரபாகரன் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
    • தேர்தல் ஆணையத்திற்கு இ-மெயில் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக பிரேமலதா தெரிவித்து இருந்தார்.

    சென்னை:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

    இதனை தொடர்ந்து கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாகவும் இதனால் ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு இ-மெயில் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், விருதுநகரில் போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரன் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்திக்கிறார்.

    டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் பிற்பகல் 3.30 மணியளவில் ஆணையரை சந்திக்கும் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என மனு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    • ஒரு சின்ன பையன் முதல்முறையா தேர்தல்ல நிக்கிறாரு. அப்படி ஜெயிச்சாதான் என்ன போச்சு உங்களுக்கு?
    • இப்படி பொறுப்பில்லாமல் பேசுவது பிரேமலத்தவன் வழக்கம்.

    விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜயப்ரபாகரன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் தோல்வியடைந்தார்..

    இது தொடர்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "50 - 60 வருசமா கட்சி நடத்துறீங்க, ஆட்சியில இருக்கீங்க. ஒரு சின்ன பையன் முதல்முறையா தேர்தல்ல நிக்கிறாரு. அப்படி ஜெயிச்சாதான் என்ன போச்சு உங்களுக்கு?

    39 தொகுதி நீங்க ஜெயிச்சதா அறிவிச்சிங்கள்ல, ஒரு தொகுதில கடைசி வரைக்கும் போராடி வராரே ஒரு இளைஞர், அவரை பெரிய மனசோட நீங்க ஜெயிக்க வச்சிருந்தீங்கனா, இந்த ஆட்சியை நா தலைவணங்கி போற்றியிருப்பேன் வரவேற்றிருப்பேன்.

    ஆனால் அதிலும் சூழ்ச்சி செய்து அவர் ஜெயிக்க கூடாது என்பதற்காக அவர்கள் அமைச்சர்களை வைத்து அதிகாரிகளை மிரட்டி தவறு செய்துள்ளீர்கள்.

    விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும்" என்று அவர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இது தொடர்பாக பேசிய விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், "பிரேமலதா முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். வாக்கு என்னும் மையத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டு கிளம்பினார்கள். ஆனால் அடுத்த நாள் சென்னையில் சின்ன பையனா இருந்தா என்ன என்று பிரேமலதா பேசுகிறார். இது என்ன வடிவேல் படமா" இது பாராளுமன்ற தேர்தல். இப்படி பொறுப்பில்லாமல் பேசுவது பிரேமலதாவின் வழக்கம். வேண்டுமானால் அவர் சட்ட போராட்டம் நடத்தட்டும்" என்று தெரிவித்துள்ளார் .

    மேலும் பேசிய அவர், "மோடியின் பதவியேற்பு விழாவில் அதானியும் அம்பானியும் கலந்து கொண்டுள்ளனர். இந்த அரசு அதானி அம்பானிகளுக்கானது தான் என்பதை மீண்டும் ஒருமுறை மோடி நிரூபித்துள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தலோடு பாஜக கூட்டணியின் ஆட்சி முடிவுக்கு வரும். ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவின் நிர்வாக தோல்வி" என்று பேசியுள்ளார்.

    • 39 தொகுதி நீங்க ஜெயிச்சதா அறிவிச்சிங்கள்ல...
    • அமைச்சர்களை வைத்து அதிகாரிகளை மிரட்டி தவறு செய்துள்ளீர்கள்.

    விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜயப்ரபாகரன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் தோல்வியடைந்தார்..

    இது தொடர்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "50 - 60 வருசமா கட்சி நடத்துறீங்க, ஆட்சியில இருக்கீங்க. ஒரு சின்ன பையன் முதல்முறையா தேர்தல்ல நிக்கிறாரு. அப்படி ஜெயிச்சாதான் என்ன போச்சு உங்களுக்கு?

    39 தொகுதி நீங்க ஜெயிச்சதா அறிவிச்சிங்கள்ல, ஒரு தொகுதில கடைசி வரைக்கும் போராடி வராரே ஒரு இளைஞர், அவரை பெரிய மனசோட நீங்க ஜெயிக்க வச்சிருந்தீங்கனா, இந்த ஆட்சியை நா தலைவணங்கி போற்றியிருப்பேன் வரவேற்றிருப்பேன்.

    ஆனால் அதிலும் சூழ்ச்சி செய்து அவர் ஜெயிக்க கூடாது என்பதற்காக அவர்கள் அமைச்சர்களை வைத்து அதிகாரிகளை மிரட்டி தவறு செய்துள்ளீர்கள்.

    விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
    • 13-வது சுற்றுக்கு பின்னர் பல முறைகேடுகள் நடந்தது உண்மை.

    சென்னை:

    சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * விஜயபிரபாகரன் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டுள்ளார்.

    * திட்டமிடப்பட்ட சூழ்ச்சியால் விஜயபிரபாகரன் வீழ்த்தப்பட்டுள்ளார்.

    * 0.4 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தான் விஜயபிரபாகரன் தோற்றதாக அறிவிக்கப்பட்டது.

    * 3 மணி முதல் 5 மணிவரை வாக்கு எண்ணிக்கையை ஆட்சியர் நிறுத்தியது ஏன்?

    * தனக்கு நெருக்கடி இருந்ததாக வெளிப்படையாக அறிவித்தார் விருதுநகர் மாவட்ட ஆட்சியர்.

    * வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    * 13-வது சுற்றுக்கு பின்னர் பல முறைகேடுகள் நடந்தது உண்மை.

    * விருதுநகர் தொகுதி முடிவு அறிவிக்கும் முன் 40 தொகுதிகளில் வெற்றி என முதல்வர் கூறியது ஏன்?

    * விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3,80,877 வாக்குகளை விஜயபிரபாகரன் பெற்றார்.
    • 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியை தழுவினார்.

    சென்னை:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் போட்டியிட்டார். விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பாக விஜயபிரபாகரனும், என்.டி.ஏ கூட்டணி சார்பாக ராதிகா சரத்குமாரும், இந்தியா கூட்டணி சார்பாக தி.மு.க. வேட்பாளர் மாணிக்கம் தாகூரும் போட்டியிட்டனர்.

    தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களில் விஜயபிரபாகரன் முன்னிலை வகித்து வந்தார். இதனால் விஜயபிரபாகரன் வெற்றி பெறுவார் என ஊகிக்கப்பட்டது. எனினும் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியை தழுவினார். மொத்தம் 3,80,877 வாக்குகளை விஜயபிரபாகரன் பெற்றுள்ளார்.


    இந்நிலையில், இது முடிவல்ல... தொடக்கம் தான்... என தேர்தல் முடிவு குறித்து விஜயபிரபாகரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர், மன்னிக்கவும் நண்பர்களே... மிகவும் சிறிய வித்தியாசத்தில் தோற்று உள்ளேன். எனினும் வாக்களித்த அனைத்து அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

    • விமான நிலைய போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை.
    • தேமுதிகவினர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதுடன் பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கோயம்பேடு வரை வாகன பேரணி செல்ல முற்பட்டார்.

    அவருக்கு பின்பாக தேமுதிக தொண்டர்களும் வாகன பேரணி செல்ல முயன்றனர். பிரேமலதா வாகனத்திற்கு மட்டும் தான் பேரணி செல்ல அனுமதி அளித்த காவல்துறையினர் தேமுதிகவினரின் வாகன பேரணிக்கு அனுமதி மறுத்தனர்.

    காவல்துறையின் அனுமதியை மீறி பேரணியாக செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதனால் காவல்துறையினருக்கும் தேமுதிக தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், தேமுகதிகவினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    தேர்தல் ஆணையத்தில் பெற்ற அனுமதியை மீறி செயல்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆலந்தூர் தாசில்தாரும், உதவி தேர்தல் அதிகாரியுமான துளசிராமன் விமான நிலைய போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து, பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுப்பது உள்பட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, தேமுதிக மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் சந்தோஷ் குமார் உள்பட தேமுதிகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

    • விஜயகாந்த் சார்பில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் குடியரசு தலைவரிடம் விருதை பெற்றுக் கொண்டார்.
    • பத்மபூஷண் விருதை பெற்று வந்த பிரேமலதாவை சென்னை விமான நிலையத்தில் தேமுதிக தொண்டர்கள் வரவேற்றனர்.

    டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா மே 9 அன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வென்றவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

    மறைந்த நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. விருது வழங்கும் விழாவில் விஜயகாந்த் சார்பில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் குடியரசு தலைவரிடம் விருதை பெற்றுக் கொண்டார்.

    விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட பத்மபூஷண் விருதை பெற்று வந்த பிரேமலதாவை சென்னை விமான நிலையத்தில் தேமுதிக தொண்டர்கள் வரவேற்றனர்.

    அதன்பின்பு விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதுடன் பிரேமலதா சாலை மார்க்கமாக கோயம்பேடு வரை வாகன பேரணி செல்ல முற்பட்டார். அவருக்கு பின்பாக தேமுதிக தொண்டர்களும் வாகன பேரணி செல்ல முயன்றனர். பிரேமலதா வாகனத்திற்கு மட்டும் தான் பேரணி செல்ல அனுமதி அளித்த காவல்துறையினர் தேமுதிகவினரின் வாகன பேரணிக்கு அனுமதி மறுத்தனர்.

    காவல்துறையின் அனுமதியை மீறி பேரணியாக செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதனால் காவல்துறையினருக்கும் தேமுதிக தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனையடுத்து தேமுதிக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இந்நிலையில் சாலை மார்க்கமாக கோயம்பேடு வந்தடைந்த பிரேமலதா, விஜயகாந்த் நினைவிடத்தில் பத்ம பூஷண் விருதை வைத்து மரியாதை செலுத்தினார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பொதுமக்கள் தே.மு.தி.க. அலுவலகத்திற்கு சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
    • விஜயகாந்தை பொருத்தவரையில் எல்லோருக்கும் உதவும் எண்ணம் கொண்டவராகவும் தன்னை தேடி வந்தவர்களை சாப்பாடு போட்டு அனுப்பும் பழக்கம் உள்ளவராகவே இருந்து வந்துள்ளார்.

    சென்னை:

    நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிச. 28-ந்தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பொதுமக்கள் தே.மு.தி.க. அலுவலகத்திற்கு சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.

    விஜயகாந்தை பொருத்தவரையில் எல்லோருக்கும் உதவும் எண்ணம் கொண்டவராகவும் தன்னை தேடி வந்தவர்களை சாப்பாடு போட்டு அனுப்பும் பழக்கம் உள்ளவராகவே இருந்து வந்துள்ளார். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் செய்துள்ளார்.

    இதுபோன்ற நல்ல உள்ளம் கொண்டவராக அவர் திகழ்ந்ததன் காரணமாகவே விஜயகாந்த் மீது பொதுமக்கள் அளவு கடந்த அன்பு வைத்துள்ளனர். அவர் உயிரிழந்த பிறகும் அவரது நினைவை போற்றும் வகையில் பொதுமக்கள் அவருக்கு தொடர்ச்சியாக மரியாதை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் 125 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தி உள்ளனர். மேலும் பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவிடமாக இது போற்றப்படுகிறது.

    • விருது பெற உள்துறை அமைச்சகத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது.
    • வெயில் காரணமாக பள்ளிகளை ஒருவாரம் தள்ளி திறக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    3 நாட்களுக்கு முன்பு எனக்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்தது. விஜயகாந்திற்கு வரும் 9-ந்தேதி பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது. விருது பெற உள்துறை அமைச்சகத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது. நானும், விஜயபிரபாகரனும் விருது பெற டெல்லி செல்ல உள்ளோம்.

    வெயில் காரணமாக பள்ளிகளை ஒருவாரம் தள்ளி திறக்க வேண்டும்.

    விஜயபிரபாகர் விருதுநகர் தொகுதியில் ஒரு மாதம் தங்கியிருந்து எல்லா கிராமங்களுக்கு நேரடியாக சென்ற வேட்பாளர். எல்லா ஊர்களுக்கும் சென்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்தார்.

    கேப்டனுடைய மகன் இங்கே போட்டியிடுகிறார். இந்த மண்ணின் மைந்தர் அவருக்கு கண்டிப்பாக வெற்றி வாய்ப்பை தருவோம் என்று பெண்கள், இளைஞர்கள், புது வாக்காளர்கள் அனைவரும் விஜயபிரபாகரனுக்கு வாக்களித்ததாக கூறுகின்றனர் என்று தெரிவித்தார்.

    ×