search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MI"

    • மும்பை அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.
    • ஐந்து போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 25-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    முன்னதாக மும்பை அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. நான்காவது போட்டியில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.

    இரு அணிகளும் அதிக தோல்விகளை சந்தித்துள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன. 

    • நாளை (ஏப்.7) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 20வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை, டெல்லி கேபிட்டல்ஸ் எதிர்கொள்கிறது
    • நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் மும்பை அணி உள்ளது

    17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை (ஏப்.7) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 20வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை, டெல்லி கேபிட்டல்ஸ் எதிர்கொள்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் மும்பை அணி உள்ளது.

    இழந்தை இடத்தை மீண்டும் பிடிக்க மும்பை அணிக்கு கட்டாயம் ஒரு வெற்றி பெற்றாக வேண்டும். ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்சி மீது உள்ள அதிருப்தி காரணமாகவே இந்த நிலை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், காயம் காரணமாக கடந்த மூன்று ஆட்டங்களிலும் விளையாடாத சூர்யகுமார் யாதவ் நாளை நடைபெற உள்ள டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மறுபுறம், டெல்லி அணியை பொறுத்தவரையில் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி 1 வெற்றியும், 3 ஆட்டங்களில் தோல்வியும் கண்டு புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. கடைசியாக கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி படுதோல்வி அடைந்தது.

    அந்த தோல்வியில் இருந்து மீள வேண்டுமெனில் புதிதாக வெற்றி ஒன்றை பெற வேண்டிய நிர்பந்தத்தில் டெல்லி அணி உள்ளது. இதன் காரணமாக இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. அதேநேரம் சொந்த மண்ணில் விளையாடுவது மும்பை அணிக்கு கூடுதல் வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் நாளை மும்பை உடனான போட்டி குறித்து டெல்லி அணி வீரர் டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மலையாளத்தின் வெற்றிபெற்ற அய்யப்பனும் கோஷியும்' படத்தின் போஸ்டரை எடிட் செய்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது
    • குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா, இந்த முறை மும்பை அணி கேப்டனாக களமிறங்குகிறார்

    17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதன்படி, 2-வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு மோதுகினறன.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.

    கடந்த இரண்டு சீசன்களாக குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா, இந்த முறை மும்பை அணி கேப்டனாக களமிறங்குகிறார். அதேநேரம், குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இன்று முதல்முறையாக களமிறங்க உள்ளது. இதனால், இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    அகமதாபாத் மைதானம் கடந்த தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்ததால், பல போட்டிகளில் ரன் மழை பொழிந்தது. இன்றைய போட்டியிலும் ஆடுகளம் அதேநிலையில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற மும்பை ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்குகிறது.

    • இலங்கை வீரர் மதுஷங்கா காயம் காரணமாக 2024 சீசனில் இருந்து விலகியுள்ளார்.
    • தென்ஆப்பிரிக்கா வீரர் U-19 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்றவர்.

    ஐபிஎல் 2024 சீசன் டி20 கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்க இருக்கிறது. களம் இறங்க 10 அணிகளும் தயாராகியுள்ள நிலையில், ரசிகர்களும் போட்டிகளை காண ஆர்வமாக உள்ளனர்.

    மும்பை இந்தியன்ஸ் அணி புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் கோப்பையை வெல்ல களம் இறங்க இருக்கிறது.

    மும்பை இந்தியன்ஸ் அணியில் இலங்கையை சேர்ந்த மதுஷங்கா இடம் பெற்றிருந்தார். இவர் காயம் காரணமாக 2024 சீசனில் இருந்து விலகியுள்ளார்.

    இதனால் தென்ஆப்பிரிக்காவின் 17 வயதான மபாவா என்ற இளம் வீரரை மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் பட்டியலில் இணைத்துள்ளது.

    இடது கை வேகப்பந்து வீச்சாளரான மபாகா 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அபாரமாக பந்து வீசினார். 21 விக்கெட்டுக்கள் வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்றார். மேலும், 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் 21 விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

    இவர் தென்ஆப்பிரிக்கா ஏ, தென்ஆப்பிரிக்கா எமெர்ஜிங் அணிகளுக்காக விளையாடியுள்ளார். இவர் வீரர்கள் அறையை மலிங்கா, பும்ரா ஆகிய ஜாம்பவான்கள் உடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.

    140 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசும் திறன் கொண்ட மபாகா, பவுன்சர் மற்றும் யார்க்கர் பந்துகள் வீசுவதிலும் சிறந்து விளங்குகிறார்.

    • ஆஸ்திரேலியாவின் ஜேசன் பெரேண்டர்ஃப் காயத்தால் அணியில் இருந்து விலகியுள்ளார்.
    • கடந்த சீசனில் 12 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.

    ஐபிஎல் 2024 சீசன் டி20 கிரிக்கெட் திருவிழா தொடங்குவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், 10 அணிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றன. தங்களது அணியில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் உடனடியாக மாற்று வீரரை தேர்வு செய்து, அணியை தயார் படுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெரேண்டர்ஃப் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக இங்கிலாந்தை சேர்ந்த லூக் வுட்-ஐ மாற்று வீரராக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைத்துள்ளது.

    இடது கை வேகப்பந்து வீச்சாளரான வுட் இங்கிலாந்து அணிக்காக ஐந்து டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 50 லட்சம் ரூபாய் விலைில் வுட்டை அணியில் இணைத்துள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்து சீசனில் சிறப்பாக செயல்பட்டார். ஆர்ச்சர், பும்ரா இல்லாத நிலையில் 12 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    வருகிற 22-ந்தேதி ஐபிஎல் 17-வது சீசன் தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே)- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    மார்ச் 24-ந்தேதி மும்பை அணி தனது முதல் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது.

    • முதல் மூன்று இடங்களில் உள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.
    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது.

    பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த 23-ம் தேதி துவங்கியது. ஐந்து அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 

    லீக் பிரிவின் கடைசி போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை மட்டுமே குவித்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி அணி 13.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டி எளிதாக வெற்றி பெற்றது.

    லீக் போட்டிகளின் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடிய 8 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 2-வது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் அணி 3-வது இடத்திலும் உள்ளன. முதல் மூன்று இடங்களில் உள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.

     


    இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. நாளை (மார்ச் 15) நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி மார்ச் 17-ம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் டெல்லி அணியுடன் பலப்பரீட்சை நடத்தும். 

    • 5 முறை ஐபிஎல் பட்டத்தை வென்றவர். எம்.ஐ-ல் ரோஹித் ஷர்மாவுக்கு கேப்டன் பதவியை நீட்டிக்க வேண்டும்
    • ஹார்திக் பாண்டியாவை துணை கேப்டனாக நியமிக்க வேண்டும்.


    இந்தியன் பிரீமியர் லீக் போட்டிவருகிற 22 முதல் மே- 26 வரை நடைபெறுகிறது.இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டி 2024-க்கு முன் அந்த அணியில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.மும்பை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹார்திக் பாண்டியாவைகேப்டனாக நியமித்து உள்ளது.

    ஐபிஎல் பட்டத்தை வென்றவர் ரோஹித் சர்மா. இந்த அறிவிப்பிற்கு பிறகு எம்.ஐ.ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கேப்டனை மாற்றும் உரிமையாளரின் முடிவை கண்டித்தனர்.இதே போல் முன்னாள் இந்திய மற்றும் எம்.ஐ ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங்கும் கருத்து தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து யுவராஜ் சிங் கூறியதாவது:-

    ரோஹித் சர்மா 5 முறை ஐபிஎல் பட்டத்தை வென்றவர். எம்.ஐ-ல் ரோஹித் ஷர்மாவுக்கு கேப்டன் பதவியை நீட்டிக்க வேண்டும். மேலும் ஹார்திக் பாண்டியாவை துணை கேப்டனாக நியமிக்க வேண்டும்.

    தற்போது ரோஹித் இந்திய அணியை வழிநடத்தி சிறப்பாக விளையாடி வருகிறார்.ரோஹித் இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கிறார், இன்னும் சிறப்பாக விளையாடுகிறார்.ஐபிஎல் 2024 -க்கு முன் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய எம்ஐ முடிவு கண்டிக்கதக்கது .

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக நியமனம்.
    • நீண்ட காலகமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடி வெற்றிகளை தேடிக் கொடுத்துள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் சி.எஸ்.கே. கேப்டனாக எம்.எஸ். தோனி இருந்து வருகிறார். 42 வயதாகும் எம்.எஸ். தோனி இந்த சீசனுக்கு பிறகு விளையாட மாட்டார் எனத் தெரிகிறது. இதற்கிடையில் சிஎஸ்கே-யில் புதிய பொறுப்பை ஏற்க இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.

    அதேவேளையில் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். இவரது தலைமையில் நான்கு முறை மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

    இருந்தபோதிலும் ஹர்திக் பாண்ட்யாவுக்காக ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது. இதனால் ரோகித் சர்மா சற்று அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.

    எம்.எஸ். தோனி விளையாடாவிட்டால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போதைய நிலையில் ஜடேஜா உள்ளார். ஏற்கனவே ஜடேஜாவிடம் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது. அவரது தலைமையில் அணி சிறப்பாக செயல்படவில்லை. இதனால் தொடரின் பாதிலேயே எம்.எஸ். தோனி மீண்டும் கேப்டன் பதவியை ஏற்றுக் கொண்டார்.

    இவர்தான் என்பதுபோல் குறிப்பிடத்தகுந்த நபர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இல்லை. இந்த நிலையில்தான் ரோகித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் 36 வயதான அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அம்பதி ராயுடு கூறியதாவது:-

    எதிர்காலத்தில் ரோகித் சர்மா சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நீண்ட காலம் விளையாடி விட்டார். சிஎஸ்கே அணிக்காக விளையாடி அதேபோல் வெற்றிகளை குவித்தால் அது சிறப்பானதாக இருக்கும். சிஎஸ்கே-யில் கேப்டன் பதவியும் (எம்.எஸ். தோனி இந்த சீசனுடன் ஓய்வு பெற்றால்) அவரை நோக்கி இருக்கும். அதை பெறும் உரிமையை அவர் பெற்றுள்ளார். அணியை வழி நடத்த விரும்புகிறாரா? இல்லையா? என்பது அவரது முடிவு.

    இவ்வாறு அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார்.

    எம்எஸ் தோனி கடந்த சீசனில் மூட்டு வலியுடன் விளையாடினார். பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதனால் 2025 சீசனில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் அம்பதி ராயுடன் இவ்வாறு தெரிவித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுடன் எம்.எஸ். தோனி பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    • கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்ட ரோகித் சர்மாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
    • ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஹாஷ்டேகுகள் வைரலாகின.

    மும்பை:

    மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார். மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டு வந்த நிலையில், ஹர்திக் பாண்ட்யாவுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

    கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டதற்காக ரோகித் சர்மாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, மும்பை இந்தியன்ஸ் அணியில் 10 ஆண்டாக கேப்டன் பொறுப்பு வகித்த ரோகித் சர்மாவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பாராட்டு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பாலோயர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது.

    ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் இன்ஸ்டாகிராமில் சுமார் 1.5 லட்சம் பாலோயர்ஸ்களை மும்பை அணி இழந்துள்ளது.

    மும்பை அணியிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை என குமுறும் இணைய வாசிகள், ரோகித் சர்மாவுக்காக மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவளித்து வருவதாகவும் பதிவிட்டு வருகின்றனர். மேலும் ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஹாஷ்டேகுகள் வைரலாகி வருகிறது.

    • மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டுள்ளார்.
    • கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டதற்காக ரோகித் சர்மாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டுள்ளார். மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டு வந்த நிலையில், ஹர்திக் பாண்ட்யாவுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

    கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டதற்காக ரோகித் சர்மாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் 10 ஆண்டுகளாக கேப்டன் பொறுப்பு வகித்த ரோகித் சர்மாவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பாராட்டு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 2013 முதல் 2023 வரை ஒரு பத்தாண்டு கால உற்சாகமான சவால், ரோகித்துக்கு மரியாதை என பதிவிட்டுள்ளது.

    • ஹர்திக் பாண்ட்யாவை குஜராத் அணி தக்கவைத்துக் கொண்டது.
    • ஒருவேளை அவர் மும்பை அணிக்கு சென்றால் சுப்மன கில் கேப்டனாக செயல்படுவார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். வீரர்களை தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளவும், விடுவிக்கவும் இயலும்.

    ஒவ்வொரு அணியும் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்டவர்கள் விவரத்தை நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.

    10 அணிகளிலும் 174 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். 81 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில்தான் அதிகமான வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 3 அணிகள்தான் அதிகமான வீரர்களை தக்க வைத்துள்ளன.

    சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ், பிரிட்டோரியஸ், அம்பதி நாயுடு, மகாலா, ஜேமிசன், பகத் வர்மா, சேனாபதி, ஆகாஷ் சிங் ஆகிய 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் டோனி விளையாடுவது உறுதியாகி உள்ளது.

    குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டயா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புவார் என்று கடந்த சில தினங்களாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இந்த அறிவிப்பின்போது குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

    அதே நேரத்தில் வீரர்களின் பரிமாற்றம் வருகிற 12-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஹர்திக் பாண்ட்யாவை தங்களது அணிக்கு கொண்டுவர மும்பை அணி தொடர்ந்து முயற்சிக்கும் என்று தெரிகிறது. அந்த முயற்சி வெற்றி பெற்றால், குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வீரர்கள் விடுவிப்புக்கு பிறகு 10 அணிகளிடமும் ரூ.262.95 கோடி கையிருப்பு இருக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம்தான் அதிகபட்சமாக ரூ. 40.75 கோடி கையிருப்பு உள்ளது. அந்த அணி 11 வீரர்களை விடுவித்தது.


    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 வீரர்களை வெளியேற்றி உள்ளதால் ரூ. 31.4 கோடி கைவசம் இருக்கிறது.

    ஐதராபாத் அணி ரூ.34 கோடியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.32.7 கோடியும், பஞ்சாப் கிங்ஸ் ரூ.29.1 கோடியும், டெல்லி கேப்பிடல்ஸ் ரூ.28.95 கோடியும், குஜராத் ரூ.23.15 கோடியும், மும்பை இந்தியன்ன்ஸ ரூ.15.25 கோடியும், ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.14.5 கோடியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ரூ.13.15 கோடியும் கையிருப்பாக வைத்துள்ளன.

    • கடந்த முறை மும்பையில் இரு அணிகளும் விளையாடிய போது, சென்னை அணி ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.
    • மும்பை ரசிகர்களுக்காக பிரத்யேகமாக அந்த மைதானத்தில் இரண்டு கேலரிகளை நிதா அம்பானி முன்பதிவு செய்துள்ளார்.

    மும்பை:

    ஐபிஎல் வரலாற்றில் அதிக சாம்பியன்ஸ் டிராபிகளை வென்ற இரு அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் முதல் முறையாக இந்த ஐபிஎல் தொடரில் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. ஆனால் இந்த போட்டியில் மும்பை அணிக்கு ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நீதா அம்பானி முடிவு செய்துள்ளது. சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஐபிஎல் சாம்பியன்ஸ் டிராபியை மும்பை 5 முறையும், சென்னை 4 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 5 கோப்பைகளை வென்ற மும்பை அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், 4 முறை வென்ற சென்னை அணிக்கு டோனி கேப்டனாகவும் இருந்துள்ளனர்.

    இதனால் இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. டோனிக்கு எப்போதுமே ரசிகர்கள் அதிகம் உண்டு. கடந்த முறை மும்பையில் இரு அணிகளும் விளையாடிய போது, சென்னை அணி ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. மும்பை வான்கடே மைதானமே மஞ்சள் நிறத்தில் காட்சி அளித்தது.

    இதே போன்று ஆர்சிபி விளையாடும் ஆட்டத்திற்கும் விராட் கோலி ரசிகர்கள் மும்பையை ஆக்கிரமித்து விட்டார்கள். இதனால் நிடா அம்பானி, தற்போது மும்பை வான்கடே மைதானத்தில் மற்ற ரசிகர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க திட்டம் போட்டு உள்ளார். அதன் படி, மும்பை ரசிகர்களுக்காக பிரத்யேகமாக அந்த மைதானத்தில் இரண்டு கேலரிகளை நிதா அம்பானி முன்பதிவு செய்துள்ளார்.

    அந்த கேலரியில் மும்பை அணி ரசிகர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் உத்தரவு போடப்பட்டுள்ளது. அந்த கேலரியில் சிஎஸ்கே உள்ளிட்ட ரசிகர்கள் அமர அனுமதிக்கப்படவில்லை. மும்பை ரசிகர்கள் மண்டல பகுதியில் வெறும் மும்பை அணி ஜெர்சியை மட்டும் தான் அணி தான் வர வேண்டும் என்றும், வேறு அணி ஜெர்சியை அணிந்து வரக் கூடாது என்றும் வேறு நிறத்தில் டிசர்ட் போடக்கூடாது என்று மும்பை அணி நிர்வாகம் கூறியுள்ளது. இதன் மூலம் மும்பையில் நடைபெறும் ஐபில் போட்டியை மற்ற அணி ரசிகர்கள் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மற்ற அணி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    ×