search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி கேப்பிட்டல்ஸ்"

    • அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மில்லர் 23 பந்தில் 55 குவித்து ஆட்டமிழந்தார்.
    • டெல்லி அணி தரப்பில் ராசிக் தார் சலாம் 3 விக்கெட்டும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி டெல்லி அணியின் பிரித்வி ஷா, மெக்கர்க் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மெக்கர்க் வழக்கும்போல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். என்றாலும் 14 பந்தில் 23 ரன்கள் எடுத்த நிலையில் சந்தீப் வாரியர் பந்தில் ஆட்டமிழந்தார்.

    அடுத்த சிறிது நேரத்தில் பிரித்வி ஷா 11 ரன்னிலும் ஷாய் ஹோப் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.இதனையடுத்து ஜோடி சேர்ந்த அக்சர் பட்டேல் -ரிஷப் பண்ட் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரை சதம் விளாசினர்.

    இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தது. அக்சர் பட்டேல் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்டப்ஸ் மற்றும் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

    ரிஷப் பண்ட் 43 பந்தில் 88 ரன்கள் எடுத்தும், ஸ்டப்ஸ் 7 பந்தில் 26 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது. குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா 4 ஓவரில் 73 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    இதனையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில்- சஹா களமிறங்கினர். சுப்மன் கில் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து சஹா- சுதர்சன் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுதர்சன் அரை சதம் விளாசினார்.

    39 ரன்களில் இருந்த போது சஹா அவுட் ஆனார். உடனே சாய் சுதர்சனும் 65 ரன்னிலும் வெளியேறினார். அடுத்து வந்த உமர்சாய் 1, ஷாருக்கான் 8, தெவாடியா 4 என வெளியேறினார். இதனையடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மில்லர் (55) அரை சதம் விளாசி அவுட் ஆனார்.

    இதனால் கடைசி ஓவரில் குஜராத் அணிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. முதல் 2 பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய ரஷித்கான் 3,4-வது பந்தை டாட் செய்தார். 5-வது பந்தை சிக்சர் பறக்கவிட்டார். இதனால் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தை ரன் ஏதும் விட்டுக் கொடுக்கவில்லை.

    இதனால் டெல்லி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. டெல்லி அணி தரப்பில் ராசிக் தார் சலாம் 3 விக்கெட்டும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணி டெல்லியை வீழ்த்தி 5வது வெற்றி பெற்றது.
    • இதன்மூலம் அந்த அணி 10 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியில் நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 266 ரன் குவித்தது.

    டிராவிஸ் ஹெட் 32 பந்தில் 89 ரன்னும் (11 பவுண்டரி, 6 சிக்சர்), ஷாபாஸ் அகமது 29 பந்தில் 59 ரன்னும் (2 பவுண்டரி, 5 சிக்சர்), அபிஷேக் சர்மா 12 பந்தில் 46 ரன்னும் (2 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தனர். குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், முகேஷ்குமார், அக்ஷர் படேல் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    ஐதராபாத் அணியின் தொடக்க வீரரான டிரெவிஸ் ஹெட்-அபிஷேக் சர்மா ஜோடி பவர் பிளேயில் 125 ரன் விளாசி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

    தொடர்ந்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19.1 ஓவரில் 199 ரன்னில் சுருண்டது. இதனால் ஐதராபாத் அணி 67 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிரேசர் 18 பந்தில் 65 ரன்னும் (5 பவுண்டரி, 7 சிக்சர்), கேப்டன் ரிஷப் பண்ட் 35 பந்தில் 44 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) அபிஷேக் போரல் 22 பந்தில் 42 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    தமிழக வீரர் டி.நடராஜன் 4 விக்கெட்டும். மார்கண்டே, நிதிஷ்குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டும் வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஐதராபாத் அணி 5-வது வெற்றியை பதிவுசெய்தது. இதன்மூலம் அந்த அணி 10 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறி யுள்ளது.

    டெல்லி அணி 5-வது தோல்வியை தழுவியது.

    இந்நிலையில், தோல்வி குறித்து டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில், முதலில் நாங்கள் பந்து வீசும்போது பனி இருக்கும் என நினைத்தோம். ஆனால் பனித்துளி ஏற்படவில்லை. ஐதராபாத்தை 220 முதல் 230 ரன்களுக்கு கட்டுப்படுத்தினால் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தேன். முதல் 6 ஓவர், அதாவது பவர்பிளே தான் 2 அணிகளுக்கும் உள்ள வித்தியாசம். இதுதான் ஆட்டத்தை மாற்றிவிட்டது. நாங்கள் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவோம். ஜேக் பிரேசர் பேட்டிங் அற்புதமாக இருந்தது. அடுத்த ஆட்டத்தில் எங்களை மேம்படுத்திக் கொள்வோம் என தெரிவித்தார்.

    • ஐதரபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜேக் பிரேசர் மெக்குர்க் 15 பந்தில் அரைசதம் அடித்தார்.
    • டெல்லி அணிக்காக அதிவேக அரைசதம் அடித்த வீரராக மெக்குர்க் சாதனை படைத்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல் தொடரில் டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 266 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் 89 ரன்கள் அடித்தார். தொடர்ந்து ஆடிய டெல்லி அணி 19.1 ஓவரில் 199 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் ஐதராபாத் அணி 67 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி சார்பில் ஜேக் பிரேசர்-மெக்குர்க் 18 பந்தில் 65 ரன்கள் குவித்தார்.

    இந்நிலையில், ஜேக் பிரேசர் மெக்குர்க் இந்த ஆட்டத்தில் 15 பந்தில் அரைசதமடித்து அசத்தினார். இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் டெல்லி அணிக்காக (பந்துகள் அடிப்படையில்) அதிவேக அரைசதம் அடித்த வீரராக மெக்குர்க் சாதனை படைத்துள்ளார். நடப்பு ஐ.பி.எல் தொடரில் அதிவேக அரைசதம் அடித்த வீரராகவும் அவர் சாதனை படைத்துள்ளார்.

    • ஜேக் ஃபிரேசர் 18 பந்துகளில் 65 ரன்களை குவித்தார்.
    • நடராஜன் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி ஐதராபாத் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா அதிரடியான துவக்கம் கொடுத்தனர். அபிஷேக் ஷர்மா 46 ரன்களுக்கும், டிராவிஸ் ஹெட் 89 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

    இதைத் தொடர்ந்து ஐதராபாத் அணியின் ஸ்கோர் மெல்ல சரிய துவங்கியது. அடுத்து வந்த மார்க்ரம் மற்றும் கிளாசன் முறையே 1 மற்றும் 15 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். பிறகு களமிறங்கிய நிதிஷ் குமார் மற்றும் ஷாபாஸ் அகமது சிறப்பாக ஆடினர்.

    போட்டி முடிவில் ஐதராபாத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்களை குவித்தது. டெல்லி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்சர் பட்டேல், முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    கடின இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான பிரித்வி ஷா 16 ரன்களிலும், டேவிட் வார்னர் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஜேக் ஃபிரேசர் சிறப்பாக ஆடி 18 பந்துகளில் 65 ரன்களை குவித்தார். இவருடன் ஆடிய அபிஷேக் பொவெல் 22 பந்துகளில் 42 ரன்களை குவித்தார்.

    ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், கேப்டன் ரிஷப் பந்த் நிதானமா ஆடி 44 ரன்களை குவித்தார். இவரும் கடைசி ஓவரின் முதல் பந்தில் அவுட் ஆனார். இதனால் டெல்லி அணி 19.1 ஓவர்களில் 199 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    ஐதராபாத் சார்பில் சிறப்பாக பந்துவீசிய நசராஜன் 4 விக்கெட்டுகளையும், மயன்க் மார்கண்டே மற்றும் நிதிஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா அதிரடி துவக்கம் கொடுத்தனர்.
    • டெல்லி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டெல்லியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி ஐதராபாத் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா அதிரடியான துவக்கம் கொடுத்தனர். இதன் மூலம் ஐதராபாத் அணி 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 125 ரன்களை குவித்தது.

    பவர்பிளே முடிந்த கையொடு அபிஷேக் ஷர்மா 46 ரன்களுக்கும், டிராவிஸ் ஹெட் 89 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் ஐதராபாத் அணியின் ஸ்கோர் மெல்ல சரிய துவங்கியது. அடுத்து வந்த மார்க்ரம் மற்றும் கிளாசன் முறையே 1 மற்றும் 15 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். பிறகு களமிறங்கிய நிதிஷ் குமார் மற்றும் ஷாபாஸ் அகமது சிறப்பாக ஆடினர்.

    போட்டி முடிவில் ஐதராபாத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்களை குவித்தது. டெல்லி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்சர் பட்டேல், முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • டெல்லி அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
    • ஐதராபாத் அணி நான்கு போட்டிகளில் வெற்றி.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டெல்லியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணி இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், மூன்று போட்டிகளில் வெற்றி, நான்கு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. ஐதராபாத் அணி ஆறு போட்டிகளில் நான்கு வெற்றி, இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.

    இரு அணிகளும் தாங்கள் விளையாடிய கடைசி போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. அந்த வகையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.

    • இந்த சீசனில் டெல்லியில் நடக்கும் முதல் ஆட்டம் இது என்பதால் டெல்லி வீரர்கள் மிகுந்த உத்வேகம் அடைந்துள்ளனர்.
    • ஐ.பி.எல். போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 23 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன.

    டெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கும் 35-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொள்கிறது.

    இந்த சீசனில் டெல்லியில் நடக்கும் முதல் ஆட்டம் இது என்பதால் டெல்லி வீரர்கள் மிகுந்த உத்வேகம் அடைந்துள்ளனர். குறிப்பாக விபத்தில் சிக்கி மீண்டு களம் திரும்பியுள்ள கேப்டன் ரிஷப் பண்டை வரவேற்க உள்ளூர் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். டெல்லி அணி இதுவரை 3 வெற்றி (சென்னை, லக்னோ, குஜராத்துக்கு எதிராக), 4 தோல்வி (பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா, மும்பைக்கு எதிராக) என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது. முந்தைய ஆட்டத்தில் குஜராத்தை வெறும் 89 ரன்னில் சுருட்டி டெல்லி மெகா வெற்றி பெற்றது. முகேஷ்குமார், கலீல் அகமது, குல்தீப் யாதவ் ஆகியோர் பந்து வீச்சில் நல்ல நிலையில் உள்ளனர். பேட்டிங்கில் ரிஷப் பண்ட் (2 அரைசதத்துடன் 210 ரன்), பிராசர், பிரித்வி ஷா, ஸ்டப்ஸ் பார்மில் உள்ளனர். அதே சமயம் விரலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்படும் டேவிட் வார்னர் இந்த ஆட்டத்திலும் ஆடுவது சந்தேகம் தான்.

    முன்னாள் சாம்பினான ஐதராபாத் அணி 6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (மும்பை, சென்னை, பஞ்சாப், பெங்களூரு), 2 தோல்வியுடன் (கொல்கத்தா, குஜராத்துக்கு எதிராக) 8 புள்ளிகள் பெற்றிருக்கிறது. இந்த ஆண்டில் விசுவரூபம் எடுத்துள்ள ஐதராபாத் அணி மும்பைக்கு எதிராக 277 ரன்னும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுக்கு எதிராக 287 ரன்னும் குவித்து ஐ.பி.எல். கிரிக்கெட் யாரும் எட்டிராத ஸ்கோரை திரட்டி வரலாறு படைத்தது. தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் (ஒரு சதம் உள்பட 235 ரன்), அபிஷேக் ஷர்மா (211 ரன்) அதிரடியில் வெளுத்து வாங்குகிறார்கள். மிடில் வரிசையில் எய்டன் மார்க்ரம், கிளாசென் (3 அரைசதத்துடன் 253 ரன்) அப்துல் சமத் கைகொடுக்கிறார்கள். பந்து வீச்சில் கேப்டன் கம்மின்ஸ் (9 விக்கெட்) கட்டுக்கோப்புடன் வீசுகிறார்.

    மொத்தத்தில் இந்த மோதல் ஐதராபாத் பேட்டர்களுக்கும், டெல்லி பவுலர்களுக்கும் இடையிலான யுத்தமாக வர்ணிக்கப்படுகிறது. இதில் யாருடைய கை ஓங்கும் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்.

    ஐ.பி.எல். போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 23 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 11-ல் டெல்லியும், 12-ல் ஐதராபாத்தும் வெற்றி பெற்றன.

    போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    டெல்லி: பிரித்வி ஷா, ஜேக் பிராசர் மெக்குர்க் அல்லது டேவிட் வார்னர், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட் (கேப்டன்), சுமித் குமார் அல்லது அபிஷேக் போரெல், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா, முகேஷ்குமார், கலீல் அகமது.

    ஐதராபாத்: அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாசென், மார்க்ரம், அப்துல் சமத், ஷபாஸ் அகமது, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர்குமார், ஜெய்தேவ் உனட்கட் அல்லது மயங்க் மார்கண்டே, டி.நடராஜன், நிதிஷ்குமார் ரெட்டி.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • அபிஷேக் பொரெல் மற்றும் ஷாய் ஹோப் சிறப்பாக ஆடினர்.
    • சந்தீப் வாரியர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 32 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    குஜராத் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ரித்திமான் சாஹா மற்றும் கேப்டன் சுப்மன் கல் சுமாரான துவக்கத்தை கொடுத்தனர். இருவரும் முறையே 2 மற்றும் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் மற்றும் டேவிட் மில்லர் ஜோடியும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க குஜராத் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    டெல்லி சார்பில் சிறப்பாக பந்துவீசிய முகேஷ் குமார் மூன்று விக்கெட்டுகளையும் ஸ்டப்ஸ், இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல், கலீல் அகமது தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் குஜராத் அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்களை குவித்தது. அந்த வகையில், ஐ.பி.எல். தொடரில் குறைந்த பட்ச ரன்களை குஜராத் அணி பதிவு செய்தது.

    குறைந்த இலக்கை துரத்திய டெல்லி அணி துவக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் பிரித்வி ஷா 7 ரன்களிலும், ஜேக் ஃபிரேசர் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய அபிஷேக் பொரெல் மற்றும் ஷாய் ஹோப் சிறப்பாக ஆடினர்.

    அபிஷேக் பொரெல் 15 ரன்களிலும், ஷாய் ஹோப் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 92 ரன்களை குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணி சார்பில் சந்தீப் வாரியர் 2 விக்கெட்டுகளையும், ரஷித் கான் மற்றும் ஜான்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • குஜராத் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
    • முகேஷ் குமார் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 32 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    குஜராத் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ரித்திமான் சாஹா மற்றும் கேப்டன் சுப்மன் கில் சுமாரான துவக்கத்தை கொடுத்தனர். இருவரும் முறையே 2 மற்றும் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் மற்றும் டேவிட் மில்லர் ஜோடியும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க குஜராத் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    டெல்லி சார்பில் சிறப்பாக பந்துவீசிய முகேஷ் குமார் மூன்று விக்கெட்டுகளையும் ஸ்டப்ஸ், இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல், கலீல் அகமது தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதன் மூலம் குஜராத் அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்களை குவித்தது. அந்த வகையில், ஐ.பி.எல். தொடரில் குறைந்த பட்ச ரன்களை குஜராத் அணி பதிவு செய்தது. 

    • குஜராத் அணி மூன்று போட்டிகளில் தோல்வியுற்றது.
    • டெல்லி அணி புள்ளி பட்டியலில் பின்தங்கியுள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 32 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில் மூன்று வெற்றி, மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றி, மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது. இரு அணிகளும் புள்ளிகள் பட்டியலில் பின்தங்கியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன.

    • புள்ளிபட்டியலில் குஜராத் அணி 6-வது இடத்தில் உள்ளது.
    • டெல்லி அணி 6 போட்டிகளில் விளையாடி 2 மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

    முன்னாள் சாம்பியனான குஜராத் அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி (மும்பை, ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக), 3 தோல்வி (சென்னை, பஞ்சாப், லக்னோ அணிகளிடம்) கண்டுள்ளது. முந்தைய ஆட்டத்தில் ராஜஸ்தான் நிர்ணயித்த 197 ரன் இலக்கை கடைசி பந்தில் எட்டிப்பிடித்தது.

    அந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில், சாய் சுதர்சன் வலுவான அடித்தளம் அமைத்தனர். ஆனால் மிடில் வரிசை பேட்டிங்கில் தடுமாற்றம் இருக்கிறது. அதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் ரஷித் கான், மொகித் ஷர்மா, உமேஷ் யாதவ், நூர் அகமது வலுசேர்க்கிறார்கள்.

    டெல்லி அணி தனது முதல் 2 ஆட்டங்களில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளிடம் தோற்றது. 3-வது ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தியது. அடுத்த 2 ஆட்டங்களில் கொல்கத்தா, மும்பையிடம் பணிந்தது. கடந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை எளிதில் தோற்கடித்தது.

    டெல்லி அணியில் பேட்டிங்கில் கேப்டன் ரிஷப் பண்ட், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், டேவிட் வார்னர், பிரித்வி ஷாவும், பந்து வீச்சில் கலீல் அகமது, குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் ஷர்மாவும் நல்ல நிலையில் உள்ளனர். மூன்று துறைகளிலும் அந்த அணி நிலையான திறனை வெளிப்படுத்த வேண்டியது முக்கியமானதாகும். கடந்த ஆட்டத்தில் கிடைத்த வெற்றி உத்வேகத்தை தொடர இரு அணிகளும் தீவிரம் காட்டுகிறார்கள். இருப்பினும் உள்ளூர் அனுகூலத்துடன் களம் காணும் குஜராத்தை சமாளிப்பது டெல்லி அணிக்கு சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    • ஜேக் ஃபிரேசர் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார்.
    • லக்னோ சார்பில் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 26 ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. லக்னோவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய லக்னோ அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய குவிண்டன் டி காக் மற்றும் கேப்டன் கே.எல். ராகுல் முறையே 19 மற்றும் 39 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 3 ரன்களிலும், மார்கஸ் ஸ்டாயினிஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 167 ரன்களை குவித்தது. லக்னோ அணி சார்பில் ஆயுஷ் பதோனி சிறப்பாக ஆடி 34 பந்துகளில் 55 ரன்களை குவித்தார். டெல்லி சார்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இஷாந்த் சர்மா, முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    எளிய இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு பிரித்வி ஷா நல்ல துவக்கம் கொடுத்தார். 22 பந்துகளில் 32 ரன்களை குவித்த பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய டேவிட் வார்னர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த ஜேக் ஃபிரேசர் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 35 பந்துகளில் 55 ரன்களை விளாசிய ஜேக் ஃபிரேசர் நவீன் உல் ஹக் பந்தில் ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய கேப்டன் ரிஷப் பந்த் 24 பந்துகளில் 41 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    18.1 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2024 ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

    லக்னோ சார்பில் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளையும், யாஷ் தாக்கூர் மற்றும் நவீன் உல் ஹக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    ×