என் மலர்
நீங்கள் தேடியது "ஹேமங் பதானி"
- முதல் நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றிருந்தது.
- 8 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்ற நிலையிலும், பிளேஆஃப் சுற்றை உறுதி செய்ய முடியவில்லை.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடியது. முதல் 4 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றது. முதல் 8 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்றது. அதன்பின் 13 போட்டிகளில் ஒரு போட்டி மழையால் தடைபட்டது. மற்ற போட்டிகளில் தோல்வியடைந்தது. நேற்று வாழ்வா? சாவா? போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாததற்கு நிலையான தொடக்க ஜோடி அமையாதது காரணம் என அணியின் தலைமை பயிற்சியாளர் ஹேமங் பதானி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஹேமங் பதானி கூறுகையில் "தொடக்க ஜோடி அணிக்கு நல்ல தொடக்கம் கொடுக்கும்போதுதான், நிலையான தொடக்க ஜோடி என தீர்மானிப்பது சாத்தியமானதாகும். அப்படி தொடக்கம் கிடைக்கவில்லை என்றால், அந்த இடைவெளியை நிரப்ப, அந்த வெற்றிடத்தை நிரப்ப மாற்றங்களைச் செய்ய நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள்.
மற்ற அணிகளை பார்த்தீர்கள் என்றால், அவர்களுக்கு சிறந்த தொடக்கம் கிடைத்தது. பவர்பிளேயில் சிறப்பான ரன்கள் அடித்தனர். எங்களுக்கு அதுபோன்ற தொடக்கம் கிடைக்காததால், நாங்கள் இதுபோன்ற மாற்றங்களை செய்தோம்.
சீசன் தொடக்கத்தில் மெக்கர்க்கை தொடக்க வீரராக களம் இறக்கினோம். அவர் சரியாக விளையாடவில்லை. அதன்பின் பொரேல், டு பிளிஸ்சிஸ், கருண் நாயர் என கொண்டு வந்தோம். எங்களுக்கு நல்ல தொடக்கம் கொடுக்கும் யாரும் எங்களிடம் இல்லை என்பதுதான் உண்மை.
எங்களுடைய ஓபனிங் ஜோடி கவலை அளிக்கும் விதமாக இருந்தது. தொடரில் நாங்கள் முன்னேறி பிளேஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாததற்கு இது ஒரு முக்கிய காரணம்" என்றார்.
- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கிபாண்டிங் சமீபத்தில் நீக்கப்பட்டார்.
- ஐபிஎல் 2025-ம் ஆண்டுக்கான மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான மெகா ஏலம் நவம்பர் இறுதியில் நடைபெறுகிறது. இந்த மெகா ஏலத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
மெகா ஏலம் தொடங்குவதற்கு முன்பாக அனைத்து அணிகளும் பயிற்சியாளர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கிபாண்டிங் நீக்கப்பட்டதை தொடர்ந்து புதிய பயிற்சியாளர் தேடும் பணியில் அந்த அணி நிர்வாகம் தீவிரமாக இறங்கியது.
இந்த நிலையில் டெல்லி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரும் தமிழகத்தை சேர்ந்தவருமான ஹேமங் பதானி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாப் பட்டேலை பந்து வீச்சு பயிற்சியாளர் பணிக்கு கொண்டு வரவும் அந்த அணி திட்டமிட்டுள்ளது.

இன்னொரு பக்கம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் யார்-யாரை தக்க வைக்கலாம் என்பதிலும் டெல்லி நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது. கேப்டன் ரிஷப் பண்ட் (ரூ.18 கோடி), ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் (ரூ.14 கோடி), இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் (ரூ.11 கோடி) ஆகியோர் உறுதியாக தக்கவைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. ஜாக் பிராசெர் மெக்குர்க், டிரிஸ்டான் ஸ்டப்சையும் குறி வைத்துள்ளது.
- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஹேமங் பதானி நியமிக்கப்பட்டார்.
- ஐபிஎல் 2025-ம் ஆண்டுக்கான மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான மெகா ஏலம் நவம்பர் இறுதியில் நடைபெறுகிறது. இந்த மெகா ஏலத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
மெகா ஏலம் தொடங்குவதற்கு முன்பாக அனைத்து அணிகளும் பயிற்சியாளர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கிபாண்டிங் நீக்கப்பட்டார். இதை தொடர்ந்து அந்த அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரும் தமிழகத்தை சேர்ந்தவருமான ஹேமங் பதானி நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், டெல்லி அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாப் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
மெகா ஏலத்தை முன்னிட்டு டெல்லி அணி அக்சர் பட்டேலை ரூ.16.50 கோடிக்கும் குல்தீப் யாதவை ரூ.13.25 கோடிக்கும் தென் ஆஃப்ரிக்க வீரர் ஸ்டப்சை ரூ.10 கோடிக்கும் அபிஷேக் போரெலை ரூ.4 கோடிக்கும் என மொத்தம் நான்கு பேரை ரூ.47 கோடி கொடுத்து தக்கவைத்துள்ளது. டெல்லி அணியின் கையில் 73 கோடியும் 2 RTM கார்டுகளும் கையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.






