என் மலர்tooltip icon

    உலகம்

    • ஆண் - பெண் என இரட்டை குழந்தைகளாக பிறப்பவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது தாய்லாந்தின் வழக்கமாகும்.
    • இந்த குழந்தைகளின் திருமண வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    தாய்லாந்தில் 4 வயதான இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோரே திருமணம் செய்து வைத்த நிகழ்வு பேசுபொருளாகியுள்ளது. இந்த குழந்தைகளின் திருமண வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    குடும்பத்தில் இரட்டையர்களாக பிறப்போர் ஆண் - பெண்ணாக இருந்தால் அவர்களை சகோதரன் - சகோதரியாக பார்க்காமல் திருமணம் செய்து வைப்பது தாய்லாந்தில் உள்ள புத்த மத வழக்கமாகும்.

    ஆண் - பெண் என இரட்டை குழந்தைகளாக பிறப்பவர்கள் முன் ஜென்மத்தில் காதலர்களாக இருந்தார்கள் என்றும் அவர்களுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்காவிட்டால் அது துரதிர்ஷ்டம் அந்நாட்டில் உள்ள புத்த மதத்தினர் நம்புகின்றனர். 

    • முதலைக்கு மணப்பெண் போல உடை உடுத்தி, கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.
    • கடந்த 230 ஆண்டுகளாக இந்த சடங்கு மெக்சிகோ நாட்டில் நடைபெற்று வருகிறது

    மெக்சிகோ நாட்டின் ஒசாகா பகுதியில் மழை வேண்டி, மேயருக்கும் பெண் முதலைக்கும் பொதுமக்கள் திருமணம் செய்து வைத்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.

    முதலைக்கு மணப்பெண் போல உடை உடுத்தி, மேளதாளங்கள் முழங்க கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

    முதலைக்கு முத்தமிட்ட மேயர், அதனை கையில் ஏந்தி நடனமாடினார். கடந்த 230 ஆண்டுகளாக இந்த சடங்கு மெக்சிகோ நாட்டில் நடைபெற்று வருகிறது

    • அமெரிக்கா பார்ட்டி என்ற புதிய அரசியல் கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்
    • அமெரிக்காவில் தற்போது இரு கட்சி முறை நடைமுறையில் உள்ளது.

    டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் ஏற்கனவே உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். இதனிடையே, கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்டு அவரது வெற்றிக்கு காரணமாகவும் இருந்தார்.

    இதனால் டிரம்புக்கு நெருங்கிய நண்பராகவும், அவரது நிர்வாகத்தில் அரசு செலவுகளை குறைக்கும் டாஸ் துறைக்கும் தலைமை வகித்தார். ஆனால் BIG BEAUTIGUL என்ற புதிய மசோதாவைக் கடுமையாக எதிர்த்த எலான் மஸ்க், டிரம்ப் அரசு வழங்கிய பதவியில் இருந்து விலகி டிரம்புக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டு வந்தார்.

    இந்நிலையில், அமெரிக்கா பார்ட்டி என்ற புதிய அரசியல் கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார். புதிய கட்சி அறிவிப்பால் அமெரிக்க அதிபர் டிரம்ப்- எலான் மஸ்க் இடையேயான மோதல் மேலும் வலுத்துள்ளது.

    இந்நிலையில், எலான் மஸ்க்கின் புதிய கட்சி குறித்து பேசிய டிரம்ப், "இது அபத்தமானது என்று நான் நினைக்கிறேன். குடியரசுக் கட்சியுடன் நாம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளோம். ஜனநாயகக் கட்சியினர் தங்கள் வழியைத் தவறவிட்டுவிட்டனர். ஆனால் அது எப்போதும் இரு கட்சி முறையாகவே இருந்து வருகிறது, மேலும் மூன்றாம் கட்சியைத் தொடங்குவது குழப்பத்தையே அதிகரிக்கிறது என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்தார். 

    • உக்ரைனுடனான போரில் சுமார் 250,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
    • ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்டது போல, பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கவும் ரஷியா திட்டமிட்டுள்ளது.

    பள்ளி மாணவிகள் கர்ப்பமானால் ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதாக ரஷிய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் பத்து மாகாணங்களில் இந்த புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்படுகிறது.

    ரஷியாவின் மக்கள்தொகையில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாகாணங்களின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக கர்ப்பிணிப் பெண்களுக்கு பணம் வழங்கும் திட்டத்தை ரஷியா தொடங்கியிருந்தது. இருப்பினும், இந்த திட்டத்தால் பெரியவர்கள் மட்டுமே பயனடைந்தனர். இது இப்போது பள்ளி மாணவிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ரஷியாவில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 2023 ஆம் ஆண்டில் ஒரு பெண்ணுக்கு 1.41 ஆக உள்ளது. இது முன்பு 2.05 ஆக இருந்தது. இதற்கிடையில், டீனேஜ் கர்ப்பம் குறித்த கணக்கெடுப்பின் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த கணக்கெடுப்பை ரஷிய பொது கருத்து ஆராய்ச்சி மையம் நடத்தியது.

    இதில், 43 சதவீதம் பேர் ரஷியாவின் புதிய கொள்கையை ஆதரித்தனர், 40 சதவீதம் பேர் எதிர்த்தனர்.

    இதற்கிடையே உக்ரைனுடனான போரில் சுமார் 250,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இளம் ரஷியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது நெருக்கடியை தீவிரப்படுத்துகிறது.

    ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்டது போல, பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கவும் ரஷியா திட்டமிட்டுள்ளது. கருக்கலைப்புக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் ரஷியா தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையில், 2050 ஆம் ஆண்டுக்குள் உலகின் 75 சதவீத நாடுகள் மக்கள் தொகை நெருக்கடியை எதிர்கொள்ளும் என்று கூறப்படுகிறது.

    • முக்கிய உலகளாவிய அமைப்புகளில் சுமார் 80 ஆண்டுகளாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
    • பிரிக்ஸ் குழுவின் சமீபத்திய விரிவாக்கம் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப நாம் உறுதியுடன் செயல்படுவதற்கான ஒரு சான்றாகும்.

    பிரதமர் மோடி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.

    உச்சிமாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) போன்ற அமைப்புகளின் தோல்வியை விமர்சித்தார். "20 ஆம் நூற்றாண்டின் தட்டச்சுப்பொறியில் 21 ஆம் நூற்றாண்டின் மென்பொருளை இயக்குவது சாத்தியமற்றது" என்று அவர் இவ்வமைப்புகளின் காலாவதியான தன்மையை சுட்டிக்காட்டினார்.

    மேலும், உலகின் பெரும்பாலான நாடுகளின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்தாத அமைப்புகள் (குளோபல் சவுத்) "நெட்வொர்க் இல்லாத சிம் கார்டு கொண்ட மொபைல் போன்கள்" என்று அதன் தெரிவித்தார்.

    மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற தொழில்நுட்பங்கள் ஒவ்வொரு வாரமும் புதிய புதுப்பிப்புகளைக் கொண்டு வரும் இந்தக் காலத்தில், முக்கிய உலகளாவிய அமைப்புகளில் சுமார் 80 ஆண்டுகளாக எந்த மாற்றமும் ஏற்படாதது கவலையளிக்கிறது என்று மோடி கூறினார்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், உலக வர்த்தக அமைப்பு (WTO) மற்றும் பலதரப்பு மேம்பாட்டு வங்கிகள் (MDBs) போன்ற நிறுவனங்களின் கட்டமைப்பில் மாற்றங்களின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

    பிரிக்ஸ் குழுவின் சமீபத்திய விரிவாக்கம் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப நாம் உறுதியுடன் செயல்படுவதற்கான ஒரு சான்றாகும் என்றும், மற்ற சர்வதேச அமைப்புகளின் சீர்திருத்தங்களில் அதே முனைப்பு காட்டப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவியை இந்தியா எதிர்நோக்கியிருக்கும் சூழலில் மோடியின் விமர்சனம் முக்கியதுவம் பெறுகிறது.  

    • அமெரிக்கா பார்ட்டி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார் எலான் மஸ்க்.
    • புதிய கட்சி அறிவிப்பால் அமெரிக்க அதிபர் டிரம்ப்- எலான் மஸ்க் இடையேயான மோதல் மேலும் வலுத்துள்ளது.

    டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் ஏற்கனவே உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்.

    இதனிடையே, கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்டு அவரது வெற்றிக்கு காரணமாகவும் இருந்தார்.

    இதனால் டிரம்புக்கு நெருங்கிய நண்பராகவும், அவரது நிர்வாகத்தில் அரசு செலவுகளை குறைக்கும் டாஸ் துறைக்கும் தலைமை வகித்தார்.

    ஆனால் BIG BEAUTIGUL என்ற புதிய மசோதாவைக் கடுமையாக எதிர்த்த எலான் மஸ்க், டிரம்ப் அரசு வழங்கிய பதவியில் இருந்து விலகி டிரம்புக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டு வந்தார்.

    இந்த நிலையில், அமெரிக்கா பார்ட்டி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்தார்.

    மக்களுக்கு சுதந்திரத்தை மீண்டும் வழங்க இந்தக் கட்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும், 2 கட்சிகள் மட்டுமே ஆளமுடியும் என்ற ஜனநாயக விரோதப்போக்கை முறியடிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

    புதிய கட்சி அறிவிப்பால் அமெரிக்க அதிபர் டிரம்ப்- எலான் மஸ்க் இடையேயான மோதல் மேலும் வலுத்துள்ளது.

    எலான் மஸ்க் அமெரிக்கா கட்சியை தொடங்கிய நிலையில், அதன் பொருளாளராக வைபவ் தனேஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    எலான் மஸ்க்கின் `டெஸ்லா' நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக செயல்பட்டவர் வைபவ் தனேஜா.

    இந்திய வம்சாவளி என்பதால், கட்சியின் முக்கிய பொறுப்பில் வெளிநாட்டவர் ஒருவரை நியமிப்பதா? என எலான் மஸ்க் மீது விமர்சனம் எழுந்துள்ளது.

    • ரஷியா, சீனா மற்றும் பிரேசில் நிதி அமைச்சர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை.
    • இந்தியா-சீனா இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதம்.

    பிரதமர் நரேந்திர மோடி கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ மற்றும் அர்ஜென்டினா நாடுகளின் பயணத்தை முடித்துக்கொண்டு பிரேசில் நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றார்.

    இன்று மற்றும் நாளை பிரேசிலில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உள்ளார்.

    மேலும், இந்த மாநாட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

    அப்போது, மாநாட்டின் ஒரு பகுதியாக ரஷியா, சீனா மற்றும் பிரேசில் நிதி அமைச்சர்களுடனும், இந்தோனேசியாவின் துணை நிதி அமைச்சருடனும் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ரஷிய நிதி அமைச்சர் அன்டன் சிலுவானோவ் உடனான சந்திப்பின்போது, "பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ரஷிய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி" என தெரிவித்தார். அப்போது, இந்தியா- ரஷியா இடையிலான நீண்டகால கூட்டாண்மை குறித்து விவாதித்தனர்.

    இதேபோல் சீன நிதி அமைச்சர் லான் போனுடன் இந்தியா-சீனா இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அவர் விவாதித்தார்.

    மேலும், இந்தோனேசியாவின் துணை நிதி அமைச்சர் தாமஸ் ஜிவாண்டோனோ மற்றும் பிரேசில் நிதி அமைச்சர் பெர்னாண்டோ ஹடாட் ஆகியோரையும் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார்.

    • இடிபாட்டில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுவதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • விபத்தில் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பாகிஸ்தான் கராச்சியில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

    கராச்சியில் உள்ள லியாரி பாக்தாதி என்ற இடத்தில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

    கட்டிட இடிபாட்டிற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, இந்த விபத்தில் சிக்கி 7 பேர் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 8 பேர் காயம் அடைந்ததாகவும் கூறப்பட்டது.

    மேலும், இன்னும் ஏராளமானோர் கட்டிட இடிபாட்டில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுவதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    அதன்படி, விபத்தில் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளர்வர்களை் மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர்.

    • அமெரிக்காவைச் சேர்ந்த செலாப் - ஜஸ்டின் ரூஸ்லர் இணை முதல் பரிசை வென்றுள்ளனர்.
    • வெற்றி பெறுபவருக்கு அவரின் மனைவியின் எடைக்கு நிகரான பீர் பரிசாக அளிக்கப்படும்.

    மனைவிகளை கணவர்கள் சுமந்து செல்லும் வித்தியாசமான போட்டி பின்லாந்தில் நடைபெற்றுள்ளது.

    இப்போட்டியில் மனைவியை சுமந்தபடி மணல் மற்றும் நீரால் அமைக்கப்பட்ட தடைகளை தாண்டி கணவர் முன்னேறி சென்று வெற்றி பெறவேண்டும். வெற்றி பெறுபவருக்கு அவரின் மனைவியின் எடைக்கு நிகரான பீர் பரிசாக அளிக்கப்படும்.

    200 பேர் கலந்து கொண்ட இப்போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த செலாப் - ஜஸ்டின் ரூஸ்லர் இணை முதல் பரிசை வென்றுள்ளனர். 

    • லாங் என்ற முதியவர், குவாங்டாங் மாகாணத்தில் தனியாக வசித்து வருகிறார்.
    • லாங், தனது துணைக்கு சியான்பா என்ற பூனையை வளர்த்து வருகிறார்.

    சீனாவைச் சேர்ந்த 82 வயது முதியவர் ஒருவர், தான் இறந்த பிறகு தனது பூனையைப் பராமரிக்க விரும்புவோருக்கு தனது முழு சொத்தையும் கொடுத்து விடுவதாக தெரிவித்துள்ளார்.

    லாங் என்ற முதியவர், குவாங்டாங் மாகாணத்தில் தனியாக வசித்து வருகிறார். 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி உயிரிழந்த நிலையில், குழந்தைகள் இல்லாத லாங், தனது துணைக்கு 4 தெரு பூனைகளை எடுத்து வளர்க்க ஆரம்பித்தார்.

    இந்த 4 பூனைகளில் சியான்பா என்ற பூனை மட்டுமே இன்னும் அவருடன் உள்ளது. தான் உயிரிழந்த பிறகு இந்த பூனையை யார் பார்த்துக்கொள்வது என்று கவலைப்பட்ட லாங், சியான்பாவை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்ள கூடிய நபரை தேடி வருகிறார்.

    இந்நிலையில், அவரது பூனையை பத்திரமாக பார்த்து கொள்பவருக்கு தனது அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் சேமிப்புகள் உட்பட தனது முழு எஸ்டேட்டையும் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

    • தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
    • இச்சம்பவம் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அமெரிக்காவின் இண்டியானா போலீஸ் பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. அங்கு அதிகாலையில் சில சிறுவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 சிறுவர்கள் பலியானார்கள். 5 பேர் காயம் அடைந்தனர்.

    இந்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • 12 நாள் மோதலுக்குப் பிறகு, இஸ்ரேல் - இரான் நாட்டிற்கு இடையே போர் நிறுத்தம் எட்டப்பட்டது.
    • போருக்கு பிறகு முதன் முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஈரானிய அரசு தலைவர் தோன்றினார்.

    அணு ஆயுதத்தை ஈரான் தயாரிப்பதாக கூறி அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த மாதம் 13-ந்தேதி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன.

    இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.

    ஈரானின் போர்டோவில் உள்ள நிலத்தடி அணுசக்தி நிலையம் உள்ள 3 முக்கிய அணு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் இந்த அணு நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    இதனையடுத்து 12 நாள் மோதலுக்குப் பிறகு, இஸ்ரேல் - இரான் நாட்டிற்கு இடையே போர் நிறுத்தம் எட்டப்பட்டது.

    இஸ்ரேல் உடனான போருக்கு பிறகு முதன் முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஈரானிய அரசு தலைவர் அயதுல்லா கொமேனி தோன்றியுள்ளார்.

    அப்போது, எங்களது தலைவருக்காகவே, நரம்புகளில் ரத்தம் பாய்கிறது என மக்கள் நெகிழ்ச்சி முழக்கம் எழுப்பினர்.

    ×