என் மலர்
உலகம்
- நெதன்யாகு மீது சர்வதேச நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் உள்ளது என்று மம்தானி தெரிவித்தார்.
- மம்தானி ஒரு சோசலிஸ்ட் அல்ல, அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்று டிரம்ப் தெரிவித்தார்.
33 வயதான இந்திய -அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் ஜுஹ்ரான் மம்தானி, முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவை தோற்கடித்து, நியூயார்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரபல இந்திய திரைப்பட இயக்குனர் மீரா நாயர் மற்றும் இந்திய-உகாண்டா கல்வியாளர் மஹ்மூத் மம்தானியின் மகன் தான் சோஹ்ரான் மம்தானி ஆவார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தற்போது நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மம்தானி மேயராக தேர்வானதில் இருந்து அவரை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் அமெரிக்க வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது சர்வதேச நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் உள்ளது, ஆகவே அவரை கைது செய்யவேண்டும் என்று நியூ யார்க் மேயர் மம்தானி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
மம்தானியின் இக்கருத்துக்கு கண்டனம் தெரிவித்த டிரம்ப், மம்தானி ஒரு சோசலிஸ்ட் அல்ல, அவர் ஒரு கம்யூனிஸ்ட். அவர் யூத மக்களைப் பற்றி சில மோசமான விஷயங்களைச் சொல்லியுள்ளார். மம்தானிக்கு வெள்ளை மாளிகை வழியாகதான் பணம் வருகிறது. அவருக்கு வெள்ளை மாளிகை வழியாக பணம் தேவை. அவர் இப்படி நடந்துகொள்வது அவருக்கு நல்லதல்ல. இல்லையெனில் அவருக்கு பெரிய பிரச்சினைகள் ஏற்படும்" என்று தெரிவித்தார்.
- ஐதராபாத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று அமெரிக்காவுக்கு விடுமுறையை கழிக்க சென்றுள்ளனர்.
- கார் தீப்பிடித்து இருந்ததில் 4 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் டல்லாஸில் நேற்று இரவு ஒரு லாரி மோதிய விபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு குடும்பமே தீயில் கருகி உயிரிழந்தனர்.
ஐதராபாத்தை பூர்வீகமாக கொண்ட தேஜஸ்வினி மற்றும் ஸ்ரீ வெங்கட் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இக்குடும்பம் அட்லாண்டாவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு காரில் டல்லாஸ் சென்று கொண்டிருந்த போது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது கார் தீப்பிடித்து இருந்ததில் 4 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
- அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் முறைப்படி பரிந்துரை செய்யப்பட்டது.
- தனக்கு நோபல் பரிசு தர மாட்டார்கள் என்று டிரம்ப் ஆதங்கத்துடன் தெரிவித்திருந்தார்.
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் பெயரை சமீபத்தில் பாகிஸ்தான் பரிந்துரைத்தது. ஆனால் பல போர்களை நிறுத்த முயற்சி மேற்கொண்டாலும் தனக்கு நோபல் பரிசு தர மாட்டார்கள் என்று டிரம்ப் ஆதங்கத்துடன் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் முறைப்படி பரிந்துரை செய்யப்பட்டது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான கார்ட்டர், நோபல் குழுவிற்கு எழுதிய கடிதத்தில் டிரம்பின் பெயரை பரிந்துரை செய்தார்.
இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயரை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பரிந்துரை செய்துள்ளார்.
நேற்று இரவு வெள்ளை மாளிகையில் நடந்த இரவு விருந்தின் போது, நோபல் பரிசுக் குழுவிற்கு அனுப்பிய நியமனக் கடிதத்தின் நகலை டிரம்மிடம் நெதன்யாகு வழங்கினார்.
அப்போது டிரம்பிடம் பேசிய நெதன்யாகு, "நீங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு பிராந்தியத்திலும் அமைதியை ஏற்படுத்தி வருகிறீர்கள். நான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு உங்களை பரிந்துரைத்து நோபல் பரிசுக் குழுவிற்கு அனுப்பிய கடிதத்தை உங்களுக்கு வழங்க விரும்புகிறேன். இதற்கு நீங்கள் மிகவும் தகுதியானவர், நீங்கள் அதைப் பெற வேண்டும்" என்று தெரிவித்தார்.
2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு இதுவரை 338 வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்று நோபல் குழு தெரிவித்துள்ளது.

- அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப் போவதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.
- 14 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டார்.
ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து அதிக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
ஜப்பான், தென்கொரியா, மியான்மர், லாவோஸ், தென்னாப்பிரிக்கா, கஜகஸ்தான், மலேசியா, துனிசியா, இந்தோனேசியா, போஸ்னியா, வங்கதேசம், செர்பியா, கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய 14 கூடுதல் நாடுகளுக்கு டிரம்ப் அதிக வரிகளை விதித்தார்.
குறிப்பாக ஜப்பான், தென்கொரியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என அந்நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
புதிய வரிவிதிப்பு குறித்து 14 நாடுகளுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களின் நகல்களை டிரம்ப் வெளியிட்டார். அதில், நாங்கள் உயர்த்திய வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர்கள் தங்கள் சொந்த இறக்குமதி வரிகளை உயர்த்தினால், அமெரிக்க அரசு இன்னும் வரிகளை உயர்த்தும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப் போவதாக ஏற்கனவே டிரம்ப் அறிவித்திருந்தார். மேலும் வரும் 9-ம் தேதி வரை வரி விதிப்பை நிறுத்திவைப்பதாக அவர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இவ்வளவு தகுதிகள் இருந்தும், டிங்கிற்கு பொருத்தமான வேலை கிடைக்கவில்லை.
- பல நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து, தனது வேலைக்காக 10 நேர்காணல்களில் கலந்து கொண்டார்.
சீனாவைச் சேர்ந்த டிங், முன்னணி பல்கலைக்கழகங்கள் உட்பட பல பட்டங்களைப் பெற்றவர். பிரிட்டனின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பல்லுயிர் பெருக்கத்தில் முதுகலைப் பட்டம், Peking பல்கலைக்கழகத்தில் ஆற்றல் பொறியியலில் முதுகலைப் பட்டம் மற்றும் சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
இவ்வளவு தகுதிகள் இருந்தும், டிங்கிற்கு பொருத்தமான வேலை கிடைக்கவில்லை. அவர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்பு ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றினார். மார்ச் மாதத்தில் அவரது ஒப்பந்தம் காலாவதியானதால், புதிய வேலை எதுவும் கிடைக்காததால், அவர் சிங்கப்பூரில் உணவு டெலிவரி ஊழியர் நாட வேண்டியிருந்தது.
ஆக்ஸ்போர்டு பட்டதாரியான இவர், பல நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து, தனது வேலைக்காக 10 நேர்காணல்களில் கலந்து கொண்டார். ஆனால் வேலை கிடைக்கவில்லை.
டெலிவரி ஊழியராக ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்து வாரத்திற்கு ரூ.40,000 க்கு மேல் டிங் சம்பாதிக்கிறார்.
"நாம் கடினமாக உழைத்தால், நாம் ஒரு நல்ல வாழ்க்கையை சம்பாதிக்க முடியும். இது ஒரு மோசமான வேலை அல்ல" என்று டிங் தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.
- தலாய் லாமாவின் 90வது பிறந்தநாள் அவர் தங்கியிருக்கும் அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற்றது.
- தலாய் லாமாவை தேர்தெடுக்கும் அதிகாரம் தங்கள் அறக்கட்டளைக்கே உள்ளது என்று தெரிவித்தார்.
திபெத்திய பௌத்த ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவின் 90வது பிறந்தநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்ததற்கும், பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்ட இந்திய பிரமுகர்கள் பங்கேற்றதற்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
திபெத்திய பிரச்சினைகளில் இந்தியா தனது சிறப்பு நலன்களை மனதில் கொள்ள வேண்டும் என்று சீனா கூறியுள்ளது.
இந்த விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். "மதத்தின் பெயரால் திபெத்தின் மீதான சீனாவின் இறையாண்மையை பறிக்க தலாய் லாமாவின் முயற்சிகள் உள்ளன. இந்தியா தனது உள் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும்" என்று அவர் கூறினார்.
முன்னதாக இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள தலாய் லாமாவின் 90வது பிறந்தநாள் அவர் தங்கியிருக்கும் அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற்றது.
இதன்முன், அடுத்த தலாய் லாமாவை தேர்தெடுக்கும் அதிகாரம் தங்கள் அறக்கட்டளைக்கே உள்ளது என்றும் வேறு எவரின் தலையீடும் இருக்க கூடாது எனவும் தலாய் லாமா வெளியிட்ட அறிக்கைக்கு சீனா கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- சீல் வைக்கப்பட்ட ஆவணங்களில் டிரம்பின் பெயர் இருப்பதாக மஸ்க் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
- ஆடம்பர வாழ்க்கை முறைக்கும், சமூக அந்தஸ்துக்கும் பின்னால், கிரிமினல் உலகமே இருந்தது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முன்னாள் நண்பரும், இந்நாள் எதிரியுமான எலான் மஸ்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் பாலியல் குற்ற வழக்கத்தை மீண்டும் கிளறியுள்ளார்.
பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனின் சீல் வைக்கப்பட்ட ஆவணங்களில் டிரம்பின் பெயர் இருப்பதாக மஸ்க் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
"அதிகாரப்பூர்வ ஜெஃப்ரி எப்ஸ்டீன் சிறுமிகள் பாலியல் குற்றவாளி (Pedophile) கைது எண்ணிக்கை: 0 0 0 0" என்று எக்ஸ் பதிவில் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, "எப்ஸ்டீன் ஆவணங்களில் டிரம்ப் இருக்கிறார். அதனால்தான் அவை பொதுவில் வெளியிடப்படவில்லை" என்று மஸ்க் ஜூன் மாதம் பதிவிட்டிருந்தார். பின்னர், அந்தப் பதிவை நீக்கி, "நான் எல்லை மீறிவிட்டேன்" என்று கூறியிருந்தார்.
எப்ஸ்டீன் மற்றும் டிரம்ப் 1990-களில் நண்பர்களாகவும் அண்டை வீட்டாராகவும் இருந்ததாலும், ஒரே விருந்துகளில் கலந்துகொண்டதாலும், டிரம்பின் பெயர் எப்ஸ்டீன் ஆவணங்களில் உள்ளதா என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்துள்ளன.
யார் இந்த எப்ஸ்டீன்?
ஜெஃப்ரி எப்ஸ்டீன், அமெரிக்காவின் மிகவும் செல்வாக்கு மிக்க ஒரு நிதியாளர். பெரும் நிறுவனங்களுக்கு நிதி திரட்டித் தரும் பணியில் ஈடுபட்டு, பல பணக்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். ஆனால், அவரது ஆடம்பர வாழ்க்கை முறைக்கும், சமூக அந்தஸ்துக்கும் பின்னால், கிரிமினல் உலகமே இருந்தது.
2000-களின் முற்பகுதியிலிருந்து, எப்ஸ்டீன் மீது இளம் சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது, கடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அவருக்குச் சொந்தமான 'லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்' என்ற கரீபியன் தீவில், பல முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோரை அழைத்து வந்து, அங்கு பாலியல் ரீதியான வன்முறைகளில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவாகின.
2008-ல் எப்ஸ்டீனுக்கு மிகக் குறுகிய காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், 2019-ல் மேலும் கடுமையான பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகளுடன் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.
ஆனால், வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூயார்க் சிறையில் மர்மமான முறையில் இறந்துபோனார். அவரது மரணம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது, அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என்பது இன்று வரை ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது.
'எப்ஸ்டீன் கோப்புகள்'
ஜெஃப்ரி எப்ஸ்டீனின் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், அவருடைய தொலைபேசி அழைப்பு பதிவுகள், விமானப் பயணப் பதிவுகள், நீதிமன்ற ஆவணங்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள், அவருடன் தொடர்பு கொண்ட பிரபலங்களின் பட்டியல் ஆகியவை 'எப்ஸ்டீன் கோப்புகள்' என அழைக்கப்படுகின்றன.
இந்த கோப்புகளில் பல உயர்மட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பிரபல கலைஞர்கள் மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக நீண்டகாலமாகவே சந்தேகங்கள் நிலவி வருகின்றன. இந்த கோப்புகள் வெளியானால், பலரின் இமேஜ் அடியோடு சரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கிரீஸ் நாட்டிற்கு சொந்தமான 'மேஜிக் சீஸ்' கப்பல் சேதமடைந்தது.
- நவம்பர் 2023 முதல் ஜனவரி 2025 வரை இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்கள் ஹவுத்திகளால் தாக்கப்பட்டன.
ஏமனில் ஹவுத்திகள் வசம் உள்ள பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. 20 போர் விமானங்களைப் பயன்படுத்தி 50க்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டன.
திங்கட்கிழமை காலை நடத்தப்பட்ட தாக்குதலில் ஏமனில் உள்ள மூன்று துறைமுகங்கள் மற்றும் ராஸ் காதிப் மின் நிலையத்தை இஸ்ரேலிய இராணுவம் குறிவைத்தது.
இதற்கிடையில், ஹவுத்திகள் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்தனர். செங்கடலில் ஹவுத்திகள் நடத்திய தாக்குதலில் கிரீஸ் நாட்டிற்கு சொந்தமான 'மேஜிக் சீஸ்' கப்பல் சேதமடைந்தது. தீப்பிடித்து எரிந்ததால், கப்பலை கைவிட்டு ஊழியர்கள் தப்பினர். கையெறி குண்டுகளைப் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன் படகுகளும் கப்பலில் வீசப்பட்டன.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை ஒரு பிரிட்டிஷ் கப்பலும் தாக்கப்பட்டது. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை நிறுத்தாவிட்டால் செங்கடலை முற்றுகையிடுவதாக ஹவுத்திகள் சபதம் செய்துள்ளனர்.
நவம்பர் 2023 முதல் ஜனவரி 2025 வரை இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்கள் ஹவுத்திகளால் தாக்கப்பட்டன.
- உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தலாம் என பாதுகாப்பு அச்சுறுத்தலால் விமானப் போக்குவரத்து பாதிப்பு.
- கடந்த வருடம் மே மாதம்தான் அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.
ரஷியா- உக்ரைன் இடையே 3 வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. தற்போது இரு நாடுகளும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் விமான போக்குவரத்தை மிகவும் நேர்த்தியாக கையாள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தக்கூடும் என ரஷியாவின் ஏராளமான விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்து ரோமன் ஸ்டாரோவாய்ட்டை புதின் அதிரடியாக நீக்கினார்.
அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சில மணி நேரத்தில், ரோமன் ஸ்டாரோவாய்ட் காருக்குள் பிணமாக கிடந்துள்ளார். தற்போது தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.
கடந்த வருடம் மே மாதம்தான் போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். அதற்கு முன்னதாக சுமார் ஐந்து வருடம் குர்ஸ்க் பிரந்தியத்தின் கவர்னராக செயல்பட்டு வந்தார். தற்போது அன்ட்ரெய் நிகிடின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நவ்கோரோட் பிராந்தியத்தின் முன்னாள் கவர்னர் ஆவார்.
- கடந்த வாரம் 1270-க்கும் அதிகமான டிரோன்கள் மூலம் தாக்குதல்.
- கடந்த 24 மணி நேரத்தில் 100-க்கும் அதிகமான டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. கடந்த 24 மணி நேர தாக்குதலில் 10 பொதுமக்கள் உயிரிழந்த நிலையில், 38 பேர் காயம் அடைந்துள்ளனர். 100-க்கும் அதிகமான டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷியா கடந்த சில நாட்களாக உக்ரைன் மீது அதிதீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் 1270 டிரோன்கள், 39 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் எல்லையில் சில இடங்களில் (Front Line) ஆயிரம் கி.மீ. அளவிற்கு ஊடுருவ ரஷியா ராணுவம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் அதை கடுமையாக தடுத்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய கூட்டணிகள் மற்றும் முன்னணி அமெரிக்கா பாதுகாப்பு நிறுவனத்துடன் டிரோன்கள் தயாரிக்க உக்ரைன் கடந்த சனிக்கிழமை ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், வான் பாதுகாப்பு உயிர்களை காப்பாற்க முக்கியமான விசயம் எனத் தெரிவித்துள்ளார்.
- பிரிக்ஸ் மாநாடு பிரேசிலில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
- பிரிக்ஸ் அமைப்பு அமெரிக்க கொள்கைக்கு எதிரான குரூப் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுகளை உள்ளடக்கியது பிரிக்ஸ் அமைப்பு. கடந்த வருடம் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், ஆகியவை இணைந்தன. இந்த வருடம் இந்தோனேசியா இணைந்துள்ளது.
பிரிக்ஸ் அமைப்பின் 17ஆவது மாநாடு நேற்றும் இன்றும் பிரேசில் நடைபெற்றது. பிரேசில் மாநாடு நடைபெற்று கொண்டிருக்கும்போது, பிரிக்ஸ் அமைப்பை, அமெரிக்க கொள்கைக்கு எதிரானது என அழைத்த டொனால்டு டிரம்ப், பிரிக்ஸின் அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் எந்த நாடும், கூடுதல் 10 சதவீதம் வரி விதிப்பை எதிர்கொள்ளும் என மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் பிரிக்ஸ் மோதலுக்கான அமைப்பு அல்ல. வளர்ந்து வரும் சந்தைகள், வளர்ந்து வருடம் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கான முக்கியமான தளம். வர்த்தக போர் மற்றம் வரி விதிப்பு போர் வெற்றியார்கள் இல்லை என சீனா தெரிவித்துள்ளது.
- சில மாதங்களில் பெய்ய வேண்டிய மழை சில மணிநேரங்களில் பெய்துள்ளது.
- டெக்சாசில் உள்ள குவாடலூப் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மத்திய கெர் கவுண்டியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் தென்-மத்திய டெக்சாசில் உள்ள குவாடலூப் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.அதாவது சில மாதங்கள் பெய்ய வேண்டிய மழை சில மணிநேரங்களில் பெய்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் ஆற்றில் இருந்து வெளியேறிய தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இந்த திடீர் வெள்ளத்தில் வீடுகள், வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. பல இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பலர் வீடுகளின் மேற்கூரையில் தஞ்சம் அடைந்தனர்.
இந்நிலையில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. இதில் 28 குழந்தைகளும் அடக்கம்.
மேலும் 41 பேர் மாயமானதாக கூறப்படுவதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ கடக்கும் என்று அஞ்சப்படுகிறது.






