என் மலர்tooltip icon

    உலகம்

    20 போர் விமானங்களை அனுப்பி ஏமனில் குண்டுமழை பொழிந்த இஸ்ரேல் - ஹவுதிக்கள் பதிலடி
    X

    20 போர் விமானங்களை அனுப்பி ஏமனில் குண்டுமழை பொழிந்த இஸ்ரேல் - ஹவுதிக்கள் பதிலடி

    • கிரீஸ் நாட்டிற்கு சொந்தமான 'மேஜிக் சீஸ்' கப்பல் சேதமடைந்தது.
    • நவம்பர் 2023 முதல் ஜனவரி 2025 வரை இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்கள் ஹவுத்திகளால் தாக்கப்பட்டன.

    ஏமனில் ஹவுத்திகள் வசம் உள்ள பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. 20 போர் விமானங்களைப் பயன்படுத்தி 50க்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டன.

    திங்கட்கிழமை காலை நடத்தப்பட்ட தாக்குதலில் ஏமனில் உள்ள மூன்று துறைமுகங்கள் மற்றும் ராஸ் காதிப் மின் நிலையத்தை இஸ்ரேலிய இராணுவம் குறிவைத்தது.

    இதற்கிடையில், ஹவுத்திகள் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்தனர். செங்கடலில் ஹவுத்திகள் நடத்திய தாக்குதலில் கிரீஸ் நாட்டிற்கு சொந்தமான 'மேஜிக் சீஸ்' கப்பல் சேதமடைந்தது. தீப்பிடித்து எரிந்ததால், கப்பலை கைவிட்டு ஊழியர்கள் தப்பினர். கையெறி குண்டுகளைப் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன் படகுகளும் கப்பலில் வீசப்பட்டன.

    முன்னதாக ஞாயிற்றுக்கிழமை ஒரு பிரிட்டிஷ் கப்பலும் தாக்கப்பட்டது. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை நிறுத்தாவிட்டால் செங்கடலை முற்றுகையிடுவதாக ஹவுத்திகள் சபதம் செய்துள்ளனர்.

    நவம்பர் 2023 முதல் ஜனவரி 2025 வரை இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்கள் ஹவுத்திகளால் தாக்கப்பட்டன.

    Next Story
    ×