என் மலர்
உலகம்
- மோடிக்கு பிரேசிலின் உயரிய விருது வழங்கி அந்நாட்டு அதிபர் லூலா டி சில்வா கவுரவித்தார்
- விமான நிலையத்தில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
அரசு முறை பயணமாக பிரேசில் சென்றிருந்த பிரதமர் மோடிக்கு பிரேசிலின் உயரிய விருதான "Grand Collar of the National Order of the Southern Cross விருது வழங்கி அந்நாட்டு அதிபர் லூலா டி சில்வா கவுரவித்தார்
பிரேசில் அளித்த விருது தனக்கு மட்டுமில்லாமல் 140 கோடி இந்தியர்களுக்கும் கிடைத்த பெருமை என பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பிரேசில் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நமீபியா சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து தாளம் இசைத்து பிரதமர் மோடி மகிழ்ந்தார்.
- இறந்தவர்களின் சாம்பலை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை செலஸ்டிஸ் நிறுவனம் செயல்படுத்தியது.
- அமெரிக்க விண்வெளி நிறுவனமான செலஸ்டிஸ் மன்னிப்பு கோரியது.
விண்வெளிக்கு 166 பேரின் சாம்பலையும், கஞ்சா விதைகளையும் கொண்டு சென்ற Mission Possible என்ற விண்கலம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பசிபிக் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான செலஸ்டிஸ், இறந்தவர்களின் சாம்பலை விண்வெளிக்கு அனுப்பி, அவர்கள் நினைவை பதிவு செய்யும் திட்டமாக இதை செயல்படுத்தியது.
இந்த விபத்து தொடர்பாக செலஸ்டிஸ் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியது.
- இப்படி பயணம் மேற்கொள்பவர்கள் 30 நாள் வரை சீனாவில் தங்கிக் கொள்ளலாம்.
- சீனாவில் சுற்றுலாவை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பயணிக்க பாஸ்போர்ட், விசா ஆகியவை தேவைப்படும். ஒரு நாட்டிற்கு என்ன காரணத்திற்காக செல்கிறோமோ அதற்கேற்ப விசா பெற்றுக் கொள்ளலாம். அதே சமயம் வெளிநாட்டினரை ஈர்க்க சில நாடுகள் விசா இல்லாமல் பயணிக்க அனுமதி வழங்கி வருகிறது.
இந்நிலையில், நமது அண்டை நாடான சீனாவும் புதிதாக 74 நாடுகள் விசா இன்றி அந்நாட்டிற்குள் பயணிக்கலாம் என அறிவித்துள்ளது. ஆனால் இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை.
இப்படி பயணம் மேற்கொள்பவர்கள் 30 நாள் வரை சீனாவில் தங்கிக் கொள்ளலாம். சீனாவில் சுற்றுலாவை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டம் வரும் 30-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.
2024 ஆம் ஆண்டில் 2 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விசா இல்லாமல் சீனாவிற்கு வந்துள்ளனர். இது முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
- குவாடலூப் நதியின் நீர்மட்டம் சில நிமிடங்களில் கிடுகிடுவென உயரும் வீடியோ வெளியாகியுள்ளது.
- 160க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரக்கூடும்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மத்திய கெர் கவுண்டியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் தென்-மத்திய டெக்சாசில் உள்ள குவாடலூப் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.அதாவது சில மாதங்கள் பெய்ய வேண்டிய மழை சில மணிநேரங்களில் பெய்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் ஆற்றில் இருந்து வெளியேறிய தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இந்த திடீர் வெள்ளத்தில் வீடுகள், வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. பல இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பலர் வீடுகளின் மேற்கூரையில் தஞ்சம் அடைந்தனர்.
இந்நிலையில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது. 160க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் காணாமல் போயுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், கனமழையால் குவாடலூப் நதியின் நீர்மட்டம் சில நிமிடங்களில் கிடுகிடுவென உயரும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 2 மணிநேரத்தில் 33 அடி வரை நதியின் நீர் மட்டம் உயர்ந்ததாக டெக்சாஸ் அரசு கூறியுள்ளது.
- அமெரிக்க பொருளாதாரத்தை சீரழிக்கவே பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
- பிரிக்ஸ் அமைப்பின் 17ஆவது மாநாடு பிரேசிலில் நடைபெற்றது.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுகளை உள்ளடக்கியது பிரிக்ஸ் அமைப்பு. கடந்த வருடம் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், ஆகியவை இணைந்தன. இந்த வருடம் இந்தோனேசியா இணைந்துள்ளது.
அண்மையில் பிரிக்ஸ் அமைப்பின் 17ஆவது மாநாடு பிரேசிலில் நடைபெற்றது. இதனிடையே பிரிக்ஸ் அமைப்பை, அமெரிக்க கொள்கைக்கு எதிரானது என விமர்சித்த டொனால்டு டிரம்ப், பிரிக்ஸின் அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் எந்த நாடும், கூடுதல் 10 சதவீதம் வரி விதிப்பை எதிர்கொள்ளும் என மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப், "அமெரிக்க பொருளாதாரத்தை சீரழிக்கவே பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே பிரிக்ஸ் நாடுகளுக்கு விரைவில் 10% வரி விதிக்கப்படும்" என்று மீண்டும் எச்சரிக்கை விடுத்தார்.
பிரிக்ஸ் அமைப்பில் இந்தியாவில் உள்ளதால் இந்தியாவுக்கும் டிரம்ப் 10% வரி விதிப்பாரா? என்று அச்சம் எழுந்துள்ளது.
- மூன்று ரஃபேல் போர் விமானங்கள் உட்பட மொத்தம் ஐந்து இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறியது.
- டசால்ட் ஏவியேஷன் எங்கள் விமானத்தின் இழப்புகளை ஒருபோதும் மறைக்கவில்லை" என்று அவர் எரிக் டிராப்பியர் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மே 7 அன்று இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற திட்டத்தைத் தொடங்கியத. இந்த நடவடிக்கையில் மூன்று ரஃபேல் போர் விமானங்கள் உட்பட மொத்தம் ஐந்து இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறியது.
இந்நிலையில் பாகிஸ்தான் கூறியதை ரஃபேல் தயாரிப்பு நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் மறுத்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்றும், இந்தியா ஒரே ஒரு ரஃபேல் விமானத்தை மட்டுமே இழந்தது என்றும், அதுவும் பாகிஸ்தான் தாக்குதலால் அல்ல என்றும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் டிராப்பியர் தெளிவுபடுத்தியுள்ளார்.
"ஒரு ரஃபேல் விமானம் அதிக உயரத்தில் பறக்கும் போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. எங்கள் ஸ்பெக்ட்ரா மின்னணு போர் அமைப்பு தரவு பாகிஸ்தான் நடவடிக்கையால் விபத்து நிகழவில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது. டசால்ட் ஏவியேஷன் எங்கள் விமானத்தின் இழப்புகளை ஒருபோதும் மறைக்கவில்லை" என்று அவர் எரிக் டிராப்பியர் தெரிவித்தார்.
- ராமர் மட்டுமல்ல, சிவன் மற்றும் விஸ்வாமித்திரரும் தனது நாட்டில் பிறந்ததாக ஒலி கூறினார்.
- சித்வான் மாவட்டத்தின் தோரி பகுதிதான் உண்மையான அயோத்தி என்றும், ராமர் அங்கு பிறந்தார் என்றும் கூறினார்.
ராமர் இந்தியாவில் உள்ள அயோத்தியில் பிறந்தவர் அல்ல, மாறாக நேபாளத்தில் பிறந்தார் என்று அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலி தெரிவித்தார்.
காத்மாண்டுவில் நடந்த ஒரு கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர் இந்தக் கூற்றை தெரிவித்தார்.
இந்த வார்த்தைகளை தான் சொந்தமாகச் சொல்லவில்லை என்றும், வால்மீகி எழுதிய அசல் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இதைச் சொல்கிறேன் என்றும் சர்மா ஒலி கூறினார்.
ராமரின் உண்மையான பிறந்த இடம் நேபாளத்தில் உள்ளது என்ற உண்மையை மக்கள் பரப்ப தயங்க வேண்டாம் என்று அவர் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு இதே போன்ற கருத்துக்களை ஒலி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் தனது நாட்டில் உள்ளசித்வான் மாவட்டத்தின் தோரி பகுதிதான் உண்மையான அயோத்தி என்றும், ராமர் அங்கு பிறந்தார் என்றும் கூறினார்.
ராமர் மட்டுமல்ல, சிவன் மற்றும் விஸ்வாமித்திரரும் தனது நாட்டில் பிறந்ததாக ஒலி சமீபத்தில் கூறினார். புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல இடங்கள் இப்போது நேபாளத்தின் சன்சாரி மாவட்டத்தில் உள்ளன என்று அவர் கூறினார்.
- பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து வைத்திருந்த பார்ட்னருக்கு மயக்க மருந்து செலுத்தியுள்ளார்.
- கூடுதல் டோஸ் செலுத்தியதால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு.
இந்தியாவின் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் நர்ஸ் வேலைக்கு படித்தவர். கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாடு சென்று பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். இறுதியாக கிளினிக் தொடங்க முடிவு செய்தார்.
ஏமன் நாட்டின் விதிமுறைப்படி தொழில் தொடங்க வேண்டுமென்றால் அந்த நாட்டின் ஒருவர் பார்ட்னராக இருக்க வேண்டும். அதனடிப்படையில் தலால் அப்டோ மெஹ்தி என்பருடன் கடந்த 2014 ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டு, பார்ட்னராக சேர்த்துள்ளார்.
நாட்கள் செல்ல செல்ல மெஹ்தி, நிமிஷா பிரியாவை மிரட்ட தொடங்கியுள்ளார். இது தொடர்பாக புகார் அளிக்க மெஹ்தி கடந்த 2016ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் விடுதலை ஆகி வெளியே வந்த பின்னரும் தொடர்ந்து மிரட்டியுள்ளார்.
மெஹ்தி பறிமுதல் செய்து வைத்திருந்த பாஸ்போர்ட்டை மீட்க, அவருக்கு மயக்க மருந்து செலுத்தியதாக தெரிகிறது. கூடுதல் டோஸ் செலுத்தியதால் மெஹ்தி உயிரிழந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பின்னர் ஏமனில் இருந்து வெளியேற முயற்சித்தபோது, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 2018ஆம் ஆண்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
பின்னர 2023ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது. இந்த நிலையில் வருகிற 16 ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை தொடர்ந்து இந்த விசயம் தொடர்பாக உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், ஏமன் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், முடிந்த அளவிற்கு அனைத்து உதவிகளையும் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளது.
- மிலன் விமான நிலையத்தில் ஒருவர் விமானத்தின் என்ஜினால் உள்ளிழுக்கப்பட்டார்.
- இதில் அவர் பரிதாபமாக இறந்தது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரோம்:
இத்தாலியின் மிலன் நகரில் பெர்கமோ விமான நிலையம் அமைந்துள்ளது. இன்று காலை இந்த விமான நிலையத்தில் ஒருவர் விமானத்தின் என்ஜினால் உள்ளிழுக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக, அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
வோலோடியா விமான நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ-319 என்ற விமானம் ஸ்பெயினின் அஸ்டூரியாஸ் செல்ல விமான ஓடுதளத்தில் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது அதனருகே ஓடிக்கொண்டிருந்த நபர் விமானத்தின் என்ஜினால் உள்ளிழுக்கப்பட்டார் என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வோலோடியா விமான நிறுவனம் எக்ஸ் வலைதளப் பக்கத்தில், உயிரிழந்தது பயணியோ, விமான ஊழியரோ அல்ல. 154 பயணிகளும் 6 பணியாளர்களும் விமானத்தில் பாதுகாப்பாக இருக்கின்றனர் என பதிவிட்டது.
இச்சம்பவத்தால் அந்த விமான நிலையத்தில் 9 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. 6 விமானங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. எட்டு விமானங்கள் நிறுத்தப்பட்டது. மதியத்துக்கு மேல் விமானங்கள் இயக்கப்பட்டன. விமான இன்ஜினால் ஒருவர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- ரியோ டி ஜெனிரோவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது.
- பிரேசிலியா சென்ற பிரதமர் மோடிக்கு அல்வோராடா மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரேசிலியா:
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
பிரதமர் மோடி ஏற்கனவே 3 முறை பிரேசில் சென்றுள்ளார். முதலில் ஜூலை 2014ம் ஆண்டில் சென்றார். 2019-ம் ஆண்டில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் பங்கேற்றார். கடந்த ஆண்டு நவம்பரில் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு என மொத்தம் 3 முறை சென்றுள்ளார்.
தற்போது ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மீண்டும் பிரேசில் சென்றுள்ளார்.
இந்நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு பிறகு, பிரதமர் நரேந்திர மோடி பிரேசிலியா நகரில் உள்ள அல்வோராடா மாளிகைக்குச் சென்றார்.
அப்போது பிரதமர் மோடிக்கு 114 குதிரைகளுடன் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரேசில் அதிபர் லூலா டி சில்வா அரண்மனை வாசலில் வந்து நின்று மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தார். இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
- இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் ஓராண்டுக்கு மேல் நடைபெற்று வருகிறது.
- ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் ஜூன் 13-ம் தேதி ஈரான்மீது தாக்குதல் நடத்தியது.
டெஹ்ரான்:
இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் ஓராண்டுக்கு மேல் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, ஈரான் அரசும் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காகக் கொண்டு 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி தரும் வகையில், ஈரான் மீதும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது.
இஸ்ரேல் அரசு ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த ஜூன் 13-ம் தேதி ஈரான்மீது தாக்குதல் நடத்தியது. 200-க்கும் மேற்பட்ட விமானங்கள், டிரோன்களைக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஈரான் புரட்சி படை தளபதி உசைன் சலாமி மற்றும் அணு விஞ்ஞானி பெரேதூன் அப்பாஸி உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், ஈரானில் வீரமரணம் அடைந்தவர்கள் மற்றும் படைவீரர்கள் விவகாரங்களுக்கான அறக்கட்டளையின் தலைவர் சயீத் ஒஹாதி, ஈரானின் அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது, இஸ்ரேலுடனான போரில் 1,060 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 1,100 ஆக அதிகரிக்க கூடும் என தெரிவித்துள்ளார்.
ஆனாலும், வாஷிங்டனை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் குழு அளித்த விரிவான தகவலில், இஸ்ரேல் தாக்குதலில் 1,190 பேர் ஈரானில் பலியாகி உள்ளனர். அவர்களில் 436 பேர் பொதுமக்கள். 435 பேர் பாதுகாப்பு படையினர். இதுதவிர, 4,475 பேர் காயமடைந்து உள்ளனர் என தெரிவித்துள்ளது.
- ஹீத்ரோ விமான நிலையத்தில் பெரும்பாலான ஊழியர்கள் இந்தியர்கள்.
- அவர்களை ஆங்கிலத்தில் பேசச் சொன்னேன். ஆனால் அவர்கள் பேசவில்லை.
லண்டன்:
லண்டனில் ஹீத்ரோ விமான நிலையம் மிகவும் பிரபலமானது. சமீபத்தில் இந்த விமான நிலையத்தில் வந்திறங்கிய இங்கிலாந்து பெண்மணி லூசி ஒயிட், அங்கு வேலை செய்யும் இந்திய பணியாளர்களை சரமாரியாக சாடியுள்ளார்.
இதுதொடர்பாக, லூசி ஒயிட் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
ஹீத்ரோ விமான நிலையத்தில் பெரும்பாலான ஊழியர்கள் இந்தியர்கள் அல்லது ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதை கவனித்தேன்.
அவர்களை ஆங்கிலத்தில் பேசச் சொன்னேன். ஆனால் அவர்கள் பேசவில்லை. அவர்கள் தன்னை ஒரு இனவெறி பிடித்தவர் என குற்றம் சாட்டினர்.
அவர்கள் ஏன் இங்கிலாந்திற்குள் நுழையும் முதல் இடத்தில் வேலை செய்கிறார்கள்? அவர்கள் அனைவரையும் நாடு கடத்துங்கள் என பதிவிட்டுள்ளார்.
இங்கிலாந்து பெண்மணியின் இந்தப் பதிவைக் கண்டித்து வலைதளவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.






