என் மலர்tooltip icon

    உலகம்

    சுற்றுலா வர விசா தேவையில்லை என்ற திட்டத்தை 74 நாடுகளுக்கு விரிவுபடுத்திய சீனா
    X

    சுற்றுலா வர விசா தேவையில்லை என்ற திட்டத்தை 74 நாடுகளுக்கு விரிவுபடுத்திய சீனா

    • இப்படி பயணம் மேற்கொள்பவர்கள் 30 நாள் வரை சீனாவில் தங்கிக் கொள்ளலாம்.
    • சீனாவில் சுற்றுலாவை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பயணிக்க பாஸ்போர்ட், விசா ஆகியவை தேவைப்படும். ஒரு நாட்டிற்கு என்ன காரணத்திற்காக செல்கிறோமோ அதற்கேற்ப விசா பெற்றுக் கொள்ளலாம். அதே சமயம் வெளிநாட்டினரை ஈர்க்க சில நாடுகள் விசா இல்லாமல் பயணிக்க அனுமதி வழங்கி வருகிறது.

    இந்நிலையில், நமது அண்டை நாடான சீனாவும் புதிதாக 74 நாடுகள் விசா இன்றி அந்நாட்டிற்குள் பயணிக்கலாம் என அறிவித்துள்ளது. ஆனால் இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை.

    இப்படி பயணம் மேற்கொள்பவர்கள் 30 நாள் வரை சீனாவில் தங்கிக் கொள்ளலாம். சீனாவில் சுற்றுலாவை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டம் வரும் 30-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.

    2024 ஆம் ஆண்டில் 2 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விசா இல்லாமல் சீனாவிற்கு வந்துள்ளனர். இது முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

    Next Story
    ×