என் மலர்
நீங்கள் தேடியது "அஸ்தி"
- இறந்தவர்களின் சாம்பலை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை செலஸ்டிஸ் நிறுவனம் செயல்படுத்தியது.
- அமெரிக்க விண்வெளி நிறுவனமான செலஸ்டிஸ் மன்னிப்பு கோரியது.
விண்வெளிக்கு 166 பேரின் சாம்பலையும், கஞ்சா விதைகளையும் கொண்டு சென்ற Mission Possible என்ற விண்கலம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பசிபிக் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான செலஸ்டிஸ், இறந்தவர்களின் சாம்பலை விண்வெளிக்கு அனுப்பி, அவர்கள் நினைவை பதிவு செய்யும் திட்டமாக இதை செயல்படுத்தியது.
இந்த விபத்து தொடர்பாக செலஸ்டிஸ் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியது.
- சவுமியாவின் விருப்பத்தின்படி ஓவியம் வரைந்து கொடுக்க யாரும் முன்வரவில்லை.
- சாஜனின் ஓவியத்தை ஓவியர் உன்னி வர்ணசாலா வரைந்து வருகிறார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் சாஜன். இவரது மனைவி சவுமியா. (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). வெவ்வேறு மதத்தை சேர்ந்த இவர்கள் குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
சாஜன் ஹார்டுவேர் என்ஜினீயராகவும், சவுமியா வங்கி ஊழியராகவும் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் சாஜனுக்கு மூளையில் பிரச்சனை ஏற்பட்டது. அவரை காப்பாற்ற மனைவி பல விதங்களில் போராடினார். சாஜனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இருந்தபோதிலும் அவர் பரிதாபமாக இறந்து விட்டார். கணவரின் இறப்பு சவுமியாவை வெகுவாக பாதித்தது. கணவரின் மறைவால் அவர் மனம் உடைந்தார். சவுமியா மற்றும் சாஜன் ஆகிய இருவரும் எந்த ஒரு மதத்தின் மீதும் விருப்பின்றி, எந்தவித மத நம்பிக்கைகளுக்கும் இடம் கொடுக்காமல் வாழ்ந்து வந்துள்ளனர்.
இதனால் தனது கணவரின் உடலை எரிக்க சவுமியா முடிவு செய்தார். அதன்படி சாஜனின் உடல் எரிக்கப்பட்டது. அவரது அஸ்தி மனைவி சவுமியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை வழக்கம் போல் நீர்நிலையில் கரைக்க சவுமியா விரும்பவில்லை.
மாறாக கணவரின் அஸ்தியை ஏதாவது ஒரு ஓவிய கலைஞரிடம் கொடுத்து, அதனை பயன்படுத்தி ஓவியம் வரைந்து தன்னுடன் வைத்துக்கொள்ள முடிவு செய்தார். அதன்படி பல கலைஞர்களை அவர் சந்தித்திருக்கிறார்.
ஆனால் சவுமியாவின் விருப்பத்தின்படி யாரும் ஓவியம் வரைந்து கொடுக்க முன்வரவில்லை. இறுதியில் உன்னி வர்ணசாலா என்ற ஓவியக் கலைஞர், சவுமியாவின் விருப்பப்படி அவரது கணவரின் அஸ்தியை பயன்படுத்தி ஓவியம் வரைந்து கொடுக்க சம்மதித்தார்.
இதையடுத்து அவரிடம் தனது கணவரின் அஸ்தியை சவுமியா ஒப்படைத்தார். மேலும் தனது கணவரின் புகைப்படம் ஒன்றையும், ஓவிய கலைஞரிடம் வழங்கினார். அதனை வைத்து சாஜனின் ஓவியத்தை ஓவியர் உன்னி வர்ணசாலா வரைந்து வருகிறார்.
இறந்தவரின் அஸ்தியை பயன்படுத்தி ஓவியம் வரைவது குறித்து அவர் கூறியதாவது:-
நான் இதற்கு முன்பு இதுபோன்று செய்ததில்லை. வாழ்க்கையில் இப்படியொரு வாய்ப்பு எனக்கு கிடைப்பது இதுவே முதல் முறையாகும். இது கடைசி முறையாகவும் இருக்கலாம். ஒரு கலைஞனாக இந்த பணி எனக்கு மிகவும் சவாலானது. தற்போது நான் ஓவியத்தை பற்றி மட்டுமே சிந்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் பிரதமரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வாஜ்பாய் கடந்த 17-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் டெல்லியில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. வாஜ்பாயின் அஸ்தியை நாடு முழுவதும் உள்ள முக்கிய நதிகள் மற்றும் கடல்களில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், அவரது அஸ்தியும் வைக்கப்பட இருக்கிறது. நிகழ்ச்சி முடிந்தவுடன், ஒவ்வொரு மாநில பா.ஜ.க. தலைவர்களிடம் வாஜ்பாயின் அஸ்தி வழங்கப்பட இருக்கிறது. அவர்கள் அதை பெற்றுவந்து, தங்களது மாநிலங்களில் உள்ள முக்கிய நதிகளில் அஸ்தியை கரைக்க இருக்கின்றனர்.
வாஜ்பாயின் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, தமிழகத்தில் இருந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், தேசிய செயலாளர் எச்.ராஜா, மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர்.
வாஜ்பாயின் அஸ்தி நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னை கொண்டுவரப்பட இருக்கிறது. தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன்பிறகு, தமிழகத்தில் 6 இடங்களில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்பட இருக்கிறது. சென்னையில் அடையாறு கடலில் கலக்கும் இடம், ராமேசுவரம் கடல், கன்னியாகுமரி கடல், மதுரையில் வைகை ஆறு, ஈரோட்டில் பவானி ஆறு, திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆறு ஆகிய இடங்களில் வாஜ்பாயின் அஸ்தி கரைக்கப்பட இருக்கிறது. #AtalBihariVajpayee #tamilnews






