என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • பிரதமர் மோடி சமரச சன்மார்க்கத்தை கடைப்பிடிக்கிறார்.
    • தமிழகத்திற்கு எதிராக யாரும் செயல்படவில்லை.

    சென்னை:

    சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் வள்ளலாரின் 202-வது பிறந்தநாள் விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

    வள்ளலாருக்கு கிடைக்க வேண்டிய மரியாதை இன்னும் கிடைக்காதது வருத்தமாக இருக்கிறது. பிரதமர் மோடி சமரச சன்மார்க்கத்தை கடைப்பிடிக்கிறார். அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் சன்மார்க்கி.

    ஆனால் தமிழகத்தின் நிலை வருத்தமளிக்கிறது. தமிழ்நாட்டில் தலித் சமுதாயத்திற்கான உரிமை மிகவும் கேள்விக்குறியாக இருக்கிறது. அறிவிருக்கும் சமுதாயம் எப்படி ஏற்றத்தாழ்வுடன் இருக்க முடியும். வள்ளலார் கூறியதுதான் தமக்கு நினைவுக்கு வருகிறது.

    தமிழகத்திற்கு எதிராக யாரும் செயல்படவில்லை. இங்கு எந்த சண்டையும் இல்லை. ஆனால் நான் பயணிக்கும் இடமெங்கும் தமிழ்நாடு போராடும் என சுவர்களில் எழுதியுள்ளனர். தமிழ்நாடு யாருடன் போராடும்? தமிழக மக்கள் ஒன்றிணைந்து வாழ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மு.க.ஸ்டாலின் சமீப காலமாக பேசும்போது தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன், வென்று காட்டுவோம், தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று கூறி வருகிறார்.

    இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேள்வி கேட்கும் வகையில் தமிழ்நாடு யாருடன் போராடும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    • மேகமலை சின்னசுருளி அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
    • தற்போது மழை ஓய்ந்ததால் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது

    தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழைபொழிவு இல்லாமல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. தேனி, பெரியகுளம், ஜெயமங்கலம், மேல்மங்களம், குரங்கணி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது.

    கடமலைக்குண்டு சுற்று வட்டார பகுதிகளிலும் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து அய்யனார்புரம், பாலூத்து, துரைச்சாமிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கியது. கனமழை காரணமாக அய்யனார்புரம் பகுதியிலுள்ள ஓடைகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    கனமழை காரணமாக மேகமலை சின்னசுருளி அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மழை ஓய்ந்ததால் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்று விடுமுறை தினம் என்பதால் தேனி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து மழை பெய்தால் மூல வைகை ஆற்றிலும் நீர் வரத்து அதிகரிக்கும். எனவே இதனை நம்பியுள்ள விவசாயிகள், பொதுமக்கள் மழையை எதிர்பார்த்துள்ளனர்.

    இதேபோல் கும்பக்கரை, சுருளி அருவியிலும் தண்ணீர் அதிக அளவு சென்ற போதிலும் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

    • இடிபாடுகளில் சிக்கிய 65 மாணவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • சிலர் உயிருடன் இடிபாடுகளில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டனர்.

    இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சிடோர்ஜோ நகரில் பள்ளி கட்டிடத்தின் ஒரு பகுதி கடந்த 29-ந்தேதி இடிந்து விழுந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

    இதில் 99 மாணவர்களை மீட்டனர். இடிபாடுகளில் சிக்கிய 65 மாணவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 14 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். சிலர் உயிருடன் இடிபாடுகளில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டனர்.

    இந்த நிலையில் கட்டிட இடிபாடுகளில் மேலும் உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து பலி எண்ணிக்கை 37-ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 26 பேர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, இன்று காலை நிலவரப்படி 37 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 104 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர் என்றனர்.

    • பெங்களூரை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசா என்ற குப்பாச்சி சீனா.
    • பிரபல ரவுடியான இவர் பெங்களூர் பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    பெங்களூர் பரப்பன அக்ரகாரா மத்திய சிறையில் அடிக்கடி கைதிகளுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவதாகவும், அது தொடர்பாக வீடியோக்கள் வெளியாகியும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த சிறையில் கைதி ஒருவர் பெரிய கத்தியால் கேக்வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பெங்களூரை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசா என்ற குப்பாச்சி சீனா. பிரபல ரவுடியான இவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக பெங்களூர் பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் அவர் சிறை வளாகத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். அப்போது அவருக்கு சக கைதிகள் ஆப்பிள் மாலை அணிவித்து உள்ளனர். பின்னர் குப்பாச்சி சீனா பெரிய கத்தியால் கேக் வெட்டி அனைவருக்கும் ஊட்டி மகிழ்ந்துள்ளார்.

    இதை அங்கு இருந்த யாேரா ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. சிறை விதிகளின் படி சிறை வளாகத்தில் கைதிகள் செல்போன்கள் பயன்படுத்துவது குற்றம் ஆகும். ஆனாலும் கைதிகள் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ வெளியானது எப்படி என்று சிறைத்துறை உயர் அதிகாரிகளும் விசாரணையில் இறங்கினர்.

    அப்போது முதல் கட்ட விசாரணையில் இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் 5 மாதங்களுக்கு முன்பு நடந்தது தெரியவந்தது. மேலும் வீடியோவில் இருந்த சில கைதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது குறித்து பரப்பன அக்ரகாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறைக்குள் செல்போன்களை எப்படி கொண்டு சென்றனர். மேலும் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு உதவியது யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இந்த ஒன்றுகூடல் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெற்றது
    • மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.

    1980களில் தென்னிந்திய சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களாக திகழ்ந்த நடிகர், நடிகைகள் சந்தித்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

     இந்த ஒன்றுகூடல் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் இந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்த மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.

    இதில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பிரபு, சரத்குமார், பாக்யராஜ் உள்ளிட்ட நடிகர்களும் குஷ்பு, ராதா, நதியா, ரேவதி , சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், மீனா உள்ளிட்ட நடிகைகளும் கலந்துகொண்டனர்.


    2024 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த இந்த சந்திப்பு, சென்னை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடத்தப்பட்டுள்ளது. 

    • உங்களை நம்பிய தொண்டர்களை நட்டாற்றில் விட்டுச் சென்றீர்கள்.
    • முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், தங்கத்தமிழ் செல்வன் என்று பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது.

    சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு கண்டனம் தெரிவித்து சில கேள்விகளை எழுப்பி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

    சுயநலத்தில் உண்மை முகம் வெட்டு வெளிச்சமாகியுள்ளது. எப்போது ஒருவர் திமுகவையும், ஸ்டாலினையும் பாராட்டி புகழ்ந்து பேசுகிறாரோ, அப்போதே அவர் அதிமுக பற்றி பேச தகுதியை இழந்து விடுகிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மையாக பார்க்கப்படுகிறது இதுதான் தொண்டர்கள் மக்களின் தீர்ப்பாகும்.

    2026 சட்டமன்றத் தேர்தலில் யார் தமிழகத்தில் முதலமைச்சராக வரவேண்டும் என்று தொண்டர்களின் நம்பிக்கை இழந்து, மக்களின் நம்பிக்கை இழந்து, மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு தனிநபர் கருத்தை யாரும் பொருப்படுத்த அவசியம் இல்லை.

    தமிழகத்தில் தன்னுடைய ஆளுமை தோல்வினாலும், தன்னுடைய தொடர் இயலாமையினாலும், தான் வகுக்கும் திட்டம் தோல்வியாலும், மக்களால் புறக்கணிக்கப்பட்டு அது பொறாமையாக மாறி இன்றைக்கு இன்றைக்கு ஒரு தனிநபர் அரசியல் காழ்புணர்ச்சியால், பொறாமையால், இயலாமையால் பேசி வருவதை யாரும் பொருப்படுத்தவில்லை.

    இன்றைக்கு அதிமுக தொண்டர்கள் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தெய்வங்களின் வழியில், திமுக உண்மை முகத்தை, குடும்ப வாரிசை, மன்னராட்சியை அழிந்து மீண்டும் ஜனநாயகத்தை மலர செய்யும் வகையில், மக்களாட்சி மலர வேண்டும் என்ற லட்சியத்தின் காரணமாக இன்றைக்கு எடப்பாடியார் இயக்கத்தை மீட்டு, தொண்டர்களுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக உள்ளார்.

    இன்றைக்கு அந்த லட்சியத்தை விலக்கி, பொதுநலன், மக்கள் நலம், தொண்டர் நலன் மறந்து, சுயநலத்தின் மொத்த உருவமாக தஞ்சையில் கருத்து கந்தசாமியாக (தினகரன்) கருத்து சொல்லி உள்ளார். தமிழகத்தில் யார் முதலமைச்சராக வரவேண்டும், வரக்கூடாது என்று தமிழ்நாட்டு மக்கள் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும். மக்கள் தீர்ப்பே, மகேஷ் தீர்ப்பு என்பதுதான் ஜனநாயகம்.

    மக்களால், தொண்டர்களால் நிராகரிக்கப்பட்ட தனிநபர் விருப்பம் மக்களிடம் பிரதிபலிக்காது இதுதான் கடந்த கால வரலாறு. இன்றைக்கு புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் புகழை நிலைநிறுத்த எடப்பாடியார் மக்கள் பணியாற்று வருகிறார் .

    குறிப்பாக கடந்த நான்கரை ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி செய்து குடிமராமத்து திட்டம், 7.5 சதவீத இட ஒதுக்கீடு, 11 மருத்துவக் கல்லூரிகள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள் தொடர்ந்து தொலைநோக்கு திட்டங்களை செய்தார்.

    ஆனால் இன்றைக்கு அதையெல்லாம் மறந்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கண்ணை மூடிக்கொண்டு கருத்து கந்தசாமி பேசிவரும் அவருக்கு சில வரலாறை நான் கூற கடமைப்பட்டுள்ளேன்.

    இன்றைக்கு வரலாற்று சாதனை மூலம் மக்களிடத்தில் மனதில் எடப்பாடியார் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றிவாகை சூடி, மீண்டும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் ஆட்சியை நிச்சயம் மலர செய்வார். அதற்கு உங்களுக்கு எந்த சந்தேகம் வேண்டாம், உங்களுக்கு கவலை வேண்டாம்.

    இன்றைக்கு அதிமுகவின் உண்மை விசுவாசிகள், விசுவாசத் தொண்டர்கள், மக்கள், வாக்காளர்கள் என அனைவரும் உங்கள் உண்மை முகத்தை புரிந்து கொண்டார்கள், எங்களின் எதிர்கால அரசியல் பாதையை நீங்கள் தீர்மானிக்க தேவையில்லை.

    இன்றைக்கு உங்களை புரிந்து கொண்டவர்கள் விலகிச் சென்றார்கள், புரிந்து கொண்டவர்கள் தற்போது விலகி சென்று கொண்டிருக்கிறார்கள், புரியாதவர்கள் புரிந்து இனிமேல் காலம் தாழ்த்தாமல் அவரை விட்டு விலகிச் செல்ல வேண்டும், பொதுநல மறந்து, சுயநலத்தோடு செல்பவர்கள் அரசியல் பாதையை வகுக்க முடியாது.

    அவரை நம்பிவர்களெல்லாம் திமுகவிற்கு வழி அனுப்பி வைத்தார் , முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், தங்கத்தமிழ் செல்வன் என்று பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது. மேலும் அவர் உண்மை முகத்தை தெரிந்து கொண்ட மகேந்திரன், உமாதேவன் உள்ளிட்ட பல பேர் இன்றைக்கு எடப்பாடியாரின் தலைமையை ஏற்றுள்ளனர்.

    தஞ்சையில் கருத்து கந்தசாமியாக, கண்ணை மூடிக்கொண்டு பேசிய நபருக்கு சில கேள்விகளை வைக்கின்றேன். உங்களை நம்பிய தொண்டர்களை நட்டாற்றில் விட்டுச் சென்றீர்கள்.

    உங்கள் நம்பி 18 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து போட்டார்கள் அவர்களை அரசியல் அனாதையாகி விட்டார்கள் அவர்கள் எதிர்காலம் என்ன பதில் சொல்லுங்கள்?

    அதேபோல உங்களது தளபதியாக இருந்தவர்கள் இன்றைக்கு ஸ்டாலினுக்கு தளபதியாக மாறிவிட்டார்கள் அதற்கு பதிலை சொல்லுங்கள்?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிலிகுரி - மிரிக் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
    • விபத்து நடந்த பகுதியின் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேற்குவங்கம் மாநிலம் டார்ஜிலிங் அருகே மிரிக் பகுதியில் கனமழை வெள்ளத்தால் பாலம் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.

    இந்த விபத்தால் சிலிகுரி - மிரிக் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    விபத்து நடந்த பகுதியின் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலம் இடிந்த விபத்தில் பலர் நீரில் அடித்துச்செல்லப்பட்டதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. 

    • வைகோவுக்கு நேற்று மாலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
    • ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் வைகோ அனுமதிக்கப்பட்டார்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு நேற்று மாலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சலால் அவதிப்பட்ட அவர் ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தேவையான பரிசோதனைகளை செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இன்று அல்லது நாளை ஆஸ்பத்திரியில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்.

    • 18 வயது வாலிபர் 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • மாமியாருக்கும் மருமகனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது

    ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கே.வி.பி.புரம் மண்டலத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 18 வயது வாலிபர்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் அதே பகுதியில் வசித்து வந்தனர் இவர்களுடன் கணவனை இழந்த சிறுமியின் 40 வயது தாயாரும் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் மாமியாருக்கும் மருமகனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது சிறுமி வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் தனிமையில் இருந்தனர்.

    இதனை அறிந்த சிறுமி தனது கணவர் மற்றும் தாயாரை கண்டித்தார் ஆனாலும் அவர்கள் கள்ளக்காதலை கைவிடவில்லை. மேலும் மாமியார் தனது மருமகனை திருமணம் செய்ய முடிவு செய்தார்.

    நேற்று முன்தினம் இரவு வீட்டிலேயே வாலிபர் தனது மாமியாருக்கு தாலி கட்ட முயன்றார். இதனை கண்ட அவருடைய மனைவி தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தார்.

    ஆத்திரமடைந்த அவரது தாயும் கணவரும் அவரை கடுமையாக தாக்கி கொலை செய்ய முயன்றனர்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து சிறுமியை மீட்டனர் . மேலும் மாமியார் மற்றும் மருமகனை சரமாரியாக தாக்கினார் அவர்கள் இருவரையும் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் இது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மத்திய சுகாதார அமைச்சகம் இந்த அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
    • அவசர கூட்டத்தில் இருமல் மருந்துகளின் பகுத்தறிவு பயன்பாடு மற்றும் மருந்துகளின் தரம் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படும்.

    புதுடெல்லி:

    ஆபத்தான ரசாயனம் கலந்த இருமல் மருந்தை உட்கொண்டதால் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் குழந்தைகள் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் இருமல் மருந்தால் குழந்தைகள் இறந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அவசர ஆலோசனை நடத்துகிறது. இன்று மாலை 4 மணிக்கு மத்திய சுகாதார அமைச்சகம் இந்த அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதன்மை செயலாளர்கள், சுகாதாரத்துறை செயலாளர்கள் மற்றும் மருந்து கட்டுப்பாட்டாளர்கள் கலந்து கொள்கிறார்கள். காணொலி வாயிலாக இந்த கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த அவசர கூட்டத்தில் இருமல் மருந்துகளின் பகுத்தறிவு பயன்பாடு மற்றும் மருந்துகளின் தரம் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படும்.

    • கடந்த 5 ஆண்டுகளில் ரூ.500 கோடியாக இருந்த வங்கதேச ஆடை இறக்குமதி ரூ.5,200 கோடியை தாண்டியது.
    • உள்நாட்டு சந்தைகளில் வங்கதேச ஆடைகள் கடும் போட்டியாக மாறின.

    ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் இந்தியாவுக்கு போட்டியாக மாறியிருந்த வங்கதேசம் கடந்த 2017ம் ஆண்டு முதல் உள்நாட்டு சந்தையிலும் போட்டியை உருவாக்கியது. ஜி.எஸ்.டி., அமலான பின், கட்டுப்பாடு தளர்ந்து படிப்படியாக வங்கதேச ஆடை இறக்குமதி அதிகரித்தது.

    முன்னணி பிராண்டடு நிறுவனங்கள், வங்க தேசத்தில் இருந்து ஆடைகளை உற்பத்தி செய்து நம் நாட்டில் விற்பனை செய்தன. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.500 கோடியாக இருந்த வங்கதேச ஆடை இறக்குமதி ரூ.5,200 கோடியை தாண்டியது. இதன் எதிரொலியாக உள்நாட்டு சந்தைகளில் வங்கதேச ஆடைகள் கடும் போட்டியாக மாறின.

    இதற்கிடையே வங்கதேசத்தில் உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டு நிலைமை தலைகீழாக மாறியது. இந்திய பொருட்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், அந்நாட்டின் தரைவழி இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதன் எதிரொலியாக அந்நாட்டில் இருந்து ஆயத்த ஆடை இறக்குமதி குறைந்தது.முன்னணி பிராண்டடு நிறுவனங்களும், வங்க தேசத்துடன் வர்த்தகம் செய்ய முடியாது என உணர்ந்து உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களுடன் கரம் கோர்த்தன. அதன்படி திருப்பூரில் இயங்கும் முன்னணி நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ், ஜோடியாக், வி.மார்ட் உள்ளிட்ட பிராண்டடு நிறுவனங்களின் ஆர்டர்கள் வரத்தொடங்கி உள்ளன.

    இது குறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சண்முக சுந்தரம் கூறுகையில், "உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி சீராக இயங்கி வருகிறது. பெரிய சவாலாக இருந்த வங்கதேச ஆடை இறக்குமதி கட்டுக்குள் வந்துவிட்டது. கடந்த 4 மாதங்களாக ஆடை இறக்குமதி குறைந்ததால், உள்நாட்டு சந்தைகளில் திருப்பூர் ஆடைகளின் தேவை அதிகரித்துள்ளது. வங்கதேசத்துக்கு ஆர்டர் கொடுத்து வந்த முன்னணி பிராண்டடு நிறுவனங்கள் நேரடியாக மீண்டும் திருப்பூருக்கே ஆர்டர் கொடுக்க துவங்கியுள்ளன என்றார்.

    • மிதுனம் சோதனைகள் சாதனைகளாக மாறும் வாரம்.
    • துலாம் அனைத்து விதமான தேவைகளும் நிறைவேறிடும் இன்பமான வாரம்.

    மேஷம்

    அதிகமாக உழைக்க வேண்டிய வாரம். ராசி அதிபதி செவ்வாய் 3,6-ம் அதிபதி புதனுடன் இணைந்து ராசியை பார்க்கிறார். தீபாவளிக்கு தேவையான ஆடை ஆபரணங்கள் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு வீடு மாற்றம் வேலை மாற்றம் நடக்கலாம். சிறு சிறு உடல் நல, மனநல பாதிப்புகள் வரலாம். கடன் வாங்குவது, ஜாமீன் போடுவதை தவிர்க்கவும்.புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வந்தாலும் சிந்தித்து முடிவு செய்ய வேண்டும். பங்குச் சந்தை ஆதாயம் குறையும். குரு பகவான் அதிசாரமாக கடக ராசிக்குள் நுழைகிறார். வீடு வாங்குவது, வீடு கட்டுவது சம்மந்தமான முயற்சிகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் தனித் தன்மையுடன் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலம். சனியின் வக்ர நிவர்த்திக்குப் பிறகு திருமணம் நடைபெறக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளது. முக்கிய காரியங்கள் நிறை வேற்றுவதில் இடையூறுகள், தடைகள் இழுபறிகள் வந்தாலும் தைரியமும், தன் நம்பிக்கையும் குறையாது. குழந்தை பேறு கிடைக்கும். ராஜா அலங்கார முருகன் வழிபாடு நிம்மதியை அதிகரிக்கும்.

    ரிஷபம்

    நீச்ச பங்க ராஜ யோகம் ஏற்படும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நீச்சம் அடைகிறார். புதன். சுக்கிரன் பரிவர்த்த னையில் இருப்பதால் சுக்கிரனுக்கு நீச்ச பங்க ராஜயோகம் கிடைக்கிறது.திட்டமிட்டபடி சுப காரி யங்கள் பிரமாண்டமாக நடந்து முடியும். தீபாவளி போனசில் அழகு ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாகும். காதல் திருமணம் நடக்கும். உயர்கல்வி மற்றும் திருமணத்திற்குத் தேவையான கடன், பொருள் உதவி கிடைக்கும். குலதெய்வ பிரார்த்தனை நிறைவேறும். வீடு, வாகனம், சொத்து போன்ற வற்றில் ஏற்பட்ட இழப்பு, விரயங்களை ஈடு செய்வீர்கள். வீட்டிலும் வேலை பார்க்கும் இடத்திலும் நிம்மதியான சூழல் நிலவும். தாய், தந்தையின் ஆரோக்கியம் மகிழ்சியைத் தரும். மனக்கசப்பில் பிரிந்து சென்ற உறவுகள் உங்களை புரிந்து மீண்டும் உறவை புதுப்பிப்பார்கள்.முறையான திட்டமிடுதல் நிரந்தர வெற்றியைக் குவிக்கும்.வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வழிபட பொருளாதார மேன்மை உண்டாகும்.

    மிதுனம்

    சோதனைகள் சாதனைகளாக மாறும் வாரம்.ராசி அதிபதி புதன் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்கிரனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார். இது நீச்சபங்க ராஜயோகத்தை ஏற்படுத்தும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். தான தர்மங்களில் ஆர்வங்கள் கூடும். பூர்வீகம் சார்ந்த இன்னல்கள் சீராகும்.விற்க முடியாமல் கிடந்த பூர்வீக சொத்துக்கள் விற்றுப் பண மாகும். தடைபட்ட சகோதர சகோதரி களின் திருமண முயற்சி வெற்றியாகும். குரு பகவான் அதிசாரமாக தன ஸ்தானத்திற்கு செல்வதால் ஜென்ம குருவால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். புதிய திட்டங்கள் மற்றும் எண்ணங்களால் தொழி லில் முன்னேற்றம், லாபம் உருவாகும். தொழிலுக்கு அரசின் ஆதரவு கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு வேலை முயற்சிகள் பலன்தரும்.அடகு நகைகளை மீட்கக்கூடிய வகையில் வருமானம் உயரும்.பெண்களுக்கு கணவர் மற்றும் புகுந்த வீட்டாரின் அன்பு மன சஞ்சலத்தைக் குறைக்கும்.தேவைகள் நிறைவேறும்.வீடு மற்றும் பூமி வாங்கும் எண்ணம் நிறைவேறும். வராக் கடனை வசூலிப்பதில் ஆர்வம் கூடும்.மீனாட்சி யம்மன் வழிபாட்டால் சாதகமான பலன்களை பெற முடியும்.

    கடகம்

    விரும்பிய புதிய மாற்றங்கள் உருவாகும் வாரம்.ஜென்ம குருவின் ஆதிக்கம் துவங்கப் போகிறது. குரு பகவான் அதிசாரமாக ராசிக்குள் நுழைந்து உச்சமடைய போகிறார். சுமார் 48 நாட்கள் புதிய மாற்றங்கள் உருவாகலாம்.புதியதாக சுய தொழில் துவங்குவதை விட உத்தியோகமே சிறப்பு. முதலீட்டாளர்கள் புதிய தொழில் ஒப்பந்தத்தில் கவனமாக செயல்பட வேண்டும். தொழில் கூட்டாளிகளிடம் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.புதிய தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள் என புதுப்புது மாற்றங்கள் நிகழும். தடைபட்ட வீடு கட்டும் பணி தொடரும். கணவன்-மனைவி ஒற்றுமை, திருமணம், சுப காரியங்கள் நடப்பது போன்ற நற்பலன்கள் நடக்கும். குடும்பத்தி னரின் ஒத்துழைப்பும் உடல் ஆரோக்கியமும் சிறக்கும். இந்த வாரம் தீபாவளிக்கு புதிய ஆடைகள் வாங்குவீர்கள். சிலருக்கு தாயார் மூலம் கணிசமான தொகை கிடைக்கும். 6.10.2025 அன்று காலை 12.45 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கடன் வாங்குவதையும், கடன் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். திங்கட்கி ழமை சிவ வழிபாடு செய்வதால் உயர்வான நிலையை அடைய முடியும்.

    சிம்மம்

    தெளிவான திட்டமிடுதலும் முயற்சியும் அவசியம். ராசி அதிபதி சூரியன் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரனுடன் சேர்ந்துள்ளார். தம்பதிகளின் அன்பு பரிமாற்றம் மன நிறைவாக இருக்கும். ஆரோக்கிய குறைபாடு அகன்று மருத்துவச் செலவு குறையும்.சிலர் நல்ல வசதியான வீட்டிற்கு இடமாற்றம் செய்யலாம். விரய ஸ்தானத்தில் குருபகவான் உச்சம் அடைவது சுபித்துச் சொல்லக்கூடிய பலன் அல்ல. கவனத்துடன் செயல்பட வேண்டிய காலம். வியாபாரத்தில் சிறு சறுக்கல் தோன்றுவது போல் இருந்தாலும் சமாளிக்க முடியும். திருமணத் தடை நீடிக்கும். தம்பதிகள் தொழில் நிமித்தமாக பிரிந்து வாழலாம். தம்பதிகளிடம் ஒற்றுமை உணர்வு மேலோங்கும். தந்தை-மகன் உறவு பலப்படும். வெளிநாட்டில் வாழும் பிள்ளைகளின் வருகை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். 6.10.2025 அன்று காைல 12.45 முதல் 8.10.2025 அன்று காைல 1.28 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு கை,கால், மூட்டு எலும்பு,நரம்பு, சுகர், பிரஷர் தொடர்பான பிரச்சனைகள் அதிகமாகும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் சகல சௌபாக்கிய மும் உண்டாகும்.

    கன்னி

    பொருளாதார மேன்மை உண்டாகும் வாரம்.ராசி அதிபதி புதன் சுக்கிரனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார்.மேலும் லாப ஸ்தானத்தில் குரு பகவான் உச்சமடைய போகிறார். இந்த அமைப்பு அபரிமிதமான சுப பலன்களை வழங்க உள்ள நல்ல நேரமாகும். தொழில், உத்தியோகத்தில் லாபம் சதம் அடிக்கும். புதிய தொழில் ஒப்பந்தம் தேடி வரும். தொழில் கூட்டாளிகளிடம் நிலவிய கருத்து வேற்றுமை மறைந்து ஒற்றுமை ஏற்படும். கைக்கு எட்டி வாய்க்கு எட்டாத நிலை மாறும். தடைபட்ட வாடகை வருமானம் வசூல் ஆகும். விவசாயி களுக்கும் எதிர்பாராத லாபம் உண்டு. வீடு,மனை வாங்க முன்பணம் கொடுப்பீர்கள். வாழ்க்கை துணைக்கு விரும்பிய உத்தியோக மாற்றம் தேடி வரும். திருமணப் பேச்சு வார்த்தை மன நிறைவு தரும்.இந்த வாரம் தீபாவளி போனஸ் கிடைக்கும்.உடல்நிலை சீராகும்.8.10.2025 அன்று காலை 1.28 முதல் 10.10.2025 அன்று காலை 1.23 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நிதானமற்ற அவரச முடிவுகளைத் தவிர்ப்பது அவசியம்.தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பதாலும் கேட்பதாலும் பொருளாதார மேன்மை உண்டாகும்.

    துலாம்

    அனைத்து விதமான தேவைகளும் நிறைவேறிடும் இன்பமான வாரம். ராசி அதிபதி சுக்கிரன் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ளார். ராசிக்கு பத்தாம் இடத்தில் குரு பகவான் உச்சம் பெற போகிறார். இது துலாம் ராசியி னருக்கு சகல ஐஸ்வர்யங்கள் சவுபாக்கியங்களையும் பெற்றுத் தரும் அமைப்பாகும். துலாம் ராசியினருக்கு தீபாவளி விற்பனை நல்ல லாபம் பெற்று தரும்.தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் உயர்வாக இருக்கும். போட்டி, பொறாமைகள் அகலும். நண்பருக்காக பொறுப்பேற்று வாங்கிக் கொடுத்த ஜாமீன் தொகை வந்து சேரும். விவாகரத்து வழக்கு தீர்ப்பு தள்ளிப்போகும். 4ம் அதிபதி சனி வக்ரமாக இருப்பதால் சொத்தில் ஏதேனும் வில்லங்கம் இருக்கிறதா என்பதை சரிபார்த்து விட்டு புதிய சொத்து வாங்க முன்பணம் கொடுக்கவும். உடல்நிலையில் பாதிப்புகள் குறையும். 10.10.2025 அன்று 1.23 காலை சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் அலைச்சல் மிகுந்த பயணங்களை தவிர்க்கவும். தினமும் கனகதாரா ஸ்தோத்திரம் கேட்பதால் அனைத்து விதமான தேவைகளும் நிறைவேறும்.

    விருச்சிகம்

    உழைப்பும் முயற்சியும் பலன் தரும் சாதகமான வாரம். 2, 5-ம் அதிபதி குரு அதிசாரமாக கடக ராசிக்கு சென்று உச்சம் பெறுகிறார்.வேலை இல்லாதவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.தொழில், உத்தியோக முன்னேற்றம் என அனைத்து விதமான நன்மைகளும் நடைபெறும். நம்பிக்கை யான தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். சிலர் மன நிம்மதிக்காக வெளியூர், வெளிநாடு சென்று வரலாம். மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்லலாம். நோய் பாதிப்புகள் அகலும். எதிரிகள் தொல்லை குறையும்.விருச்சிக ராசி வயோதிகர்களுக்கு பேரன், பேத்தி. யோகம் கிடைக்கும்.சகோதர சகோதரிகளின் ஆதரவு நிம்மதி தரும். குரு பாதக ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் பெரிய பாதகங்கள் ஏற்படாது என்பதை உறுதியாக கூறலாம். எனினும் புதிய முயற்சிகளில் கவனம் தேவை. பூர்வீகச் சொத்துக்கள் பணமாக மாறலாம்.பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்கவலை அகலும். பெண்கள் தங்க நகைகளை அத்தியா வசியமாக இருந்தால் மட்டும் புதுப்பிக்கவும். தினமும் லட்சுமி நரசிம்மர் வழிபாடு செய்வதன் மூலம் ஏற்றமான பலன்களை அடைய முடியும்.

    தனுசு

    புதிய முதலீடுகள் தவிர்க்க வேண்டிய காலம். ராசி அதிபதி குரு பகவான் அதிசாரமாக அஷ்டம ஸ்தானத்திற்கு சென்று உச்சம் பெறப்போகிறார். கடன், வம்பு, வழக்கு,நோய் தாக்கம், உத்தியோ கத்தில் இடையூறு, போட்டித் தேர்வுகள் போன்றவற்றில் ஏமாற்றங்கள் உருவாகலாம். விரயத்தை தவிர்க்க முடியாத நிலை நீடிக்கும்.வீடு கட்டப் போட்ட பட்ஜெட் திட்டமிடுதலை விட எகிறும். சிலருக்கு காது வலி, ஞாபக மறதி போன்ற அசவுகரியங்கள் தலை தூக்கும். சிலர் முக்தியை போதிக்கும் ஆன்மீக இயக்கம், சங்கங்களில் சேர்ந்து பயனடைவார்கள். 2ம் அதிபதி சனி வக்ரமாக இருப்பதால் சாத்தியமற்ற விசயத்திற்கு யாருக்கும் வாக்கு கொடுத்து வம்பில் மாட்டக் கூடாது. பேச்சை மூலதனமாகக் கொண்டு தொழில் செய்பவர்கள் நிதானமாக சிந்தித்து பேச வேண்டும். பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் நல்ல பொருள் வரவை பெற்றுத்தரும். தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது வெளிநாடு பயணம் செய்ய நேரும். வாரிசுகளின் திருமண முயற்சி வெற்றியாகும். செயற்கை கருத்தரிப் பிற்கான முயற்சியை சிறிது காலம் ஒத்தி வைக்க வும். தினமும் மாலையில் ஸ்ரீ சரபேஸ்வரரை வழிபட இன்னல்கள் விலகும்.

    மகரம்

    சிறிய முயற்சியில் பெரிய வெற்றி கிடைக்கும் வாரம். ராசிக்கு செவ்வாயின் நான்காம் பார்வை உள்ளது. குரு பகவான் அதிசாரமாக கடக ராசியில் சென்று உச்சமடைய போகிறார்.செவ்வாய் சாதகமான இடத்தில் சஞ்சரிப்பதால் பங்கு தாரருடன் இணைந்து தொழிலுக்கு சொந்தமான இடம் வாங்க ஏற்ற நேரம். புதிய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். பரம்பரை சொந்தத் தொழிலில் நீங்கள் பங்குதாராக இணையலாம். நீண்ட நாட்களாக விற்க முடியாத சொத்துக்கள் விற்கும்.அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் வரும். தீபாவளிக்கு தேவையான உடைகளை வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பொன் பொருள் சேரும்.சிலருக்கு தந்தையின் அரசு வேலை கிடைக்கும். பெண்கள் மாமனார், மாமியாரை அனுசரித்துச் செல்ல வேண்டும். திருமணம் நிச்சயமானவர்கள் போனில் தேவையற்ற விசயங்களை தவிர்க்கவும். வரவிற்கும் செலவிற்கும் சரியாக இருக்கும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு மதிப்பு, மரியாதை உயரும். தினமும் காலபைரவரை வழிபடுவதால் காலத்தால் ஏற்படக்கூடிய துன்பங்கள் விலகும்.

    கும்பம்

    விழிப்புடன் செயல்பட வேண்டிய காலம்.அடுத்து வரும் 48 நாட்களுக்கு ராசியில் பதிந்த குருவின் பார்வை விலகப் போகிறது.ராசியில் தனித்த ராகு நிற்பதால் சம்பந்தம் இல்லாத அறிமுகம் இல்லாத நபர்களால் ஏமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணப் பரிவர்த்தனையில் கவனம் தேவை.வரவிற்கு மீறிய செலவு இருக்கும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க உழைக்கவேண்டி வரும். கடன், எதிரி தொல்லை அதிகமாகும் என்பதால் புதிய முயற்சிகள் அதிக முதலீடு ஆகியவற்றில் திட்டமிட்டு செயல்பட வேண்டும். முக்கிய பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்க கூடாது. மூத்த சகோதரம், சித்தப்பாவால் வம்பு, வழக்கு, கடன் உண்டு. சகோதர சகோதரிகள் முன்னுக்கு பின் முரணாக பேசி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். உறவுகளிடம் வீண் விவாதங்களைத் தவிர்த்தல் நலம். வழக்கு விசாரணை தள்ளிப்போகும். சிலர் தொழில், வேலைக்காக பூர்வீகத்தை விட்டு வெளியூர், வெளிநாட்டிற்கு இடம் பெயரலாம்.சிறு உடல் உபாதைகள் அவ்வப்போது தோன்றும். ஸ்ரீ ராமரை பட்டாபிஷேக கோலத்தில் வழிபட எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

    மீனம்

    வெற்றி மேல் வெற்றி தேடிவரும் அற்புதமான வாரம். அடுத்த 48 நாட்களுக்கு ராசி அதிபதி குரு உச்சம் பெற்று ராசியில் உள்ள சனிபகவானை பார்க்க போகிறார். இது தர்மகர்மாதிபதி யோகம் ஆகும். இதனால் இழுபறியாக இருந்த காரியங்கள் கூட துரித வேகத்தில் நடந்து முடியும். கடன் தொல்லை கட்டுக்குள் இருக்கும். திட்டங்கள், எண்ணங்கள் செயலாக்கம் பெறும். எதற்கும் முடிவு காண முடியாமல் தவித்த நிலை மறையும். தடை தாமதங்கள் அகலும்.கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றமான பலன் உண்டு. வெளிநாட்டு தொடர்பு அல்லது வேற்று மதத்தினர் ஆதரவால் நல்ல வாய்ப்புகள் கிட்டும். திருமணம் பற்றிய நல்ல முடிவுகள் உங்கள் எண்ணம் போல் நிறைவேறும். குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். முன்னோர்களின் நல்லாசியும், குல தெய்வ அருளும் கிடைக்கும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு மதிப்பு, மரியாதை உயரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் சீராகும்.ஸ்ரீ வல்லப கணபதியை வழிபட வளமான வாழ்க்கை உண்டாகும்.

    ×